தன் குழந்தை மீதான தாயின் அன்புக்கு நிகராக இந்த உலகில் எதுவும் இல்லை.
- அகதா கிறிஸ்டி
ஒரு நாட்டின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்.
- மகாத்மா காந்தி
ஒரு மதத்தின் முழு நோக்கமும் அன்பு மற்றும் இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை எளிதாக்குவதாகும்.
- தலாய் லாமா
ஒருவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவராக இருக்கும்போது, அவரால் இரண்டு நாடுகள், இரண்டு நம்பிக்கைகள் அல்லது இரண்டு மதங்களுக்கு இடையே ஒரு கோட்டை வரைய முடியாது.
- மாதா அமிர்தானந்தமயி
கோபம் மற்றும் வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் ஆற்றல்களை, அன்பு மற்றும் இரக்கம் போன்ற எதிர் ஆற்றல்களை வளர்ப்பதன் மூலம் ஒருவரால் வெல்ல முடியும்.
- தலாய் லாமா
பெரும்பாலான மனிதர்களை விட, செல்லப்பிராணிகளுக்கு அதிக அன்பும் இரக்கமும் இருக்கிறது.
- ராபர்ட் வாக்னர்
நாம் ஏன் நம் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம், வெறுப்பு நம் ஆன்மாவை காயப்படுத்துகிறது மற்றும் ஆளுமையைச் சிதைக்கிறது.
- மார்ட்டின் லூதர் கிங்
நீங்கள் ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போதெல்லாம். அவரை அன்பால் வெல்லுங்கள்.
- மகாத்மா காந்தி
இருளை இருளால் விரட்ட முடியாது, ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
- மார்டின் லூதர் கிங்
நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்.
- அன்னை தெரேசா
நான் அன்போடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வெறுப்பு என்பது தாங்க முடியாத ஒரு சுமை.
- மார்டின் லூதர் கிங்
வெறுப்பு வெறுப்பை உருவாக்குகிறது, வன்முறை வன்முறையை உருவாக்குகிறது, கடினத்தன்மை அதிக கடினத்தன்மையை உருவாக்குகிறது. வெறுப்பு சக்திகளை நாம் அன்பின் சக்தியுடன் சந்திக்க வேண்டும்.
- மார்டின் லூதர் கிங்
எல்லாவற்றையும் விட மிகவும் சக்திவாய்ந்த விடயம் அன்பு என்பதை நிச்சயமாக நான் அறிந்துள்ளேன்.
- ஜே. கே. ரௌலிங்
சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையேப் போதுமானது.
- ஜாக்கி சான்
ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.
- மார்டின் லூதர் கிங்
மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும்.
- அன்னை தெரேசா
மூச்சை உள்இழுக்கும் போது, உங்களை நீங்களே நேசியுங்கள். மூச்சை வெளிவிடும் போது, எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
- தலாய் லாமா
நான் பெரிய விடயங்களைச் செய்யவில்லை. சிறிய விடயங்களை மிகுந்த அன்போடு செய்கிறேன்.
- அன்னை தெரேசா
உடல் நோய்களை நாம் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும், ஆனால் தனிமை, விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றிற்கான ஒரே சிகிச்சை அன்பு மட்டுமே. ஒரு துண்டு ரொட்டிக்காக இறக்கும் பலர் இந்த உலகில் உள்ளனர், ஆனால் ஒரு சிறு அன்புக்காக இன்னும் அதிகமானோர் இறக்கின்றனர்.
- அன்னை தெரேசா
மனிதர்களை மதிப்பிட்டுக் கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது.
- அன்னை தெரேசா
அனைவரையும் நேசியுங்கள, ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
அன்பும் இரக்கமுமே தேவைகள், ஆடம்பரங்கள் அல்ல. அவை இன்றி மனிதகுலம் வாழாது.
- தலாய் லாமா
நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள்.
- கெளதம புத்தர்
எங்கே அன்பு ஆட்சி செய்கிறதோ, அங்கே சட்டங்கள் தேவையில்லை.
- பிளேட்டோ
அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி. மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.
- ஓஷோ
அதிகமாக நேசித்தால் நீங்கள் காயப்படக்கூடும், ஆனால் குறைவாக நேசித்தால் நீங்கள் துன்பத்தில் வாழ்வீர்கள்.
- நெப்போலியன் ஹில்
செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது மற்றும் அன்பு இல்லாத செயல் பொருத்தமற்றது.
- தீபக் சோப்ரா
அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே, மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும்.
- தலாய் லாமா
ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்துச் சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்தும் விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு.
- சோஃபோக்கிள்ஸ்
அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது.
- அன்னை தெரேசா
எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.
- மகாத்மா காந்தி
நான் மிகவும் சுதந்திரமானவள். என்னால் என்னை கவனித்துக் கொள்ள முடியும் ஆனால் எனக்கு இன்னும் நிறைய அன்பும் அக்கறையும் வேண்டும்.
- ஸ்கார்லெட் ஜோஹன்சன்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.