பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள்படும்.
ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன.
இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.
1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
3. அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மயிலாடுதுறை (தமிழ்நாடு)