துணை ஆசிரியர் (கதை, கவிதை உள்ளிட்ட பிற பகுதிகள்)

எஸ். செந்தில்குமார்
தேனி மாவட்டம், கூடலூரிலுள்ள என்.எஸ்.கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் எஸ். செந்தில்குமார் வரலாறு பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A), ஓவியத்தில் உயர்நிலைச் சான்றிதழ் மற்றும் ஓவிய ஆசிரியருக்கான சான்றிதழ் (TTC) போன்றவைகளைப் பெற்றவர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான துணுக்குகள், சிரிப்புகள், கவிதைகள் எழுதி வந்தவர். தற்போது எழுத்துப்பணிகளில் ஆர்வம் காட்டாவிடினும், முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|