ச்ரவனம்
இறை நாமம் திறம் கேட்டல், சச்சங்கம் / ஞானிகள், அருளாளர்கள் குருமார்கள் ஆசிரியர்கள் மூலம் இறைவனின் நாமம் அருமை பெருமைகளை கேட்டல்
வரகுண பாண்டியன் என்ற மன்னன் மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். தான தர்மங்களில் சிறந்து விளங்குகின்ற பாண்டிய மன்னன் ஒரு நாள் வெளியே சென்று கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக் கொண்டது. அப்போது அங்கு இருக்கும் தவளைகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன. தவளை கத்துவதை வைத்தே சகுன சாஸ்திரங்களை நம் பெரியோர் கூறுவதுண்டு. தவளைகள் எப்போதும் ஒரே மாதிரியாக கத்தாது. பலவிதங்களில் கத்தும் முறைகளுக்கு ஏற்ற அவைகள் உணர்த்தும் சகுண முறைகளைப்பற்றிப் பெரியோரகள் விபரம் கூறுவார்கள். அதனைக்கொண்டு மழையின் அறிகுறி, போர் மூளும் அறிகுறி. எதிரிகளினால் நாசம் வரும் தன்மை, எதிர் மறை விளைவுகள் பற்றி அறிகுறி என அதன் சத்தங்களைக்கொண்டு பகுத்துணர்வார்கள். இதன்படி மன்னன் தவளைகள் கத்திய சத்தத்தைக் கண்டு அவனுக்கு சிவ நாம அறிகுறியாக கர கர என்ற சத்தமாக கேட்டதைக் கண்டான். உடனே மன்னன் மனம் மகிழ்ந்து அவற்றிக்கு பொன்னும் மணியும் தூவினான். இதன் மூலம் மன்னனின் சிவ பகத்தியை உணராலாம். இதுபோன்று மற்றொரு நாள் வெளியில் செல்லும் போது, நரிகள் ஊழையிடுவது அவனுக்கு சம்போ சிவ சம்போ என்ற நாதம் கேட்டதாம். இதனைக் கண்டும் மனம் மகிழ்ந்து அவற்றிக்கு பட்டாடைகள் அள்ளிக்கொடுத்தானாம். இந்த வகை பக்தி நிலைக்கு ச்ரவணம் என்று பெயர்.
கீர்த்தனம்
இறை நாமம் பாடுதல் . திருமுறை பாடல்கள் மூலம் இறைவன் நாமத்தை நாள்தோறும் பாடுதல்
ஸ்ரீ அருணகிரிநாதர் தாம் இயற்றிய திருப்புகழில் இறைவனைப் போற்றி பாடும் பணியைத்தான் குறிப்பிட்டு வேண்டுகின்றார்.
“ஆடும் பரி வேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமாமுகனைக் செருவில்
சாடும் தனியானை சகோதரனே”
இத்தகைய பாடும் பணியை இறைவன் நமக்கு கொடுத்தால் அது பெரும் வரப்பிரசாதமாகும். இத்தகைய பக்திக்கு கீர்த்தனம் என்று பெயர் இறை நாம கீர்த்தனம் நாடெல்லாம் செழிக்கனும் என்பார்கள் சான்றோர்கள் இதைக் கொண்டுதான் இறை நாமத்தை எப்படிச் செபிக்க வேண்டும் என்று பெரியோர்கள் தெளிவாக எழுதி வைத்துள்ளார்கள்.
ஸ்மரணம்
இறை உணர்வுடன் இறைவனை சிந்தித்தல் / தியானம், ஜபம் செய்தல்
நினைவுக்கும் செயலுக்கும் ஆதாரமாக இருப்பது மனித மனம். மனம் நினைத்தால் தான் அனைத்தும் இயங்கும். ஆகவே எந்த நிலையிலும் மனதால் ஈசனை மறவாமல் இருக்கின்ற நிலைக்கு ஸ்மரணம் என்று பெயர். இந்த ஸ்மரண பக்தியால் அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக நடத்தலாம். இதுவே ஸ்மரண பக்தி ஆகும்.
பாதசேவனம்
அடியார்களுக்கு சேவை செய்தல்
இறைவனுக்குப் பூசை செய்வது. என்னென்ன சேவைகளை என்னென்ன முறைகளோடு சிவனுக்குப் பூசையாக செய்யலாம் என்பதை நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளார்கள். பூசை செய்கின்றவர்கள் ஆகம சாஸ்திரங்கள் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள்தான் சிவாச்சாரியார்கள் என்று சொல்கின்றோம் அவர்கள் பூசையின் போது பல விதமான முத்திரைகளைக் காண்பித்துப் பூசை செய்வார்கள். இந்த முத்திரைகளால் அனைத்துக் காரியங்களையும் சாதித்து விடலாம். இந்த முத்திரைகளைச் செய்ய, செய்ய அனைத்துச் சக்திகளும் வந்து சேர்கின்றன. இத்தகையப் பூசை முறைகள் மூலம் இறைவனுக்குச் சேவை செய்வதையேப் பாத ஸேவனம் என்பதாகும்.
அர்ச்சனம்
இறைவனை அவன் நாமங்களை கூறி பூசை செய்தல்
மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்வது என்னென்ன மலர்களால் அர்ச்சனை செய்வது என்று எம்பெருமான் நம்மிடம் கேட்க வில்லை நம்முடைய நற்குணங்களையே மலர்களாக சமர்ப்பிக்க வேண்டி இறைவன் நம்மிடம் கேட்கின்றான்.
வந்தனம்
இறைவனை காலை மாலை வணங்குதல்
இறைவனை மனதார வணங்குவது வந்தனம் ஆகும். சிலர் கோயில்களில் ஆண்டவனை கையெடுத்து வணங்கவே வெட்கப்படுவார்கள் இது தவறு. கோயிலில் இறைவனத்தவிர வேறு யாரையும் கை தூக்கி வணங்கக் கூடாது. ஏனென்றால் கோயிலில் இறைவன் ஒருவன்தான் பெரியவன் ஆகேவ கோயிலில் யாரையும் கீழே விழுந்து வணங்குவதோ முறையற்ற செயல்.
தாஸ்னம்
இறைவனுக்கு அடிமையாக இருந்தும், விழிப்புணர்வுடன் இருத்தல்
இறைவனுக்கு அடிமை அன்றி வேறு யாருக்கும் அடிமை இல்லை இந்தக் கருத்து திருவெம்பாவையில் வருகின்றது. இந்த வகை பக்திக்கு தாஸ்யம் என்று பெயர்.
சகியம்
இறைவனை தோழமையுடன் உணர்தல்
இறைவனை தோழனாக நினைத்து வணங்குவதாகும் இதற்கு ஸக்ய பக்தி என்று பெயர்.
ஆத்ம நிவேதனம்
தன்னை முழுமையாக அர்ப்பணித்தல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல் / ஞான நூல்கள், புராணங்கள் பாகவதம், சூத்திரங்கள் போன்றவை கற்றல்
இறுதியாக பக்தியின் முதிர்ச்சியில் தன்னையே முழுமையாக இறைவனுக்கு அர்ப்பனம் செய்வது. இதையே ஆத்ம நிவேதனம் என்பர்.
இந்த ஒன்பது வழியிலான பக்தி கொண்டால் பேரின்பப் பெருவாழ்வு எனும் வீடு பேற்றை அடையலாம்.