சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

முனைவர் தி. நெடுஞ்செழியன்
திருச்சி, புனித வளனார் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் தி. நெடுஞ்செழியன் தமிழ் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) ஆகியவைகளைப் பெற்றிருக்கும் இவர் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), முதுநிலைப் பட்டயம் (P.G.D.J & M.C) ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். இவர் எட்டு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். தமிழ்த்திணை எனும் ஆய்விதழை 2004 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வரும் இவர் பல்கலைக்கழக மானியக் குழு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் உள்ளிட்ட சில அமைப்புகளிடமிருந்து திட்டப்பணிகளைப் பெற்றுச் சிறப்பாகச் செய்து வழங்கியிருக்கிறார். இவர் பல்வேறு அமைப்புகளில் நிதி நல்கையுடன் கல்லூரிகளில் 20 தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள், 7 பயிலரங்கங்கள் போன்றவைகளை நடத்திச் சிறப்பு சேர்த்திருக்கிறார். இவரது 43 ஆய்வுக் கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு ஆய்விதழ்களில் இவரது 8 ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராகவும் இருந்து வரும் இவரின் வழிகாட்டுதலில் இதுவரை 4 பேர் முனைவர் பட்டத்தினையும், 20 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினையும் பெற்றிருக்கின்றனர்.
முனைவர் தி. நெடுஞ்செழியன் சுய விவரக் குறிப்பு (பிடிஎப் கோப்பு)
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|