“ஓம் விகர்த்தனோ விவஸ்வாம் ச மார்த்தண்டோ பாஸ்கரோ ரவி: |
லோகப்ரகாசக: ஸ்ரீமான் லோக சக்ஷுர் க்ரஹேச்வர: ||
லோக ஸாக்ஷி த்ரிலோகேச: கர்த்தா ஹர்த்தா கமிஸ்ர: |
தபனஸ் தாபனஸ் சைவ சுசி ஸப்தாச்வ வாஹன: ||
கபஸ்தி ஹஸ்தோ ப்ரஹ்மா ச ஸர்வதேவ நமஸ்க்ருத: ||”
- மேற்காணும் பாடல் வழியாக, சூரியனின் 21 பெயர்கள் விளக்கப்படுகின்றன.
1. விகர்த்தன - விசேஷமாக எல்லா வியவஹாரங்களுக்கும் காரணமாய் இருப்பவர்.
2. விவஸ்வான் - தனது ஒளியால் சந்திரன், நட்சத்திரம் முதலியவற்றின் ஒளியை ஒடுக்குபவர் (அல்லது க்ஷத்திரிய வம்சத்துக்கெல்லாம் ஆதிமூலமாக இருப்பவர்).
3. மார்த்தண்ட - பன்னிரண்டு மாதங்களுக்குக் காரணமாய் இருப்பவர்.
4. பாஸ்கர - பிரகாசிப்பவர்.
5. ரவி - எல்லா உயிர்களாலும் வணங்கப்படுபவர்.
6. லோகப் பிரகாசக - உலகத்தை ஒளிர்விப்பவர்.
7. ஸ்ரீமான் - எல்லாவிதச் செல்வமும் படைத்தவர்.
8. லோக சக்ஷு - உலகத்தின் கண் போலிருப்பவர்.
9. க்ரஹேச்வர - எல்லாக் கிரகங்களுக்கும் தலைவர்.
10. லோகஸாக்ஷி - உலகத்தில் நிகழ்வதற்கெல்லாம் சாட்சியாய் இருப்பவர்.
11. த்ரிலோகேச - மூன்று உலகிற்கும் ஈச்வரன். (ஹிரண்யகர்பன்)
12. கர்த்தா - உண்டாக்குபவர்.
13. ஹர்த்தா - அழிப்பவர்.
14. கமிஸ்ர - இறப்பிலிருந்து விடுவிப்பவர்.
15. தபன - உஷ்ணமாயிருப்பவர்.
16. தாபன - எரிப்பவர்.
17. சுசி - தூய்மையானவர்.
18. ஸப்தாச்வ வாஹன - ஏழு குதிரைகள் பூட்டிய வாகனம் உடையவர்.
19. கபஸ்தி ஹஸ்த - கிரணங்களையே கைகளாக உடையவர்.
20. ப்ரஹ்மா - சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமிக்கும்போதும் உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பவருக்குச் செல்வத்தையும் கல்வியையும் கொடுப்பவர்.
21. ஸர்வதேவ நமஸ்க்ருத - எல்லா தேவர்களாலும் வணங்கப்படுபவர்.