"குமரியில பார்த்தா என்ன? ஏத்துக்கப்படாதா?" மஸ்தான் கோபமாய்க் கேட்டான்.
"ஏத்துக்க முடியாது! எல்லா இடங்களிலும் வானம் தெளிவா இருக்றப்போ ஏன் அங்கே மட்டும் பிறை தெரியுது?" ஜபருல்லாஹ் எதிர்க் கேள்வி கேட்டான்.
"இது விதண்டாவாதம்!"
"இருக்கட்டும்! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!"
"நம்ம சேமக்கண்ணு மாமா வர்றார். அவருகிட்டேயேக் கேட்டிடுவோம்!"
"என்ன விஷயம்?" சேமக்கண்ணு கேட்க, மஸ்தான் விவரித்தான்.
"பிறை விஷயம் தெரிய வேண்டுமானால் மார்க்கமும் தெரிய வேண்டும். அத்தோடு அறிவியலும் புரிய வேண்டும். அதோட நம்மள மாதிரி பொது ஜனங்க கட்டுப்படுற இடத்தில இருக்கோம். ஹாஜி சொல்றதக் கேட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டும்!"
"நான் பிறை பார்த்தாலுமா?"
"நீ பார்த்தா நீ நோன்பு வை! மத்தவங்க மேலேத் திணிக்காதே!"
"சரி விடுங்க! நீங்க எந்த கட்சி? பிறையை ஏத்துக்கிட்ட கட்சியா? இல்லை, ஏத்துக்காத கட்சியா?”
"பாதிப்பாதி!"
"புரியலையே?"
"பிறையை ஏத்துக்கிட்ட கட்சியோட சேர்ந்து நோன்பு திறந்தேன். ஏத்துக்காத கட்சியோட சேர்ந்து மறுநாள் நோன்பு வச்சேன்! அவ்வளவுதான்...! "