இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தமது கடிதங்களில் சுவாமி விவேகானந்தரே கூறி இருக்கிறார். அவற்றிலிருந்து ஒரு சில கருத்துகள்:
இளைஞன் என்பவன்;
1. தன்னம்பிக்கை உடையவன், அதன் நிறைவாய் தெய்வ நம்பிக்கை வாய்க்கப்பெற்றவன்
2. சுயநலமற்றவன்
3. பயமற்றவன்
4. இறைவனின் கையில் கருவியாய் உள்ளவன்
5. சேவை செய்ய தன்னைத் தயார் நிலையில் வைத்திருப்பவன்
6. இரும்பை ஒத்ததசைகளும், எஃகை ஒத்த நரம்புகளும் கொண்டவன்
7. ஏழைகளிடம் இரக்கமுள்ளவன்
8. பரந்த இதயமும் ஆழ்ந்த அறிவும் வலுவான கைகளும் கொண்டவன்
9. சொல்லும் செயலும் ஒன்றாகக் கொண்டவன்
10. அன்பே உருவானவன்
11. ஒழுக்கமும் நேர்மையும் அவனுக்கு உயிர்
12. பெயர், புகழுக்கு மயங்க மாட்டான்
13. க்ஷத்திரிய வீர்யமும், பிராமண தேஜஸும் கொண்டவன்
14. எப்போதும் மன அமைதி உடையவன்
15. கடமையைச் சேவையாக, வழிபாடாகச் செய்பவன்
16. இந்தியாவின் பாரம்பரியச் சிறப்பு உணர்ந்தவன்; மேல்நாட்டு அறிவியல், தொழில்நுட்பத் திறனும் உடையவன்.
இவை போன்ற பண்புகள் இல்லாமலும், ஆன்மிகப் பண்பாடு இல்லாமலும் சீர்திருத்தம் பற்றி யாராவது வேகமாகப் பேசினால், சுவாமிஜி அவர்களை ‘மீசை முளைத்த சிறுவர்கள்' என்று சாடுகிறார்.