கடன் குறித்த உலகப் பழமொழிகள்
கடன் வாங்குதல் வறுமையின் முதற் குழந்தை.
- அரேபியா
உண்டதும் குடித்ததுமே லாபம், மிஞ்சியதெல்லாம் கடனுக்குப் போய்விடும்.
- இந்தியா
கண்ணிர் விடுவதால், கடன் அடையாது.
- ஜப்பான்
பயணம் சென்றால்தான் தீரும், கடன் அடைத்தால்தான் தீரும்.
- துருக்கி
அதிகமாகக் கடன் வாங்குபவன் அதிகமாகயிழப்பவன்.
- பிரான்ஸ்
உனக்கு உபதேசம் செய்பவர்கள், உன் கடன்களைச் செலுத்த மாட்டார்கள்.
- பிரான்ஸ்
கடன் அடைப்பவன் தன் முதலைப் பெருக்குகிறான்.
- ஜெர்மனி
கடன்களும் பாவங்களும் நாம் நினைப்பதை விட அதிகமாகவேயிருக்கும்.
- இங்கிலாந்து
கடன் கேட்க வருபவனை யாரும் வரவேற்க மாட்டார்.
- அயர்லந்து
கவலை நூறு வண்டி இருந்தாலும், அது ஒரு கடனையும் அடைக்காது.
- இங்கிலாந்து
கடன் கொடுக்காதீர்கள்; வாடிக்கையாளர்கள் வராமல் ஒழிந்து போவார்கள்.
- சீனா
நாட்பட்ட கடன் தீர்ந்து போன மாதிரிதான்.
- வேல்ஸ்
கடன்களோடு வாழ்வதை விட இரவில் சாப்பிடாமல் படுப்பது நலம்.
- லெக்
கடனுக்கு வாங்கியதெல்லாம் மலிவாகவேத் தெரிகிறது.
- லெக்
கடன் பலரை மேலேத் தூக்கிவிடும்; பலரைக் கீழே அமுக்கியும் விடும்.
- டென்மார்க்
கொடுக்க மாட்டாத கடன்காரர்களிடம் கருகிய கருவாடுதான் கிடைக்கும்.
- டென்மார்க்
கடனைத் திருப்பிக் கொடுத்தவன் மறுபடி வாங்க முடியும்.
- ஹாலநது
கடன்காரன் பல முறை பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.
- ஹங்கேரி
கடனுக்கு அழகு திருப்பிக் கொடுத்தல்.
- ரஷ்யா
காலையில் அதிக நேரம் உறங்குவோன் ஒரு கடன்காரனிடம் தலையணையை இரவல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். (கவலையால் உறங்காத கடன்காரனின் தலையணை கூட உறக்கத்தைத் தொலைத்து விடும்.)
- ஸ்பெயின்
கடன்கள் குழந்தை மாதிரி; குறைவான கடன்கள் அதிகக் கூச்சலிடும்.
- ஸ்பெயின்
கடன்கள் நம்மை அடிமைகளாக்கும்.
- ஆப்பிரிக்கா
நாயிடம் கடன் பட்டிருந்தால், அதையும் "ஐயா” என்று அழைக்க வேண்டும்.
- ஆப்பிரிக்கா
கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதை விட, கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம்.
- தமிழ்நாடு
கடன்காரர்களை விடக் கடன் கொடுத்தவர்களுக்கு நினைவு அதிகம்.
- ஸ்பெயின்
நோயாளிக்காவது தூக்கம் உண்டு; கடன்காரனுக்கு அதுவுமில்லை.
- ஸ்பெயின்
கடன் வாங்குதல் பிச்சையெடுத்தலை விட அதிக உயர்வில்லை.
- ஜெர்மனி
கடனில்லாதவனே சீமான்.
- பிரான்ஸ்
கடன்களை அடைப்பவன் தன் செல்வத்தைப் பெருக்குகிறான்.
- பிரான்ஸ்
கண்ணிரால் கடன்களை அடைக்க முடியாது.
- யூதர்
சட்டென்று கடன் வாங்குவோன், சட்டென்று பொய்யும் பேசுவான்.
- ஜெர்மனி
கடன் வாங்கி விருந்து வைத்து ஆண்டியாக வேண்டாம்.
- கிரீஸ்
பரம ஏழைக்குக் கடனே இருக்காது.
- லத்தீன்
கடன்படுதலே முதலாவது தீமை.
- இங்கிலாந்து
ஊக்கம் கடன்களை அடைக்கும்; ஏக்கம் அவைகளை அதிகமாக்கும்.
- இங்கிலாந்து
ஏழையின் கடன் ஊருக்கெல்லாம் தெரியும்.
- இங்கிலாந்து
நின்று வாங்கிக் கொண்டு போன கடனை நாம் பணிந்துதான் வசூலிக்க வேண்டும்!
- சீனா
செத்தவனுக்குக் கடனெல்லாம் தீரும்.
- இங்கிலாந்து
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.