* ஒரு பெண்ணை விபச்சாரி என்று குற்றம் சாட்டி, அதை நிலை நாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம். (அத்தியாயம் 8 செய்யுள் 225)
* ஒரு பெண், தான் பருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானேத் தேடிக்கொள்ளவும். (அத்தியாயம் 9 செய்யுள் 90)
* இளமையில் தந்தையாலும், பருவகாலத்தில் கணவனாலும், முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர். (அத்தியாயம் 9 செய்யுள் 3)
* எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது. (அத்தியாயம் 5 செய்யுள் 147)
* தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால், அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ள மாட்டார்கள். (அத்தியாயம் 2 செய்யுள் 213)
* புலன்களை அடக்கியவனாயினும், அறிவிலியாயினும், அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். (அத்தியாயம் 2 செய்யுள் 214)
* பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றேப் பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக. (அத்தியாயம்9, செய்யுள் 19)
* ஈன்று, புரந்து, விருந்தோம்பி, இல்லம் புரிதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக் கிடைக்கிறது. (அத்தியாயம் 9 செய்யுள் 27)
* வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும், அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும், தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும், வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம், படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க! (அத்தியாயம் 9 செய்யுள் 11)
* கணவன் சூதாடுகிறவனாயினும், குடிகாரனாக இருந்தாலும், பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். (அத்தியாயம் 9 செய்யுள் 78)
* இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக. (அத்தியாயம் 5 செய்யுள் 154)
* மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும், இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது. (அத்தியாயம் 5 செய்யுள் 156)