இராவணனுடன் போரிட்டு, சீதையை மீட்ட இராமன் இராமேஸ்வரம் வழியாக அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவ்வேளையில் சீதைக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டது.
உடனே இராமன், தன் கையிலிருந்த வில்லை ஊன்றித் தரையில் அழுத்தினார்.
அப்போது, அவ்விடத்திலிருந்து பீறிட்ட நீரைப் பருகி சீதை தாகம் தணிந்தாள். அந்த இடத்துக்கு வில்லூன்றி தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அப்பெயர் வில்லூண்டித் தீர்த்தம் என்று மாறிப் போனது.
தமிழ்நாட்டில் இராமேசுவரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், தங்கச்சிமடம் எனுமிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இந்தப் புனிதத் தீர்த்தக் கிணறு அமைந்திருக்கிறது.