உலகத்தைக் கெடுப்பது யார்?
இதயத்தை சுத்தப்படுத்தி விட்டு இறைவனைக் கூப்பிடு. நிச்சயம் வருவார்.
- பைபிள்
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.
- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல்.
- டெஸ்கார்டஸ்
இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாகத் தேடிக் கொண்டதுதான்.
- யாரோ
தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
- புத்தர்
இந்த உலகத்தைக் கெடுப்பது கெட்டவர்கள் அல்ல. கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
- மாவீரன் நெப்போலியன்
நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது. மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
- சாக்ரடீஸ்
இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
- கன்பூசியஸ்
உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி.
- அன்னை தெரசா
நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
- மிக்கேல் லேர்மொண்டஸ்
ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. ஆனால் நீ...?
- ரஸ்கின்
ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
- எட்மன்ட் பார்க்
முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
- ஜார்ஜ் பெர்னாட்ஷா
ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். யாரும் கீழ்படிவதற்குத் தயாராகயில்லை. முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
- சுவாமி விவேகானந்தர்
நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
- மகாத்மா காந்தி
ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.
- வோயாஸ்
நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
- கவிஞர் ஹோமர்
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது.
- கவிஞர் கண்ணதாசன்
வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைப்பதில்லை. தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை. போராடு...!
- கவிஞர் சுகி
வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
- ஹென்றி டேவிட் தேரோ
அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
- கன்பூசியஸ்
உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
- டாக்டஸ்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.