ஒரு சிறு ஆலயத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு பெண் தன் அருகாமையில் நடந்து வந்த குருவானவரிடம், 'ஓய்வுநாள் பாடசாலைக்குள் என்னால் போக முடியவில்லை, அங்கு அதிகக் கூட்டமாக இருக்கிறது” என்று விம்மியழுதவாறு கூறினாள். கந்தை உடையில், தலை வாறப்படாத தோற்றம் கொண்ட அந்த சிறுமியின் நிலைமையை உணர்ந்து கொண்ட குருவானவர், அவளின் கையைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று, ஓய்வுநாள் பள்ளியில் அவள் அமர்வதற்கு ஒரு இடம் பிடித்துக் கொடுத்தார்.
அந்த சிறுமி தனக்கு இடம் கிடைத்ததை எண்ணி அதிக மகிழ்சியுற்றபோதும், எத்தனையோ பிள்ளைகளுக்கு இயேசுவை வழிபடுவதற்கு ஓய்வுநாள் பள்ளியில் இடமில்லையே என்ற ஏக்கத்தோடு அன்று இரவு அவள் படுக்கைக்குப் போனாள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த சிறுமி அவளுடைய ஏழ்மை நிறைந்த குடியிருப்பில், மரணத்தைத் தழுவியவளாய் படுத்திருந்தாள். அவளின் பெற்றோர்கள், தங்கள் மகளை அதிகமாய் நேசித்த அந்த குருவானவரை அவளின் கடைசி காரியங்களைச் செய்ய வரவழைத்தனர். அந்த ஏழைச் சிறுமியின் பூத உடலை அசைத்த போது சிதைந்து நசுங்கிப்போன, சிகப்புநிற பணப்பை ஒன்று கலைத்து போடப்பட்ட குப்பைபோல் பொத்தென்று விழுந்தது.
அதனுள் 57 சென்ட் (57 Cents) பணமும், சிறுமியின் கையால் கிறுக்கலாக எழுதப்பட்ட ஒரு 'கடிதமும்’ இருந்தன. அந்தக் குறிப்புத் தாளில், 'இந்தப்பணம் அந்த சிற்றாலயத்தைப் பெரியதாகக் கட்டுவதற்கு என்றும், அதனால் அதிகமான குழந்தைகள் ஓய்வுநாள் பாடசாலைக்குப் போகமுடியும்” என்றும் எழுதியிருந்தது.
இரண்டு வருடங்களாக அவள் அன்பின் மிகுதியால் அந்தக் காணிக்கையை சேர்த்திருந்தாள். கண்ணீரோடு அந்தக் கடிதத்தை வாசித்த குருவானவர், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்தக் கடிதத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, பிரசங்க மேடையில் நின்று, திறந்து அதை வாசித்து முடித்த பின்பு, அந்தச் சிறுமியின் தன்னலமற்ற அன்பையும், பக்தி ஈடுபாடோடுகூடிய அவளின் எளிமையான வாழ்க்கையையும் சபையாருக்குக் கூறினார்.
அதோடு, திருச்சபை கோயில் அலுவலர் என்ற முறையில் ஆலயக்கட்டிடத்தைப் பெரியதாகக் கட்டுவதற்குத் தேவையான பணத்தை சேகரிக்கும் பணியில் தன்னை வைராக்கியத்தோடும், சுறுசுறுப்போடும் ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்த நிகழ்வு இத்துடன் முடிவடையவில்லை! இந்த நிகழ்வை ஒரு செய்தித்தாள் பிரசுரித்தது.
அதை வாசித்த ஒரு பணக்கார நிலத்தரகர் பல ஆயிரம் டாலர் மதிப்புள்ள நிலத்தை விலை பேசினார். ஆனால் அவ்வளவு பணம் ஆலயத்தால் கொடுக்க இயலாது என்று தெரிந்தபோது, அந்த நிலத்தை அவர் 57 சென்ட் பணத்துக்கு சிற்றாலயத்துக்கு விலைக்குக் கொடுத்தார். ஆலய அங்கத்தினர்கள் அதிகமாக நன்கொடை கொடுத்தார்கள். அருகிலிருந்தும், தொலைவிலிருக்கும் இடங்களிலிருந்தும் காசோலைகள் வந்து குவிந்தன. அந்த சிறுமியின் நன்கொடை ஐந்து வருடங்களுக்குள்ளாக 2,50,000 டாலர்களாக பெருகிற்று. 18ஆம் நூற்றாண்டில் இது ஒரு மாபெரும் தொகையாகும். அவளது சுயநலமற்ற அன்பு அதிகப்படியான பங்குகளையும் கொடுத்தது.
அமெரிக்காவில் உள்ள ‘பிலடெல்பியா’ (Philadelphia, USA) பட்டணத்திற்குத் தாங்கள் செல்ல நேர்ந்தால், 3,300 பேர் உட்காரக்கூடிய "Temple Baptist Church"யையும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலுகின்ற "Temple University" யையும், "Good Samaritan Hospital" யையும், அந்தப் பட்டணத்தில் உள்ள எந்த ஒரு குழந்தையும் ‘ஞாயிறு பாடசாலை’ வேளையில் உள்ளே இடமில்லாமல் வெளியில் நிற்க தேவையில்லாத அளவிற்கு, நூற்றுக்கணக்கான குழந்தைகள் அமர்வதற்கான ‘ஓய்வுநாள் பாடசாலை கட்டிடத்தையும்’ (Sunday School Building) காணலாம். இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் 57 சென்ட்-யை தியாகத்தால் சேமித்து, சரித்திரம் படைத்த அந்தச் சிறுமியின் இனிய முகத்தின் படத்தைக் காணலாம். அதோடு அவளின் அன்புக்குப் பாத்திரமான குருவானவர், டாக்டர். ரசல் எச். கான்வெல், (Dr. Russell H. Conwell, (auhtar of the book, 'Acres of Diamonds') அவர்களின் உருவப்படத்தையும் காணலாம்.
"What God can do with 57 Cents?"
'கடவுளால் 57 சென்ட்-களைக் கொண்டு என்ன செய்ய முடியும்?” என்ற கேள்விக்கு விடை சொல்லும் ஒரு உண்மைச் சம்பவம்தான் நாம் மேலே படித்தது!
Do all good you can,
By all the means you can,
In all the ways you can,
In all the places you can,
All the times you can,
To all the people you can,
As long as you ever can,
And always with a smile!