சிவன் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தாகும்.
ஜீவன் செயல்களோ பதினான்கு. அவை:
1. காமம் – இச்சை; தனம், பொருள் முதலியனவற்றை மேன்மேலும் தேடுதல்
2. குரோதம் - சினம்; பூசல்
3. உலோபம் - ஈயாமை, கொடுக்காமை
4. மோகம் - தான் தேடிய பொருள்மீது அதிக விருப்பம்
5. மதம் - செருக்கு
6. மாத்சர்யம் - பொறாமை
7. இடும்பை - அவமதிப்பு; உதாசீனம்
8. வேட்கை - பல வகையான தீவிர ஆசை
9. ஈரிடை - நமக்குண்டான துன்பம் பிறருக்கும் வர வேண்டும் என்னும் ஒருவகைப் பொறாமை
10. தர்ப்பம் - தற்புகழ்ச்சி
11. ராகம் - பிறர் மனை மோகம்
12. துவேஷம் - பிறர் செய்த தீமை கருதி அது போன்றதை அவருக்குத் தானும் செய்யும் ஒரு தன்மை
13. இடம்பம் - ஆடம்பரமாகத் தானம் கொடுத்தல்
14. அகங்காரம் - நான் என்று எழும் அகந்தை.
இந்தப் பதினான்கும் சிவன் படைக்கவில்லை. ஜீவனே படைத்துக் கொண்டவை. இவை ஒழிந்தால் பிறப்பும் இறப்பும் ஒழியும் என்கிறார் பாம்பன் சுவாமிகள்.