அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை - வேலூர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து 6-12-2024 அன்று, ‘தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வியலும்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தியது.
இக்கருத்தரங்கத்திற்கு வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்வு செய்யப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுக் கோவை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வுக்கோவையினைப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் சென்று, 2024 - கட்டுரைத் தொகுப்புகள் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும், ‘தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வியலும் (கருத்தரங்க ஆய்வுக்கோவை)’ எனும் பெயரிலோ அல்லது அதன் மேலிருக்கும் நூலின் அட்டைப்படத்திலோச் சொடுக்கி, அங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.