இந்து சமயத்தில் இறைவனுக்கு மரியாதை செலுத்தும் முறைகளை உபச்சாரங்கள் என அழைக்கின்றனர். இந்த உபச்சார முறைகள் அரசர்களின் வருகையின் பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலத்தில், அதனை இறைவனுக்கு உகந்த முறையில் மாற்றம் செய்து கோயில்களில் கடைபிடிக்கத் தொடங்கினர்.
இந்த மரியாதை செலுத்தும் முறைகள் கடைபிடிக்கப்படுகின்ற செயல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சமஸ்கிருத மொழியில் பெயரிடப்படு அழைக்கப்படுகின்றன. அவை;
1. பஞ்சோபச்சாரம் - ஐந்து
2. ஷடோபச்சாரம் - ஆறு
3. தாசோபச்சாராம் - பத்து
4. துவாதசபச்சாரம் - பன்னிரண்டு
5. ஷோடோசுபச்சாரம்-பதினாறு
6. அஷ்டத்ரிம்சத்பசாரம் - முப்பத்து எட்டு
7. சதுஷ்ஷஸ்திபச்சாரம் -அறுபத்து நான்கு