கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிதேவதை அக்னி பகவான். ‘அக்னி க்ருத்திகா ப்ரதமம்’ என்று வேதத்தில் கார்த்திகையை முதலாவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நட்சத்திரத் துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் இறைவனுக்குத் தீபம் ஏற்றல் வேண்டும்.
திருக்கார்த்திகை நாளன்று ஒரு வீட்டில் குறைந்தது 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். ஆகாயத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்கும், சமையல் அறையில் ஒன்று, வாசற்படிக்கு முன் நடையில் இரண்டு, பின்கட்டில் நான்கு, திண்ணையில் நான்கு, மாடங்களில் இரண்டு, நிலைப்படிக்கு இரண்டு, இறைவன் படத்துக்கும் கீழாக இரண்டு, வாசலில் யம தீபம் என ஒன்றும், கோலம் போட்ட இடத்தில் ஐந்தும் ஏற்றி வைக்க வேண்டும். மாலையில் ஏற்றப்படுகிற போது, கீழ்க்காணும் சந்தியா கால தீபத்துதியைக் கூறவேண்டும்.
“சிவம் பவது கல்யாணம்
ஆயுர் ஆரோக்ய வர்தனம்
மம துக்க விநாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:
தீபம் ஏற்றும்போது பாடும் பாடல்!
பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற்படியே வருக
முழுஞானப் பெருக்கே வருக!
பிறை மௌலிப் பெம்மான் முக்கண் சுடர்க்கு நல்விருந்தே வருக!
முழுமுதற்கும் வித்தே வருக!
வித்தின்றி விளைந்த பரமானந்தத்தின்
வினைவே வருக!
பழுமறையின் குருந்தே வருக!
அருள் பழுத்த கொம்பே வருக!
திருக்கடைக்கண் கொழித்த
கருணைப் பெருவெள்ளம் பிடைவார்
பிறவிப் பிணிக்கோர் மருந்தே வருக!
பசுங்குந்தழலை
மழலைக்கிளியே வருக!
மலையத்துவசன் பெற்ற
பெருவாழ்வே வருக வருகவே!”
இப்படி கார்த்திகை தீப வழிபாடு செய்வதால், வாழ்வில் அனைத்துத் துன்பங்களும் நீங்கி, வாழ்வு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறும் என்கின்றனர்.