பஞ்ச வைணவத் தலங்கள்
உ. தாமரைச்செல்வி

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமருக்கான ஐந்து தலங்களை, பஞ்ச ராமர் தலங்கள் என்கின்றனர். இதனை, பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர். அவை;
1. முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
2. அதம்பார் கோதண்டராமர் கோயில்
3. பருத்தியூர் ராமர் கோயில்
4. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
5. வடுவூர் கோதண்டராமர் கோயில்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களை, பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்கின்றனர். இதனை, பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர். அவை;
1. திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்
2. திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில்
3. திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
4. கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
5. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் அமைந்துள்ள அரங்கநாதரின் ஐந்து தலங்களை, பஞ்ச ரங்க தலங்கள் என்கின்றனர். இதனை, பஞ்ச ரங்க சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர். அவை;
1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடகம்)
2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
3. அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில், திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.