* நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது.
* பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி.
* பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல்.
* மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம்.
* இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை.
* உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள்.
* தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான்.
* நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்.
* முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும்.
* வைத்தியர்களை விட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும்.
* நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும் மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும்.
* மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட.
* குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.
* அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்றாக உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள சிறு - மனைவி மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும்.
* இதயம் எங்கு தங்கியுளதோ அதுவே வீடு.
* கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம்.
* வெளியே கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும், வீட்டிலேயிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல்.
* வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம்.
* அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.
* இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின் மீது படுத்திருப்பாய்.
* வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும்.
* இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது.
* வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும்.
* கூனனுக்குத் தன் கூனல் தெரியாது, பக்கத்திலிருப்பவன் கூனலையே பார்ப்பான்.
* திகைத்து நிற்பவனை விட கால் ஊனமுற்றவன் விரைவாக வந்து விடுவான்.
* தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும்.
* ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.
* பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும்.
* ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்குக் கவலையே இல்லை.
* நல்ல கணவனானால், மனைவியும் நல்லவளாயிருப்பாள்.
* செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமாக இருப்பார்கள்.
* கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம்.
* கல்லறையுள் அரசன் யார்? ஆண்டி யார்?
* ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது.
* எல்லா இடங்களிலும் கண்களின் மொழி ஒன்று தான்.
* காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.
* உறவினரைக் கடவுளேக் கொடுத்து விடுகிறார், நண்பர்கன மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம்.
* ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன்.
* ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான்.
* குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை, நாவுகள் நீளமானவை.
* குழந்தையில்லாதவனுக்கு அன்பு என்ன என்று தெரியாது.
* குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
* இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம்.
* ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.
* நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான்.
* வரும்போதுநோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும்.
* பெண்களுக்கும், குருமார்களுக்கும், கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது.
* கல்யாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன், யாரையோ ஏமாற்றப் போகிறான், அல்லது தான் ஏமாறுவான்.
* வாழ்வில் நன்கு வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழமாட்டான்.
* தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்பவனுடைய நோயாளி மூடன்.
* வைத்தியர்கள் கலந்து ஆலோசிப்பதற்குள், நோயாளி இறந்து விடுகிறான்.
* தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன்.
* அழகிய மனைவியை உடையவனுக்கு இரண்டு கண்களுக்கு மேல் தேவை.
* வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும்.
* வாழ்க்கை வாழ்வதிவதில்லை, நம் விருப்பத்திலிருக்கிறது.
* எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.
* முறையில்லாத வாடகைக்காரனை விட, காலி வீடே மேலானது.
* வீட்டைப் பார்த்தே உடையவனை அறிந்து கொள்ளலாம்.