புத்தர் என்பது பொதுவாக புத்த மதத்தை உருவாக்கிய கௌதம புத்தரையே குறிக்கிறது. பொதுவாக, அவர் 'புத்தர்' என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா" (Tathaagatha) என்பதும் இவரைப் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்லாகும்.
பௌத்த சமயத்தில், புத்தர் என்ற சொல்லானது கீழ்க்காணும் மூன்று வகைகளைக் குறிப்பிடுகிறது.
1. பொதுவாக, புத்தத்தன்மையை அடைந்த ஒருவர்.
2. மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்சப் புத்தர்கள்.
3. சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர் மற்றும் ஸ்ராவகபுத்தர் எனும் மூன்று வகையான புத்தர்கள்.
கௌதம புத்தருக்கு முன்பு இந்தப் பூமியில் பல புத்தர்கள் தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி தோன்றிய 28 புத்தர்களின் சமஸ்கிருதப் பெயர்கள் மற்றும் அடைப்புக் குறிக்குள் பாளி மொழியிலான பெயர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1. திருஷ்ணாங்கர (தன்ஹங்கர)
2. மேதங்கர (மேதங்கர)
3. ஷரணங்கர (சரணங்கர)
4. தீபங்கர (தீபங்கர)
5. கௌண்டின்ய (கொண்டஞ்ஞ)
6. மங்கல (மங்கல)
7. சுமனஸ் (சுமன)
8. ரைவத (ரேவத)
9. ஷோபித (சோபித)
10. அனவாமதர்ஷின் (அனோமதஸ்ஸி)
11. பத்ம (பதும)
12. நாரத (நாரத)
13. பத்மோத்தர (பதுமுத்தர)
14. சுமேத (சுமேத)
15. சுஜாத (சுஜாத)
16. ப்ரியதர்ஷின் (பியதஸ்ஸி)
17. அர்த்ததர்ஷின் (அத்ததஸ்ஸி)
18. தர்மதர்ஷின் (தம்மதஸ்ஸி)
19. சித்தார்த்த (சித்தாத்த)
20. திஷ்ய (திஸ்ஸ)
21. புஷ்ய (புஸ்ஸ)
22. விபஷ்யின் (விபஸ்ஸி)
23. ஷிகின் (ஷிகி)
24. விஷ்வபூ (வேஸ்ஸபூ)
25. க்ரகுச்சண்ட (ககுசந்த)
26. கனகமுனி (கொனாகமன)
27. கஷ்யபர் (கஸ்ஸபர்)
28. கௌதமர் (கோதமர்)
இந்த 28 புத்தர்களைத் தொடர்ந்து, வருங்காலத்தில் தோன்றவிருக்கும் புத்தரின் பெயர் என்னவென்று தெரியுமா? 29 ஆம் புத்தராகத் தோற்றம் பெறவிருக்கும் புத்தரின் பெயர் மைத்திரேயர் என்று புத்த சமய நூல்கள் குறிப்பிடுகின்றன.