தர்ப்பைப் புல் ஆதியிலிருந்து கிரியை மார்க்கங்களில் இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடையப் பாலமாகக் கருதப்படுகிறது.
தர்ப்பைப் புல்லின் அடிப்பாகத்தில் பிரம்மன், மத்தியில் விஷ்ணு, நுனியில் ருத்ரன் இருப்பதான தொன்ம நம்பிக்கை இருக்கிறது. தர்ப்பை சுபம், புனிதம் தருவதுடன், அனைத்துப் பாவங்களையும் போக்க வல்லது. இந்தப் புல்லில் அதிகமான தாமிரச்சத்து உள்ளது. இது நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்றும் மற்றொரு பெயர் உண்டு. இந்தப் புல் தண்ணீர் இல்லையென்றாலும் வாடாது. நீருக்குள் பல நாட்கள் இருந்தாலும் அழுகாது. ‘அம்ருத வீரியம்’ என்பது இதன் பெயர். அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்பை. அக்கிர ஸ்தூலமுடையது பெண் தர்ப்பை, மூலஸ்தூலம் உடையது திருநங்கை தர்பை என்று சொல்லப்படுகிறது.
யாக வேள்விகளில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுக்கும் மந்திர ஒலிககளைக் கடத்திச் சக்தியை அளிக்கும். நான்கு பக்கமும் தர்ப்பைப் புல்லை வைப்பது, அந்தக் குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இறைவழிபாடு ஜெபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில் கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனைத் தராது. விஷேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்ப்பைப் புல்லைப் போடுவார்கள். மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே, தர்ப்பை பவித்ரம் போடும் பொழுது பிரபஞ்ச சக்தி விரல் மூலம் மூளைக்குச் செல்கிறது உடலில் பரவும்.
கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவுப் பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்கத் தர்ப்பையைப் போடுவது வழக்கம். தர்ப்பையைத் தேவ காரியங்களுக்குக் கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்குத் தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும், தர்ப்பை உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்தில் மின்சாரச் சக்தியைக் கடத்தும் சக்தியைப் போல் தர்ப்பையிலும் உண்டு. தங்கம், வெள்ளி கம்பிகளின் இடத்தில் பிரபஞ்சத்திலுள்ள சக்திகளை ஆகர்ணம் செய்யும். எல்லா ஆசனங்களைக் காட்டிலுமும், தர்ப்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்தப் பலனைத் தரும். அசுப காரியங்கள் ஒரு தர்ப்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்ப்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்ப்பைகளாலும் (பவித்ரம் ) தர்ப்பை மோதிரம் முடிய வேண்டும்.
கோயில்களில் கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது, கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பைப் புல் பிரபஞ்சச் சக்தி ஈர்த்து வைத்திருக்கும். அதன் முன்பாக, வீழ்ந்து வணங்கும் பக்தர்களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார். அவருடைய வலது கால் ‘அபஸ்மரா’ என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும், கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.