* உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாகத் தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் வாழ முயலுங்கள்!
* உங்கள் வாழ்க்கை எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைச் சரியாக நீங்கள் தீர்மானித்து விட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
* உங்களின் மேல் உங்கள் மனதிற்கு இருக்கும் அன்பும் காதலும் புவியின் மாந்தர்கள், மற்ற விஷயங்களின் மீதும் ஏற்பட வேண்டும்; அது நிகழ்ந்தால், இந்தப் புவியின் அழகை உங்களால் முழுமையாக உணர முடியும்; கடவுள் படிப்பின் அற்புதத்தை அறிய முடியும். எனவே, எல்லோரையும் எல்லாவற்றையும் நேசியுங்கள்.
* நீங்கள் எதை வேண்டுமானாலும் மறைத்து விட முடியும்; ஆனால், உண்மையை மறைப்பது என்பது முடியாத காரியம். உண்மை என்பது சூரிய சந்திரர்களைப் போன்றது; அழிவில்லாதது, மறைக்க முடியாதது. வாழ்வில் உண்மையை கடைப்பிடிக்க முயலுங்கள், உண்மையாக இருக்க முயற்சியுங்கள்!
* உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தால், நீங்கள் வாழ்வில் உயரத்தை அடைவதோடு, நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.
* தவறு செய்ப்பவர்களை மன்னித்து ஏற்று வாழ்ந்து பாருங்கள், உங்கள் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.
* வாழ்க்கையில் பந்தயங்களில் அலல்து போட்டிகளில் ஏற்படும் தோல்வி நிஜமானதல்ல; உங்களிடம் உண்மையாக அன்பு செலுத்தும் நபர்களிடம் பொய்யாக நடிப்பதுதான் உண்மையான தோல்வி. உங்கள் வாழ்வில் உண்மையான தோல்வி ஏற்பட நீங்களேக் காரணமாகி விடாதீர்கள்.
* சாதாரண விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், அசாதாரண விஷயத்தை உங்களால் மட்டுமேச் செய்ய முடியும் என்று எண்ணிச் செயல்படுங்கள்!
* மனிதன் நல்லவனாக அறியப்பட, அவன் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவனாக அல்ல, நன்கு செயல்படுபவனாக இருத்தல் அவசியம்.
* பெருந்தன்மையான மனம், அன்பான பேச்சு, சேவை செய்யும் குணம் இந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருந்து விட்டால், நீங்கள் வாழ்க்கையில் போற்றத்தக்க மனிதனாக வாழ்வதை யாராலும் மாற்ற இயலாது.
* எதிர்காலம் குறித்தப் பயங்களை தூக்கி எறிந்துவிட்டு, வாழ்க்கையை அதன் போக்கில், அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்து பாருங்கள், வாழ்வின் அழகான மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும்.
* உனக்கு நீயே துணை என்று உணர்! உன்னால் எதையும் செய்ய முடியும்.
* உன் பணியில் உயர்வை, உன்னுடைய திறன் மற்றும் தகுதியால் பெறு.
* உன் மனதில் என்ன நினைக்கிறாயோ, என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே நீ மாறுகிறாய் என்பது உண்மை.
* தன்னைத் தானேக் கட்டுப்படுத்தி வாழ்ந்து காட்டி, வாழ்வில் வெற்றி அடைவதுதான் உண்மையான வீரம்.
* எவ்வளவு பேசுகிறோம் என்பது முக்கியமல்ல; என்ன பேசுகிறோம் என்பதுதான் முக்கியம்.
* உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான், உள்ளமும் எண்ணங்களும் ஆரோக்கியமானதாக வெளிப்பட்டு, வாழ்வில் வெற்றியடைய முடியும்.
* வாழ்வில் அறிவையும் பொருளையும் மற்றவருடன் பகிர்ந்து மேம்பட்ட நபராக வாழ்ந்து மற்றவரை மேம்படுத்துங்கள்.
* கடந்த காலத்தில் எண்ணியதை நினைத்துத் தொலைந்து போகாமல், எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்ற கனவில் உழலாமல், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி, அதில் வாழ முயற்சியுங்கள்.