* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான், அதற்குப் பணிந்து போவதற்கல்ல.
* நன்மையிலும் தூய்மையிலும் வலிமை உள்ளது.
* நீ உன்னை நம்புவதற்கு முன் கடவுளை நம்ப முடியாது.
* கடவுளை விளக்குவது அரைத்ததையே அரைப்பது போன்றது. ஏனெனில் அவரை மட்டுமே நாம் அறிவோம்.
* மிருகத்தை மனிதனாகவும், மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம்.
* இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப் படுத்திக் கொள்வதற்கே நாம் இங்கு வந்திருக்கிறோம்.
* உண்மையை ஆயிரம் விதமாகக் கூறலாம், அவை ஒவ்வொன்றும் உண்மையே.
* முடிவற்ற சங்கிலியில் சில வளையங்களை விளக்க முடியுமானால், அதே முறையில் அனைத்தையும் விளக்க முடியும்.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
* எல்லோரிடமும் அன்பாயிரு. துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. பிறரது குற்றங்களைக் காணாதே.
* சுவைப்புலனை அதன் விருப்பப்படி விட்டால், மற்ற புலன்களும் கடிவாளமின்றி ஓடும்!
* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச் செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில் கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் அறியாமை மட்டுமே. இரண்டற்ற ஒன்றை உணர்வதால் இந்த அறியாமை விலகுகிறது.
* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது; மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
* நாத்திகன் கொடையாளியாக இருக்கலாம், ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகவாதி கொடுக்கும் பண்பு உடையவனாக இருந்தாக வேண்டும்.
* குரு ஆவதற்கென்று பிறந்தவர்களைத் தவிரப் பிறர் குரு ஆவதற்கு விரும்பி அழிந்து போகின்றனர்.
* மிருகத் தன்மை, மனிதத் தன்மை, கடவுள் தன்மை இவற்றின் கலவையே மனிதன்.
* பொருட்களில் மாற்றம் செய்வதால் அவை முன்னேறுவதில்லை, நாமே முன்னேறுகிறோம்.
* உண்மைக்காக நான் வாழ்கிறேன். உண்மை ஒருபோதும் பொய்யுடன் இசைந்து செல்ல முடியாது. உலகனைத்தும் என்னை எதிர்த்தாலும், இறுதியில் உண்மையே வெல்லும்.
* மகிழ்ச்சி தன் தலைமீது துயரக் கிரீடத்தை அணிந்தே மனிதனின் முன்னால் வருகிறது. மகிழ்ச்சியை வரவேற்பவன் துயரத்தையும் வரவேற்றேயாக வேண்டும்.
* விக்கிரகம் கடவுளே என்று கூறலாம். கடவுளே விக்கிரகம் என்று நினைக்கும் தவறைத் தவிர்க்க வேண்டும்.