மனத்திருப்தி
ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய்.
- ஆவ்பரி
மனம் கொண்டது மாளிகை, நரகத்தைச் சொர்க்கமாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.
- மில்டன்
விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன்.
- ஷோபனார்
உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும், தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.
- ஜான்சன்
வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பரிசாகவேயிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும்.
- கதே
பெற்றது சிறிதேனும் திருப்தியுற முடியாதவன் முடிவிலாத் தண்டனை அனுபவிப்பவனாவான்.
- காரிக்
அதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே.
- பாயில்
விரும்புவதைப் பெற முடியாதாகையால் பெற முடிவதை விரும்புவோமாக.
- ஸ்பானிஷ் பழமொழி
ஈயே! போ, உனக்கேன் துன்பம் இழைக்க வேண்டும்? இருவர்க்கும் உலகில் இடம் உளதே.
- ஸ்டோன்
அனுபவித்துத் தீரவேண்டியதற்கு எதிராக வாதமிட்டுப் பயனில்லை. வாடைக் காற்றுக்கு ஏற்ற வாதம் இறுகப் போர்த்திக் கொள்வது ஒன்றே.
- லவல்
திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.
- ஆங்கிலப் பழமொழி
எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர்பாராதவனேப் பாக்கியசாலி.
- போப்
வறுமையேயாயினும் மனத்தில் திருப்தி உண்டேல் அதுவும் போதிய செல்வம் உடைமையே ஆகும்.
- ஷேக்ஸ்பியர்
ஒன்றுமில்லாமை எப்பொழுதும் சுகம், சில சமயங்களில் சந்தோஷமும் கூட. வறுமையுற்றாலும் திருப்தியுள்ளவனே பொறாமைப்படத் தகுந்தவன்.
- பிஷப் ஹால்
அதிர்ஷ்டம் தராததையெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.
- கோல்ட்ஸ்மித்
குதூகலமும் திருப்தியும் சிறந்த அழகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை.
- டிக்கன்ஸ்
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து, கரிசூழ்ந்தமங்கலம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.