பையனுக்கு வரன் பார்க்கிறோம். ரெண்டு இடம் ஒண்ணு போல வருது! என்ன செய்யிறதுன்னு யோசிக்கிறேன்! " அஹமது ஹாஜியார் சொன்னார்.
"திருவுளச் சீட்டு குலுக்கிப் போடுங்க! நம்ம நபி ஸல் வெளியில போகும் போது யாரை அழைச்சுக்கிட்டு போறதுன்னு முடிவு பண்ண அப்படித்தான் செய்வாங்க!” சேமக்கண்ணு சொன்னார்.
மாலை நேரம்.
அஹமது ஹாஜியார் சேமக்கண்ணு வீட்டிற்கு வந்தார்.
"வாங்க என்ன விஷயம்?” சேமக்கண்ணு வரவேற்றார்.
"நீங்கள் சொன்ன மாதிரி சீட்டு குலுக்கி போட்டு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ரொம்ப நன்றி!”
"சந்தோஷம்!"
அவர் சென்றதும் மனைவி என்னவென்று கேட்டாள்.
சேமக்கண்ணு நடந்ததை விவரித்தார்.
"உங்களுக்குத் தெரியுமா? என்னோட கல்யாணத்தப்ப மூணு மாப்பிள்ளை வந்திச்சி! நான் சீட்டு குலுக்கிப் போட்டுத்தான் உங்களத் தேர்ந்தெடுத்தேன்!" என்றாள் சேமக்கண்ணுவின் மனைவி
"அந்த மூணு சீட்டுலயும் என்னோட பேரை மாமனார்கிட்டேச் சொல்லி எழுதிப் போட்டதே நான்தான்!" சேமக்கண்ணு சொல்ல கோபத்தின் உச்சிக்குப் போனாள் அவரது மனைவி.