தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது. இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி நான்கு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை;
1. தேவாரம் - 11 திருப்பதிகங்கள்
2. திருவாசகம் - 25 திருப்பதிகங்கள்
3. திருக்கோவையார்
4. திருமுறைக் கண்ட புராணம்
5. திருவிசைப்பா
6. திருபல்லாண்டு
7. திருமந்திரம்
8. கோயில் நான்மணிமாலை
9. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
10. பெரியபுராணம்
11. சிதம்பரம் மணிக்கோவை
12. சிதம்பரச் செய்யுட் கோவை
13. சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
14. தில்லைக்கலம்பகம்
15. தில்லையுலா
16. மூவருலா
17. தில்லை யமகவந்தாரி
18. சிதம்பர வெண்பா
19. சிதம்பர சபாநாத புராணம்
20. பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்
21. புலியூர் வெண்பா
22. நடேசர் திருவருட்பா
23. நடராச திருவருட்பா
24. நடராசர் சதகம்
25. நடராசர் திருப்புகழ்
26. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
27. சேக்கிழார் புராணம்
28. சிவகாமியம்மைப் பதிகம்
29. தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி
30. தில்லை நவமணி மாலை
31. சிதம்பர விலாசம்
32. பரமரகசிய மாலை
33. திருவருட்பா
34. தில்லைத் திருவாயிரம்
35. புலியூர் புராணம்
36. சிதம்பரப் புராணம்
37. நடராஜர் காவடிச்சிந்து
38. நடராசர் பத்து
39. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்
40. சிதம்பரம் பட்டியல்
41. முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
42. சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
43. தில்லை பாதி நெல்லை பாதி
44. சிதம்பரம் சேஷத்திர மகிமை