சட்ட ஆலோசகர்

எஸ். இளங்கோவன்
மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் எஸ். இளங்கோவன் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A), சட்டம் பாடத்தில் இளநிலைப் பட்டம் (B.L) பெற்றவர். மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றியவர். ‘ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை’ எனும் அமைப்பை நிறுவி, அதன் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். மூன்று குறும்படங்களை எழுதி இயக்கியிருக்கிறார். முத்துக்கமலம் இணைய இதழின் சட்ட ஆலோசகராக இருந்து வருவதுடன் முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|