உப்புக்கு முக்கியத்துவம் ஏன்?
மு. சு. முத்துக்கமலம்
மகாலட்சுமிக்குப் பிடித்த உணவு இனிப்பு. மகாலட்சுமியை வேண்டி செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் இனிப்பு பண்டங்களையே முதன்மையாக வைப்பர். காசியில் அன்னபூரணி சன்னதியில் அம்பாள், லட்டுத் தேரில் புறப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இதைப்போல, உப்பும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்ததாகும். சமுத்திரராஜனின் மகளான மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியவள். எனவே, கடலில் கிடைக்கும் உப்பை மகாலட்சுமியாகக் கருதும் வழக்கம் உள்ளது. தற்போதும் கிராமப்பகுதிகளில் மாலை வேளையில் உப்பை இரவலாகக் கொடுப்பதில்லை. புதிதாக வீடு கட்டி புதுமனை புகும் நிகழ்வின் போது, அவர்களது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமென்பதற்காக உப்பு கொடுக்கும் வழக்கம் உள்ளது. "உப்பில்லா பண்டம் குப்பையிலே` என்பதை நினைவூட்டும் வகையில், உப்பில்லாத உணவை எப்படிச் சாப்பிட முடியாதோ, அதைப் போல மகாலட்சுமியின் அருளில்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்ப உப்பு உணர்த்தும் உயரிய தத்துவமும் இதில் உள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.