கடைசியில் அந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. சந்திரிகா வழக்கம் போல என் மனதைப் புரட்டிப் போடும் புன்னகையை வீசினாள் என் உள்மனம் புரியாமல்
“ரிகா, கிட்ட வாயேன்” என்றேன்.
“என்னங்க திடீர்னு கொஞ்சறிங்க” என்றாள். பின் அருகே வந்து சட்டைக் காலரைக் கடித்துப் பட்டன்களை திருகியபடி.
அவளருகே புதிதாய் ஏதோ வாசம் வீசியது.
எவன் வாங்கிக் கொடுத்திருப்பான் இந்த எலிஸபத்ஆர்டன் பிரான்ட் பர்ஃப்யூம்?
இப்போது சந்திரிகா அதாவது என் புதுமனைவியைப் பற்றி சொல்ல வேண்டும். இன்ஜினியரிங்கோ என்னவோ படித்திருக்கிறாள் என்று தெரியும்ம். என்னவோ யூனிவர்சிட்டி என்றாள். அவளை முதன் முறை ஒரு ஷாப்பிங் சென்டரில் பார்த்தபோதே மனது சிறகடித்தது. இவள்தான் என் மனைவி என்று முடிவெடுத்தேன். நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் பிபிஓவில் வேலை கிடைத்தது. முதலில் அவள்தான் என்னிடம் ப்ரபோஸ் செய்தாள்.
”கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கட்டுமா ரிகா” என்றேன்.
“நானும் கிள்ளுவேன். ஆனால் உதட்டால” என்று அப்போதிருந்தே என்னைக் கிறங்கடித்து வருகிறாள். அவளுக்கு கோயமுத்துரோ ஈரோடோ ஏதோ ஒரு ஊர். அதுவா முக்கியம். அதுகள்தானே முக்கியம் என்று இருந்து விட்டேன்.
கொஞ்சநாள் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங்டுகெதர் ஸ்டைலில் வாழ்ந்து வந்தோம்.வாழ்க்கை சுகமாகப் போயிற்று. நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தேன்.
அப்போது சனியோ விதியோ எதுவோ சிரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக நான் படுக்கையில் கிடந்த அவளது செல்போனைக் குடைய வேண்டும். அதில் எதற்காக அந்த ஆபாச - கொஞ்சல் எஸ்எம்எஸ்கள் இருப்பதை நான் பார்த்திருக்க வேண்டும்.
“சந்திரிகா. நீ இருபது வயது இன்பவெள்ளம். உன்னை அனுபவித்த நாளை நினைக்க நினைக்க... (அதற்கு மேல் ஆபாசம்)” என்று எவனோ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
ஒருநாளைக்கு கணக்கில்லாமல் வருகின்றன.இவளென்ன டிவி நடிகையா இல்லை சினிமாவில் குத்தாட்டம் போடுகிறவளா என்று என் உள்ளே இருந்து யாரோ பரிகசித்தார்கள்.
எத்தனை ஆண் நண்பர்கள் என்று கணக்கில்லாமல் திரிந்து கொண்டிருக்கிறாள் என்று அவளை லேசாக வேவூ பார்த்தேன். ஒரு டிவி நடிகன், கிரிக்கெட் இளைஞன், ஒரு பள்ளிக்கூடப் பையன் அப்புறம் பைக் மெக்கானிக் என்று மூன்று பேர். மொத்தம் ஆறுபேர் அவளுக்கு ரெகுலராக ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார்கள் என்று தெரிந்தது.
என்ன செய்யலாம் அவளை. இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் இது போன்ற பெண்களைப் பற்றித்தானே நாலுகாலம் செய்தி போடுகிறார்கள். சந்திரிகாவும் அது போல ஒரு பெண்ணா என்று உள்ளுக்குள் உதைப்பாக இருந்தது. என்ன செய்யலாம் அவளை. பேசிப் பார்க்கலாமா? அவள் தினவை அடக்கிப் பார்க்கலாமா? அவளுக்கு அவள் மேல் நாம் வைத்திருக்கும் காதலை புதுப்பித்துக் காண்பிக்கலாமா?
“என்னங்க.எதுக்கா நாம இப்ப மூணாறு போறம்” என்றாள்.
“அதுக்காக”
“அப்படின்னா” என்றாள் அறியாப் பெண் போன்ற முகபாவத்துடன்.
“நான் உன்னை விரும்பறேன் ரிகா”
“அதான் தெரியூமே”
“உன்னை எவ்வளவூ விரும்பறேன்னு சின்சியரா தெரிவிக்க விரும்பறேன்”
“அதுக்கென்ன எனக்கொரு எஸ்எம்எஸ் தட்டி விட்டா போச்சு” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு
“ச்சே.அப்படியாச் சொன்னேன். சில சமயத்துல நாக்கைக் கன்ட்ரோல் பண்ண முடியலை. என்னை நேசிப்பதைத்தான் உங்க கண்கள் தினமும் சொல்லிட்டு இருக்கே. அப்புறமென்ன” என்றாள்.
“ஒரு செகன்ட் ஹனிமூன்னு வைச்சிக்கயேன்”
“அப்ப செகன்ட் ஃபர்ஸ்ட்நைட் கூட இருக்குமா” என்றாள்
கண் சிமிட்டியபடி இடுப்பில் குத்தியவாறு.ஜெய் போல நெளிந்தேன்.
அடிப்பாவி. இவளுக்கு முதல் ஃபர்ஸ்ட் நைட்டே இருந்திருக்காதே. இவளைப் போய் நம்பினேனே...
“நாம கொஞ்சம் புதுசா துவங்குவமே கன்னுகுட்டி” என்று அவளை புறங்கழுத்தில் முத்திமிட்டேன். அவளது ஸ்விட்ச் அங்கேதான் இருக்கிறது. வழக்கமாக அப்படியே மடியில் விழுந்து விடுவாள். இப்போது வேறு ஏதோ பரபரப்பில் இருந்தாள். நான் விலகினேன். வெளியே வந்து சிட்அவுட்டிலிருந்து எட்டிப் பார்த்தேன். அவள் செல்போன் எடுத்து யாருக்கோ எஸ்எம்எஸ் தட்டிக் கொண்டிருந்தாள்.
இது போதாதா?
மூணாறு வந்ததும் அவளிடம் உருகி உருகி என் காதலைச் சொல்ல வேண்டும். அவளுக்கு அதுதான் வேண்டுமென்றால் அதிலும் அவளைத் திகட்டத் திகட்டத் திருப்திப்படுத்த வேண்டும். அப்படியூம் அவள் மசியவில்லை என்றால்...
ஸாரி. வேறு வழியில்லை எனக்கு. அவளை சத்தமில்லாமல் கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொண்டு விட வேண்டும்.
மூணாறில் சந்திரிகா எனக்கு முழுமையாக ஒத்துழைத்தாள். அதன்பின் நான் அயர்ந்து உறங்குகிற போது அவள் செல்போன் எடுத்து யாருக்கோ எஸ்எம்எஸ் செய்து கொண்டிருந்தாள். அப்போதுதான் என் தன்மானம் விழித்துக் கொண்டது. இத்தனைக்கு பிறகும் இவளுடன் வாழத்தான் வேண்டுமா என்றது.
நல்லவேளையாக கையுறைகள் வாங்கி வைத்திருந்தேன். ஒரு பெரிய அமெரிக்கன் டூரிஸ்டர் பெட்டியூம் கொண்டு வந்திருந்தேன். அடுத்தநாள் அவளை திகட்டத் திகட்ட அன்பு (A) காட்டினேன். அவள் வழக்கம் போல எனக்குப் பெப்பே காட்டினாள்.
அன்றிரவு-
அவளுக்கு எல்லாக் கெட்ட சினிமா கதாநாயகர்களும் செய்வது போல பாலில் மயக்க மருந்து கலந்தேன். ஒரு கூரான சர்ஜிக்கல் கத்தி கொண்டு வந்திருந்தேன். 25ஃபிட் ரிபெல் பிரான்ட் கத்தி.வெண்ணையை வெட்டுவது போல வெட்டும்.
சந்திரிகாவை வெட்டத் தொடங்கினேன். பீய்ச்சியடித்த இரத்தத்தை முதலில் கழுவினேன். பர்ஃப்யூமைத் தெளித்தேன். துண்டுத் துண்டாக வெட்டிய சந்திரிகாவை சூட்கேசில் அடைத்தேன்.
நள்ளிரவில் வெளியில் வந்தேன். யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஒரு வாட்ச்மேன் கவனித்து அருகே வந்தான்.
“உடனடியா ஒரு டாக்சி வேணும். நானே டிரைவ் பண்ணிக்குவேன். இந்த பணம் வேணும்னா கொண்டு வா. கேள்வி கேட்கக்கூடாது. யார்கிட்டேயூம் மூச்சு விடக்கூடாது”
டாக்சி வந்தது. பெட்டியை டிக்கியில் வைத்தேன். ஒரு பள்ளத்தாக்கு அனாமத்தாக இருட்டில் தெரிந்தது. பெட்டியை வீசினேன். ஏதோ பாறையில் மோதி திறந்து கொண்டது. ஸோ வாட்?
இனி அவளை யார் தேடப்போகிறார்கள் அவளது கள்ள நண்பர்களைத் தவிர.
அவளைக் கொன்று எறிந்த பின் அறைக்குத் திரும்பி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்த என் மனதில் ஒரு ப்ளாஷ்.
அவள் செய்த தவறுக்கு நாம் ஏன் சாகவேண்டும். அவள் சாத்தான் அவள் செத்தாக வேண்டும். நமக்காக ஒரு தேவதை கிடைக்காமலாப் போய்விடுவாள். என் முடிவை மாற்றிக்கொண்டு அறைக்குத் திரும்பினேன்.
விசிலடித்தபடி அறைக்கு வந்தேன்.
அறையைக் காலி செய்தேன்.
“அவங்க...? வொய்ஃப்?” என்றாள் ரிசப்ஷன் பையன்.
“அவ மனைவி இல்லே. கால்கேர்ள். நேத்து நைட்டே பணத்தோட போயிட்டா” என்றேன்.
போயிட்டா என்பதில் கூடுதல் அழுத்தம் கொடுத்தேன்.
அப்புறம் டிப்ஸை அதிகமாக வைத்தேன். அதன்பின் அவன் ஏன் பேசப்போகிறான்?
சென்னை.
அதே அடாசு நகரம். செல்போன் சகிதமாக மார்கொழுத்த பெண்கள் புடைத்த பின்புறம் தெரிய டிஷர்ட்-ஜீன்சில் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் எவனோ ஒரு கணவன் எங்கோ ஏமாந்து கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்தேன். சிட்அவுட்டில் தெரிந்த உருவம் திகைப்பூட்டியது.
அது. .அவள்... அது..
“வாங்க” என்றாள் அதே பசப்பல் புன்னகையூடன் கதவு திறந்த சந்திரிகா.
திரைக்கதையில் என்னவோ தப்பு என்று மனதிற்குள் அலாரம் அடித்தது.
“ரிகா..அது வந்து..நீ..”
“என்னங்க நீங்க..மறுபடி சேர்க்கறதுக்கு கஷ்டமா இல்லை. தேடிப் பொறுக்கி எடுக்கறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி” என்றவாறு கிச்சனுக்குள் சென்ற சந்திரிகா முதல்முறையாக எனக்குள் பயம் கிளப்பினாள். அப்போதும் அவள் காதில் ப்ளுடூத்துடன் செல்போன் இருந்ததைக் கவனித்தேன்.
நாம்தான் அவளை அக்கு வேறு ஆணி வேறாக அறுத்துப் பிரித்து எறிந்திருந்தோமே.
காபி டம்ளருடன் அருகே வந்த சந்திரிகாவின் இடது கையில் கட்டை விரல் மட்டும் காணவில்லை. அப்போதும் என்னவோ எஸ்எம்எஸ் செய்து கொண்டே காபியை தந்து விட்டு சொன்னாள்.
“இதாங்க எனக்கு ஒரே ப்ராப்ளம். மத்த எதுவும் வெட்டி எடுத்தா உடனே சேர்த்துட முடியுது. இப்ப பாருங்க. சமையலுக்கு கறிகாய் நறுக்கும் போது கட்டை விரலை நறுக்கிக்கிட்டேன். இதை மறுபடி கையில பொருத்தனும். ம்..சரியாயிடுச்சி பாருங்க” என்று சிரித்தாள்.
அந்தக் கட்டை விரல் அவள் கையில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு சிரித்தது.
முதல்முறையாக எனக்கு உயிர் பயம் வர ஆரம்பித்தது.