சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)
முனைவர் சு. கணேஷ்
மதுரை மாவட்டம், கருமாத்தூரிலுள்ள அருள் ஆனந்தர் (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சு. கணேஷ் தமிழில் முதுநிலைப் பட்டம் (M.A), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil), முனைவர் பட்டம் (Ph.D) ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார். உளவழி மருத்துவம் மற்றும் கலந்தாய்வு குறித்த முதுநிலைப் பட்டம் (M.S - Psychotherapy & Counseling), இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுநிலைப் பட்டயம் (PGD&JMC), மொழியியல் பட்டயம் (Diploma in Linguistic) ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார்.
மதுரை, தினமலர் நாளிதழில் இரண்டாண்டுகள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி இருக்கும் இவரது 19 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 'ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் நூல் ஒன்றினையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
முனைவர் சு. கணேஷ் சுய விவரக் குறிப்பு (பிடிஎப் கோப்பு)
* * * * *

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.