"ஸஹர் நேரத்தில் எத்தனை மணிக்கு எழுந்துப்பே?" ஸாதாத் கேட்டான்.
"மூன்றரை மணிக்கு! " ஷவ்கத் பதிலளித்தான்.
"மூன்றரைக்கா அவ்வளவு நேரத்தோட எழுந்து என்ன செய்வே?"
"எழுந்தவுடனே தொலைக்காட்சியில் பயான் கேட்டுக்கிட்டே எல்லா வேலையும் செய்வேன்"
"ஸஹர்லேயே தொலைக்காட்சியா? ஸஹர்ல தொலைக்காட்சி பார்க்கிறது தப்பில்லையா?"
"பயான்தானேக் கேட்கிறேன்! "
"நாம சேமக்கண்ணு மாமாவிடம் இதைப்பற்றிக் கேட்கலாம்"
இருவரும் சேமக்கண்ணு மாமாவிடம் வந்தனர். தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.
"ஸஹர் பரக்கத்தான நேரம். அதிலே நிறைய இபாதத் செய்யணும். இஸ்திக்ஃபார் செய்யணும். தஹஜ்ஜூத் தொழுது துஆ கேட்கணும்”
"பயான் கேட்பதும் ஒரு இபாதத்தானே?"
"இபாதத்தான். தப்பில்லே! ஆனா வேற நேரங்களில் பயான் கேட்டுக்கலாம். வேற நேரங்களில் ஸஹர் உடைய பரக்கத் கிடைக்குமா?"
"நீங்க ஸஹர்ல என்ன செய்வீங்க? பயான் கேட்க மாட்டீங்களா?”
"சில நேரங்களில் கேட்பேன்!"
"யாரோட பயான்!"
"சுலைஹாள் பீவி!"
"அது யாரு? ஆலிமாவா?"
"இல்லை, என்னோட பொண்டாட்டி!"