* இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றைக் கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களைச் சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
* இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
* இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாகச் செயல்பட முடியாதவர்கள்.
* இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளைப் பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.