புரோக்கரிடம் பேசிக் கொண்டிருந்தான் ஸத்தாம்.
சேமக்கண்ணு என்னவென்று விசாரித்தார்.
"பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள வீட்டை விலைக்குக் கேட்கிறான்"
"ஆதம் நகரில உன்னோட வீடு என்னாச்சு?" சேமக்கண்ணு ஸத்தாம் பக்கம் திரும்பிக் கேட்டார்.
“ரொம்பத் தூரமா இருக்கிறதாலப் பள்ளிக்கு பக்கத்தில் வரலாம்னு நினைக்கிறேன்!"
“தூரமா இருக்கிறதுதான் நல்லது!"
"என்ன சொல்றீங்கண்ணே? "மதீனா எல்லையில் வசித்து வந்த பனூ ஸலமா கோத்திரத்தார்கள் பள்ளிக்குப் பக்கத்தில் வரணும்னு நெனைச்சப்போ, உங்கள் வீடு அங்கேயே இருக்கட்டும். அங்கிருந்து நடந்து வர்ற ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்படும்னு நபி (ஸல்) சொன்னாங்க!" (ஜாபிர் ரலி/முஸ்லிம்)
"உனக்கு அதிக நன்மை வேணுமா, வேணாமா?"
"அண்ணே, என் கண்ணத் தொறந்திட்டீங்க! ரொம்ப நன்றி! சொன்ன ஸத்தாம் புரோக்கரிடம் திரும்பி எனக்கு அந்த வீடு வேண்டாம்” என்றான்.
அவன் அகன்றதும், நான் அந்த வீட்டை வாங்கிக்கறேன்! இந்தா டோக்கன் அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய்! சேமக்கண்ணு புரோக்கர் கையில் பணத்தை அழுத்தினார்.
"இவ்வளவு பேசுற நீங்க ஏன் வாங்குறீங்க?"
"நான் இறந்து போனா என்னை ரொம்ப தூரம் தூக்கிச் சுமக்க வேண்டாம் பாருங்க! அதுக்குத்தான்!" என்றார் சேமக்கண்ணு.