அல்லாஹ் மனிதரை நல்வழிப்படுத்த பல வேதங்களை அருளினான். அத்துடன் அவன், இவ்வேதங்களைத் தெளிவாகப் புரிந்து, அவற்றுக்கேற்ப வாழ்ந்து, ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி? என்பதைக் கற்றுக்கொடுத்து, முன்மாதிரியாக வாழும் மனிதப் புனிதர்களை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர்களையே ‘இறைத்தூதர்கள்’ என இஸ்லாம் அறிமுகப்படுத்துகின்றது. பொதுவாக அரபு மொழியில் ‘நபி’ என்றும் ‘ரஸூல்’ என்றும் கூறப்படும்.
இவ்வாறு உலகுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என மார்க்கம் வழிவந்த கருத்துக்களிலிருந்து காண முடிகின்றது. உலகில் தோன்றிய முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களே ஒரு இறைத்தூதர்தாம். இவர்கள் எல்லோரும் கொள்கையாலும், போதனையாலும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களாவர். இந்த இறைத்தூதர்கள் யாவரினதும் பெயர்களை அல்லாஹ் நமக்கு அறிவிக்கவில்லை.
இப்படித் தோன்றிய தூய இறைத்தூதர்களில் இருபத்தைந்து பேர்களுடைய பெயர்களையே அல்லாஹ் நமக்கு அறிவித்துள்ளான். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.
அந்த இறைத்தூதர்களின் பெயர்கள்:
1. ஆதம்
2. நூஹ்
3. இத்ரீஸ்
4. இப்றாஹீம்
5. இஸ்மாயீல்
6. இஸ்ஹாக்
7. யஃகூப்
8. யூஸுஃப்
9. லூத்
10. ஹூத்
11. ஸாலிஹ்
12. ஷுஐப்
13. மூஸா
14. ஹாரூன்
15. தாவூத்
16. சுலைமான்
17. ஐயூப்
18. துல்கிஃப்லி
19. யூனுஸ்
20. இல்யாஸ்
21. அல்யஸஃ
22. ஜகரிய்யா
23. யஹ்யா
24. ஈஸா
25. முஹம்மத் ஸல்லல்லாஹு