* சட்டம் மதிப்புக்குரியது. காரணம் அது சட்டம் என்பதால் அல்ல, அதில் நியாயம் இருக்கிறது என்பதால்.
* சுய மரியாதைதான் மதத்திற்கு அடுத்தபடியாக பாவங்களைத் தடுக்கப் பயன்படும் கடிவாளமாகத் திகழ்கிறது.
* பழி வாங்குவதில் கருத்துள்ளவன், பிறர் தந்த புண்ணை ஆற விடுவதில்லை.
* மனிதனின் இயல்பு மூலிகையாகவும் வளரலாம், களைகளாகவும் வளரலாம். உரிய காலத்தில் மூலிகைக்கு நீர் வார்த்து களையை அழிக்க வேண்டும்.
* நான்கு பொருள்களில் முதுமை சிறந்தது. எரிப்பதற்கு பழைய மரம்; குடிப்பதற்கு பழைய மது; நம்புவதற்கு பழைய நண்பர்கள்; படிப்பதற்கு பழைய நூலாசிரியர்கள்.
* ஒருவனின் சாதாரண செலவுகள், அவன் வருவாயில் பாதி அளவில் தான் இருக்க வேண்டும்.
* சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
* பெண்ணில்லாத வீட்டிற்கும், வீட்டிலில்லாத பெண்ணிற்கும் மதிப்பில்லை.
* அதிகாரத்தை நாடி, சுதந்திரத்தைப் பறிகொடுப்பது விபரீத ஆசை.
* நான் மனிதர்களைத் தான் படித்துள்ளேன்; புத்தகங்களை அல்ல.
* அதிர்ஷ்டம் போய்விட்டால், உன் கைத்தடியேப் பாம்பாகும்.
* அழகின் சிறந்த பகுதி என்பது எந்தச் சித்திரமும் வெளிப்படுத்த முடியாத ஒன்று.
* நாம் இறக்கும் வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை.
* அன்பு ஆன்மாவின் பெருந்தன்மை. அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு.
* கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும்.
* குடும்பத்தின் இலக்கியத்தைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரமிருந்தால், நான் இராஜ்யத்தின் நன்மையையும், சமயத்தில் நன்மையையும் பாதுகாக்க முடியும்.
* தீயோன் ஒருவன் துறந்த ஞானி போல நடிக்கும் பொழுது மேலும் மோசமாகிறான்.
* குடிவெறியைப் போல், எல்லாப் படைகளும் சேர்ந்து மனித சங்கத்தினருள் அத்தனை பேர்களை அழித்ததில்லை; அத்தனைச் சொத்துகளைப் பாழாக்கியதில்லை.
* நமக்குள்ளே இயங்கும் தெய்வத்தன்மை இல்லாவிட்டால், மனித சமூகத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்?
* வில்லை அதிகமாக வளைத்தால் ஒடிந்துவிடும்; மனத்தை வளைக்காமலே விட்டிருந்தால் அதுவும் ஒடிந்துவிடும்.
* தத்துவ ஞானத்தை மேலெழுந்தால் போலக் கற்றால், அது ஐயங்களை எழுப்பும் தீர்க்கமாக ஆராய்ந்தால் ஐயங்களை நீக்கும்.
* சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை.
* தக்க சமயத்தைத் தேடிக்கொள்வது நேரத்தைக் காத்துக் கொள்வதாகும்.
* பணம் உரத்தைப் போன்றது. அதை நன்றாகச் சிதறுவதைத் தவிர அதனால் வேறு பயனில்லை.
* புகழ் நெருப்பைப் போன்றது. அதை மூட்டிவிட்டால் பிறகு காப்பது எளிது. ஆனால், அதை மூட்டுவது கடினம்.
* மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம்.