துணை ஆசிரியர் (கதை, கவிதை உள்ளிட்ட பிற பகுதிகள்)

எஸ். ஏ. சுகுமாரன்
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றிருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த சீ. சுப்பிரமணியன் என்கிற எஸ். ஏ. சுகுமாரன் பல்வேறு அச்சிதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதி வருபவர். தூத்துக்குடியில் கலாரசிகன் எனும் சிற்றிதழ் ஒன்றினைத் தொடங்கி, அதன் ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். தூத்துக்குடியில் பாரதி கலை இலக்கிய மன்றம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி கலை, இலக்கியப் பணிகளைச் செய்து சிறப்பு பெற்றவர். முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|