சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

முனைவர் மா. பத்மப்ரியா
சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் பிஎஸ்சி, (வேதியியல்) பட்டம், பி.லிட் (தமிழ் இலக்கியம்) மற்றும் தமிழ் மொழியில் எம்.ஏ, எம்.பில்., முனைவர் (Ph.D) பட்டங்களையும் பெற்றிருக்கிறார். இவர் 38 பன்னாட்டு / தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திடமிருந்து நிதி பெற்று 3 கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார் முத்துக்கமலம் உள்ளிட்ட பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்களில் 15 ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. இவர் 6 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 9 மாணவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கின்றனர். 3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கின்றனர். பல்வேறு அமைப்புகளிடமிருந்து விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பதுடன், பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவர் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் எழுதிய ‘தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்’ எனும் கட்டுரை, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் 10 ஆம் வகுப்புக்கான தமிழ்ப் பாடப் புத்தகத்தில் விருந்தோம்பல் எனும் பாடத்திற்கான மேலதிகத் தகவல்களுக்கான ‘இணையத்தில் காண்க’ எனும் பகுதியில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் மா. பத்மப்ரியா (முழு சுயவிவரக் கோப்பு)
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|