* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது.
* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது.
* மற்ற நாடுகளில் மக்களை ஒன்றுபடுத்தவேக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறுவேறாகப் பிரிக்கவே கடவுள், மதம் இருக்கின்றன.
* சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை.
* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்கக் கூடாது.
* மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான். அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.
* ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.
* முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு தீப்பிடிக்கச் சற்று தாமதமாகும்.
* ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்.
* மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.
* ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றேக் கருதுகிறேன்.
* எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும் என்பது போலச் சிந்தனை இருந்தால்தான் உண்மை விளங்க முடியும்.
* ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.
* துறவிகள் மோட்சத்திற்குப் போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதில்லை.
* முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு... ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
* ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
* நாத்திகம் என்றால் தன் அறிவு கொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்.
* சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.
* தண்டனை என்பது குற்றவாளிக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டுமேத் தவிர, கண்டிப்பாய் சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.
* தேசாபிமானம் பாஷாபிமானத்தை விட உயர்ந்தது மனிதாபிமானம்.
* மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
* ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல,.புரட்சி செய்ய.
* நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய குணம். செயல் செய்தவர் எதிர்பார்க்கக் கூடாது.
* அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையேக் கடவுள்.
* நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.
* அறிவுக்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப்பற்றி பேசு.
*ஆரியமே! நீ என்னை முழ்கடிக்க முயற்சிக்கும் பேரெல்லாம் ஆழிப்பேரலையாய் உயர்ந்து வருவேன்.
* கல்வி அறிவும் ,சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமேத் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!
* உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர, என்னைப் பின்பற்று, உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல. .நீ நீயாகவே இரு.!
* முற்போக்கு அறிவும், அக்கறையும் வளர வளர, புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
* அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகிறான்.
* மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வதுதான்.
* மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும், சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால், அவனே வாழ்வில் பெரிய மனிதனாகிறான்.
* மனசாட்சி என்று சொல்லுவதே அகிம்சை என்பதைப் போல கோழைகளுடைய ஆயுதமாகிவிட்டது.
* ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமைய வேண்டும்.
* மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை.
* எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்தை எடுத்துச் சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயொக்கியத்தனம்.
* மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின் போது அடையும் புகழ்தான்.
* மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும்.
* சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்.
* ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானேச் சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே.
* நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது.
* என் கருத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் கருத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.
* நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.
* சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.
* பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்.
* எந்த மனிதனும் எனக்கு கீழானவன் இல்லை. அதேபோல் எவனும் எனக்கு மேலானவனும் இல்லை.
* கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மட்டும் என்று நினைக்கக் கூடாது.
* முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.
* மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.
* பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து.
* பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்.
* எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டிததில்லை. எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்.