சனத்குமாரர் பிரம்மபுத்திரர் சதச்ருங்க மலையில் சதாசிவனை நோக்கித் தவம் செய்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராகத் தோன்றினார். இருப்பினும், ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவரை எழுப்ப சிவன் தன் கையிலுள்ள டமருகத்தை (உடுக்கை) வேகமாய் ஆட்டினார். சனத்குமாரர் கண்விழித்துச் சிவனடி பணிந்தார். இதனை சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து "டம்டம்' என்று எழுந்த நாதமே சமஸ்கிருதத்தின் 51 எழுத்துகளாயின என்றும், இவை பாரத தேசத்தின் 51 இடங்களில் எரி நட்சத்திரம் போல் தெறித்து விழுந்தன என்றும் சொல்லப்படுகிறது.
அவையே "அ' முதல் "க்ஷ' வரையிலான 51 எழுத்துகளாகும். சமஸ்கிருத மொழியில் உள்ள 51 எழுத்துகளான அட்சரங்களை மையமாகக் கொண்ட 51 சக்தி கோவில்கள் தோன்றின. இதனை அட்சர சக்தி பீடங்கள் என்றும், இங்கிருக்கும் சக்தியானவள், "அட்சர சுந்தரி" என்றும் பொதுவாக வழங்கப்படுகிறார்.
அட்சர தேவி என்று பொதுவாக வழங்கப்பட்டாலும், ஒவ்வொரு தேவிக்கும் தனித்தனியாகப் பெயர்கள் இருக்கின்றன. அவை;
1. அமிர்தா தேவி
2. ஆகர்ஷணீ தேவி
3. இந்திராணி தேவி
4. ஈஷிணி தேவி
5. உமா தேவி
6. ஊர்த்வகேஷி தேவி
7. ருத்திதாயீ தேவி
8. ரூகார தேவி
9. லுகார தேவி
10. லூகார தேவி
11. ஏகபாத தேவி
12. ஐஷ்வர்யாத்மிகா தேவி
13. ஓம்கார தேவி
14. ஔஷதா தேவி
15. அம்பிகா தேவி
16. அக்ஷரா தேவி
17. காராத்ரி தேவி
18. கண்டிதா தேவி
19. காயத்ரி தேவி
20. கண்டாக்ர்ஷிணி தேவி
21. டார்ணா தேவி
22. சாமுண்டா தேவி
23. சயார்தா தேவி
24. ஜயா தேவி
25. ஜங்காரிணி தேவி
26. ஞானரூபா தேவி
27. டங்கஹஸ்தா தேவி
28. டங்காரிணி தேவி
29. டாமரி தேவி
30. டங்காரிணீ தேவி
31. ணார்ணீ தேவி
32. தமஸ்யா தேவி
33. ஸ்தாண்வீ தேவி
34. தாக்ஷாயணி தேவி
35. தத்யா தேவி
36. நார்யா தேவி
37. பார்வதி தேவி
38. பட்காரிணி தேவி
39. பந்தினி தேவி
40. பத்ரகாளி தேவி
41. மகாமாயா தேவி
42. யக்ஷஸ்வினி தேவி
43. ரக்தா தேவி
44. லம்போஷ்டி தேவி
45. வரதா தேவி
46. திரு தேவி
47. ஷண்டா தேவி
48. சரஸ்வதி தேவி
49. ஹம்ஸவதி தேவி
50. பந்தமோகினி தேவி
51. க்ஷமா தேவி
ஒவ்வொரு தேவிக்கும் தனித்தனியாக தலம், அங்கம், அங்கதேவி பெயர், பைரவர் என்று உள்ளது.