மனைவி குறித்து உலக நாடுகள்
இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி.
- இந்தியா
மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பாயிருப்பவை.
- ஜப்பான்
அழகில்லாத மனைவியரும், அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.
- சீனா
மனிதன், தன் மனைவியைத் தவிர, மற்ற எதைப் பற்றிப் பேசினாலும், பொறுத்துக் கொண்டிருப்பான்.
- பாரசீகம்
ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதேயில்லை.
- பிரான்ஸ்
வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை.
- போலந்து
உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள், வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள்.
- போஸ்னியா
ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள்.
- வேல்ஸ்
என் முதல் மனைவி மனைவியாயிருந்தாள்; இரண்டாமவள் என் எசமானியாயிருந்தாள்; மூன்றாமவளை நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன்.
- பல்கேரியா
குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள்.
- எஸ்டோனியா
உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும்.
- எஸ்டோனியா
அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம்.
- எஸ்டோனியா
ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள்; அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன்.
- பின்லந்து
மனைவியர் நல்லவராயிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார்.
- ஜியார்ஜியா
அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும்.
- லத்தீன்
மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை.
- ருமேனியா
சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு நடக்கலாம்.
- செர்பியா
ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான்.
- ஸ்பெயின்
உன் மனைவியிடம் ஆலோசனை கேள்; ஆனால், அவள் சொல்வதற்கு மாறாகச் செய்.
- ஆப்பிரிகா
புதிதாகக் கலியாணமானவனே தன் மனேவியிடம் செய்திகள் கூறுவான்.
- இங்கிலாந்து
தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்து போகும் பயிருக்குச் சமானம்.
- ஜப்பான்
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து, கரிசூழ்ந்தமங்கலம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.