குற்றம் காண்பது குறித்து அறிஞர்கள்
தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம்.
- தேல்ஸ்
தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான்.
- பென் ஜாண்ஸன்
பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம்.
- ஸிஸரோ
பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம். நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம்.
- ஸெனிக்கா
ஒருவனிடம் குறை காண்பது கடவுளிடம் குறை கண்டதாகும். கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்?
- பால் ரிச்சர்ட்
நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும்.
- ப்ரெளண்
எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க. அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு.
- ஆவ்பரி
பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும்.
- கதே
யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.
- எபிக்டெட்டஸ்
அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் "கோழை" என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.
- பெடிட்ஸென்
ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.
- டெனிஸன்
குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும்.
- பால் ரிச்சர்ட்
உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு.
- பப்ளியஸ் ஸைரஸ்
உபகாரத்தை விட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும்.
- ஆவ்பரி
என்னைப் பற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான்.
- பால் ரிச்சர்ட்
கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது.
- ஆங்கிலப் பழமொழி
ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான்.
- வாட்ஸ்
குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.
- லெய்ட்டன்
சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.
- கோல்ட்ஸ்மித்
குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம்.
- லா புரூயர்
தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன் தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை.
- ஹாட்ஜஸன்
பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும்.
- அடிஸன்
குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர்.
- அடிஸன்
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து, கரிசூழ்ந்தமங்கலம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.