"மாமா இருக்காங்களா?" கேட்டுக் கொண்டே வந்தாள் பக்கத்து வீட்டு ஷிஃபானா
"என்ன விஷயம்?" சேமக்கண்ணு எதிர்கொண்டு கேட்டார்.
"ஒருத்தர் ஒரு தலையணையிலதான் படுக்கணுமா? இல்லை ரெண்டு மூணு பேர் சேர்ந்து ஒரு தலையணையில படுத்துக்கலாமா?"
"இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்கிறீங்க? அதுவும் இவரு கிட்டே? இவரு என்ன மார்க்கம் படிச்ச ஆளா?" சேமக்கண்ணு மனைவி கோபமானாள்.
"இரு, தெரிஞ்சா சொல்லப்போறேன் நீ ஏன் கோபப்படுறே? நீ போய் சமையலைக் கவனி!”
இப்னு அப்பாஸ்(ரலி) என்ற நபித்தோழர் சொல்றாங்க.
“நான் என் சின்னம்மா மைமூனா (ரலி), அப்புறம் நபி (ஸல்) மூணு பேரும் ஒரே தலையணையில படுத்தோம்னு. அதனால ஒரு தலையணையில ஒருத்தரும் படுக்கலாம். ரெண்டு மூணு பேர் சேர்ந்தும் படுக்கலாம்”
“உங்க வீட்டுல எப்படி? சண்டை போட்டா ரெண்டு, சமாதானமானா ஒண்ணு! அவளுக்கு இருக்கிற கோபத்தை பார்த்தா இன்னிக்கு ரெண்டுதான்னு நினைக்கிறேன்.