சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

முனைவர் த. கண்ணன்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடித்துறையில் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பணியாற்றி வரும் இவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தமிழ் மொழிப் பாடத்தில் எம்.ஏ, எம்.பில்., மற்றும் முனைவர் (Ph.D) பட்டங்களையும், மொழியியல் துறையில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றிருக்கிறார். 35 கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 34 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார். 7 கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். ஏழு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 4 மாணவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கின்றனர். இவர் திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய போது, ‘தமிழ் சிந்தனை மரபுகள்’ எனும் தலைப்பிலான ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை முத்துக்கமலம் இணைய இதழுடன் இணைந்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் த. கண்ணன் (முழு சுயவிவரக் கோப்பு)
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|