இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சிறுகதை

ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து....!

ஆல்பர்ட் பெர்னாண்டோ


அடையார் என்றதுமே எல்லோருக்கும் நினைவில் வருவது அந்த அதிசய ஆலமரம்தான். ஆனால் கிரிக்கு மட்டும் அடையார் "போட் கிளப்"பை ஒட்டி ஆரவாரமின்றி, அமைதியே உருவான அந்த நூலகம்தான்.

அவன் வசிக்கும் பெசண்ட் நகர் பகுதி நூலகத்தைவிட இந்த நூலகம்தான் கிரிக்குப் பிடித்துப் போயிருந்தது. விடுமுறை என அவன் வீட்டுக்கு வந்தால் தவறாமல் ஆஜராகி விடுவான்.

"கவிதைக் களஞ்சியம்" என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அவன் கண்கள் சுழன்று கொண்டிருந்தது. பாக்கெட் நாவல் சைஸிலிருந்த ஒரு புத்தகத்தை உருவி எடுத்தான்.

நார்வே நாட்டுக் கவிஞனின் " ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து..." என்கிற கவிதைத் தொகுப்பு அது.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோரமாகப் போய் உட்கார்ந்து கொண்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். நூலகத்தின் பின் பகுதி, அடையார் ஆற்றின்பக்கம் நீண்டு கிடந்தது. உச்சி வெய்யிலிலும் அடர்ந்து கிடந்த வேப்பமரங்களாலோ என்னவோ மனதுக்கு இதமான தென்றல் காற்று சீராக வந்து ஒரு புத்துணர்வை விசிறியது. வசதியாக சாய்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டத் துவங்கினான்.



"சொர்க்கம் பார்த்தேன்.
உன் கண்களில்.....
சொக்கிப் போய்விட்டேன்!
நான் கண்டு பிடித்த உலகம் நீ !
மாண்டு போகாத அன்பு - என்னுள்
பொங்கிப் பிரவகிக்கிறது.
உன் விழியில் நிறைந்து வழியும்
அன்பு என் இருதயத்தை நிறைத்திருக்கின்றது !"

- வாசித்த வரிகள் அவனுக்குள் சுகமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார்ந்து கொண்டது. சட்டென்று மன வலிகள் மறைந்து இதயம் இலவம் பஞ்சாய் மாறி உயர, உயர பறப்பது போன்றதோர் மென் சுகம்.

அடுத்தடுத்த பக்கங்களை அவன் மனம் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

அனிச்சையா அவன் விரல் அடுத்த பக்கத்தை வருடிப் புரட்டிய போது, வில்லிலிருந்து வெளிக்கிளம்பிய அம்பு போல சர்ரென்ற சறுக்கிக் கீழே விழுந்தது ஓர் துண்டுக் காகிதம். கிரி, அதைக் குனிந்து எடுத்தான்.

நம்மை வினோதமாகப் பார்க்கிறவர்களைப் பற்றி நான் கவலைப் படவில்லை - உன் கையை என் கையோடு கோர்த்து நட; திரும்பிப் பாராமல் நட; உலகமே நம் பின்னால் திரண்டு வருகிறது! - அந்தத் துண்டுத் தாளில் முத்து, முத்தான கையெழுத்தில் இந்த வரிகள்.

வரிகளுக்குக் கீழே இடது ஓரத்தில் "ரோஸி"- எம்.எஸ்.14. என்றிருந்தது.

இந்தக் கையெழுத்தைப் பிரசவித்த கையை எடுத்து என் கையில் கோர்த்துக் கொண்டால்... நினைவுகள் இனிப்பாக நரம்புகளில் ஊர்வலமாக ஊர்ந்துஇனம் புரியாத கிளர்ச்சியில்..." கிரியின் உடம்பு சிலிர்த்துக் கொண்டது. புத்தகத்தில் அவன் பார்வை மீண்டும் விழ... அட துண்டுக் காகிதத்திலிருந்த அதே வரிகள்... மீண்டும் வாசித்தான் கிரி. அதற்கு மேல் அவனுக்குப் பொறுமை இல்லை.



ரோஸியின் முகவரியை நூலகத்தில் பெறுவதில் அவனுக்கு எந்தச் சிரமும் இருக்கவில்லை. அந்தப் புத்தகத்தையும் பதிவு செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு வந்ததும் கடிதம் எழுத ஆரம்பித்தான்.

வேறு யாருக்கு? உருவத்தைப் பார்க்காது எழுத்துக்களை மட்டுமே தரிசித்து, நூலகத்தில் கருக்கொண்டு மனதில் வரித்துக்கொண்ட வசீகரிக்குத்தான்.

வார்த்தைகளை நாகரீகமாகக் கையாண்டு, வாக்கியங்களில் ஒருவித வரையறைக் கட்டுப்பாட்டோடு, அவள் எழுத்துக்களில் மிளிர்ந்த கவிதை வரிகளில் இவன் மனம் கோர்த்துக் கொண்டதை நயமாக வெளிப்படுத்தியிருந்தான்.

முகவரியை எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்து விட்டு வந்த போது அவனுக்கு வந்திருந்தது ஒரு அவசர ஓலை தந்திவடிவில். இலங்கைக்குச் செல்லும் விமானப்படையின் ஒரு பிரிவுக்கு அவன் பொறுப்பேற்று இன்று இரவே புறப்படவேண்டும், என்றது அந்தச் செய்தி. படித்துக் கொண்டிருந்தபோதே தொலைபேசி சிணுங்கியது.

மேஜர். சுரீந்தர் கோஷ் தான் பேசினார்.

விமானப் படையின் ஒய் பிரிவிற்கு தலைமை தாங்கி வழி நடத்துவது பற்றி தெரிவித்து விட்டு தாம்பரம் விமானப்படை விமான தளத்திற்கு இரவு ஏழு மணிக்கு வந்துவிட வேண்டுமென்றும் இரகசியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்பது மணிக்கு கிளம்பவேண்டும் என்றவர் தமது வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.

ஐந்து மணித்துளிக்கெல்லாம் விமானப்படையின் வாகனம் வீட்டுக்கு வந்துவிட்டது. எப்போதும் தயார் நிலையில் இருக்கும் ஒரு சூட்கேஸ், இன்னொரு தோல்பை, படுக்கை, மறவாமல் கவிதைப் புத்தகத்தினைத் தோல் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

அவ்வளவுதான். கிரி கிளம்பிவிட்டான். வாகன ஓட்டியை அடையார் அஞ்சல் நிலையத்தின் ஓர் ஓரமாய் நிறுத்தச் சொல்லிவிட்டு " ரோஸி"க்கு இன்னொரு கவரை அஞ்சல் பெட்டியில் சேர்த்தான்.

தீபாவளி நேரத்துப் பட்டாசு வெடிப்பதுபோல துப்பாக்கிக் குண்டுகளின் அலறல்; வழி தவறி மேகம் தரையிறங்கிவிட்டதோ என்பது போன்ற புகை மூட்டம்; அப்போது தொலைவில் விமானம் ஒன்று தீப்பந்தாக வெடித்துச் சிதறியது.



இத்யாதிகளுடனான சூழலில் யாழ் நகருக்கு அறுபது கல் தொலைவில் இருந்த முகாமில் இறங்க இடம் பார்த்து இவனது விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது. உயிருக்கு உத்திரவாதமில்லாத இடம். முப்பது சிப்பாய்கள் சென்ற டிரக் ஒன்று கண்ணி வெடியில் மாட்டி இரண்டு பேர்களை மட்டுமே இரத்தமும் சதையுமாக கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

முகாம் முழுக்க பரபரப்பு; முகங்கள் இருகி, சிரிப்பிழந்து சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருந்ததை அவனால் பார்க்க முடிந்தது.

ஸ்லோ மோசனில் நாட்கள் நகர்ந்ததாக கிரி எண்ணியது ரோஸியிடமிருந்து கடிதம் வரும் வரைதான்.

பலாலி விமானதளத்தருகேயுள்ள முகாமில் நள்ளிரவில் மின் விளக்குகள் மின்சாரத்தை விவாகரத்து செய்த இருட்டில் கிரி, மெழுகுவர்த்தி ஒளியில் தூக்கம் தொலைத்திருந்தான். கைகளில் கற்றையாக கடிதங்கள். சென்னையிலிருந்து வந்த இருபதாவது நாள் ரோஸியிடமிருந்து முதல் கடிதம் வந்தது.

"கவிதைகள் எழுத, படிக்கப் பிடிக்கும்; கவிதைகளை நேசிக்கத் தெரிந்தவர்களையும் எனக்குப் பிடிக்கும். என்று எழுதத் துவங்கியவள்,பத்து நாளைக்கு ஒரு கடிதமாகி, இப்போது இரண்டு நாளைக்கு ஒரு கடிதமாக எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறாள். கிரியும் அதற்கு ஈடாக எழுதிக்கொண்டிருக்கிறான்.

இரவு பகலின்றி பறந்து, திரிந்து அலுத்துச் சலித்து வருபவனுக்கு ரோஸியின் கடிதங்கள் களைப்பைப் போக்கி புத்துணர்வைப் பூக்க வைக்கும். அவள் எழுதியிருந்தாள்.

அன்பே! புயல் சூறாவளி எதுவும் நம்மைத் தடுக்க முடியாது - இந்தஉலகமே காதலர்களை உதறிவிட்டு,

ஓடினாலும் நாம் மட்டும் இருவர், ஒருவராக இணைந்திருப்பதை - எந்த சக்தியாலும் தடுக்க பிரிக்க முடியாது..!

- ஒரு கணம் சிலிர்த்துக் கொண்டான் கிரி.



காரணம், அன்று உச்சி வேளையில் நடந்த சம்பவமும் ரோஸியின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது, என்ற வரிகளையும் நினைத்துதான் அந்தச் சிலிர்ப்பு ஏற்பட்டது.

வவுனியாக் காடுகளின் அடர்ந்த பகுதியொன்றில் தற்காலிகமாக சிறு விமான தளம் அமைப்பது தொடர்பாக மூன்று டிரக்குகளில் சிப்பாய்களோடு கிரி சென்று கொண்டிருந்தான். வழியில் பச்சிளம் பாலகர்களோடு தாய்மார்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்து நடந்து கொண்டிருந்தனர். டிரக்கை நிறுத்தி விசாரித்தான்.

காட்டைக் கடந்து ஒரு சிறு கிராமத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

அவர்கள் தலைச் சுமையைவிட, கொடுமையான மனச்சுமையைச் சுமந்து, பசி பட்டினியோடு பயணித்துக் கொண்டிருக்கிற அவர்களின் நரக வாழ்க்கையை எண்ணி மனத்துயரப்பட்டான். தனக்குப் பின்னால் வந்த டிரக்கில் அவர்களை ஏறிக்கொள்ளும்படி சொன்னேன். 18 பெண்கள், 12குழந்தைகள்.

தங்களிடமிருந்த பிஸ்கட், பழங்களை எல்லோர்க்கும் கொடுக்கச் செய்தான். எதைப் பற்றியும் கவலையில்லாத சிறு பிள்ளைகளிடம் தமாஷாகப் பேசி சிரிக்க வைத்தான், கிரி.

அதில் ஒரு சிறுவனை, நீ பெரியவனாகிஎன்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டான்.

"இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாகி, முதல்ல சண்டைய நிறுத்தி அம்மா,அப்பாக்களோடு எல்லாரும் சந்தோஷமாஅவங்கவங்க வீட்டுல இருக்கச் செய்வேன். மிலிட்டிரியே வேணாம்னு சொல்லிருவேன்." என்றான்.

அந்தப் பிஞ்சு உள்ளம் கூட எந்த அளவு ரணமாகி இருக்கிறது என்பதனை எண்ணி கண்களில் நீர் துளிர்க்க கட்டி அணைத்துக் கொண்டான் கிரி. அவர்களை வழியில் அந்தக் கிராமத்தில் இறக்கி விட்டுவிடும்படி சொல்லிவிட்டு, கை அசைத்து வழி அனுப்பினான்.

அவர்களை அனுப்பிவிட்டு உடன் வந்த அந்தப் பகுதிப் பொறுப்பாளியான கர்னல்.வீரசிங்க நாயகா விடம் வரைபடத்தைக் காட்டி எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில் அந்தக் கொடூரம் மிக மோசமாக நடந்தேறி விட்டது.

தூரத்தில் காதைச் செவிடாக்கும் வெடியோசை. இது கண்ணி வெடியோசை போலிருக்கிறதே என்று கிரியும் மற்றவர்களும் அங்கு விரைந்தனர். என்ன கொடுமை? சற்று முன் பேசிச் சென்றவர்கள் வெடித்துச் சிதறி வெந்து கொண்டிருந்தார்கள்.

கவலையில்லாமல் சிரித்துப் பேசிய அந்தச் சின்னஞ்சிறுசுகள் வெளிச்சப் பந்துகளாய் வெந்துகருகிக் கொண்டிருந்ததைக் காணச் சகிக்காமல் மனதைக் கல்லாக்கி ததும்பியெழும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி மனசுக்குள் 'ஓ'வென கதறியழுதது வேறு யாருக்கும் தெரியாது.

அவர்களை வழியில் பார்க்கவில்லையென்றால் இவனுமல்லவா எரிந்து கருகிக் கொண்டிருப்பான். நாளும் நடக்கும் அவலங்கள் தான் என்றாலும்யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத பிஞ்சுகள் கண்ணெதிரே கருகியதை அவனால் தாங்க முடியவில்லை.கண்ணீர் வழிய ரோஸிக்கு இதை எழுதினான்.

இப்படி நாளும் நடக்கும் சம்பவங்களை, அனுபவங்களை கடிதங்களில் பகிர்ந்து கொள்வான்.

காலச்சக்கரம் சுழன்றதில் ஒரு வருடம் தாண்டிப்போயிருந்தது.

அடுத்த மாதம் 14ம் தேதி இரவு சென்னை வருகிறேன். இரவு 9-லிருந்து 9.30-க்குள் உன்னை எங்கு சந்திக்கலாம்? இடத்தை எனக்குத் தெரிவி. அங்கு அந்த நிமிடத்தில் உன் முன்பு நானிருப்பேன்.



ஓ! அனைத்திற்கும் அற்புதம் நீ!
வேறெந்த அற்புதமும்
வேண்டாம் எனக்கு
இந்த உலகில்
எல்லாமுமாக நான்,
விரும்புவது
உன்னை மட்டும் தான்
என் தேவதை நீ!
வேண்டும் நீ!எனக்கு
எப்போதும்...எப்போதும்... எப்போதும்..."

- உன் ப்ரியமுள்ள வாலண்டைன் என்று எழுதினான்.

இந்தியப்படை சுமந்த தபால்களில் இவன் தபாலும் பறந்து போனது. போன வேகத்தில் பதிலும் பறந்து வந்தது.

" உங்களைப் பார்க்கவேண்டுமென்கிற தவிப்பு நாளும் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் நாம் ஏன் சந்திக்கவேண்டும்? கடிதங்களில் சந்திப்பது மட்டுமே தொடர்ந்தால் போதாதா? என்ற எண்ணமும் எனக்குள் எழுகிறது. மடல்களில் நாம் பரிமாறிக்கொள்ளும் ஏராளமான எண்ணப் பகிர்வுகளில் இல்லாத சந்தோஷம் நம் சந்திப்பில் ஏற்பட்டுவிடுமா என்ன? நம் சந்திப்புக்குப் பிறகும் இந்த சந்தோஷம் தொடருமா?

ஒரு வேளை தொடராது போனால் இருக்கிற சந்தோஷத்தை விட்டுவிட்டு இல்லாத சந்தோஷத் தேடலில் நாம் இறங்க வேண்டுமா? நேற்றிரவு முழுக்கத் தூங்காமல் யோசித்தேன்.

பொழுதும் புலர்ந்தது; முடிவும் முகிழ்த்தது. நாம் சந்திக்கிறோம்.

அண்ணா சாலை ஸ்பென்ஸர் ப்ளாசாவில் மூன்றாம் தளத்தில் 3425வது எண் ஷாப்பிங் சென்ட்டர் முன்பு இருப்பேன்.

மாம்... என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பீர்கள்?

என் புகைப்படத்தைக்கூடப் பார்த்ததில்லை. இந்த ரோஸியிடம் ஒரு "ரோஜா"இருக்கும். அன்று இரவு என்னோடுதான் சாப்பிடுகிறீர்கள்! - பாதி பயமுறுத்தியும் மீதியை சந்தோஷத்திலும் முடித்து இருந்தாள் ரோஸி.

அன்று பலாலி விமான தளத்திலிருந்து சென்னைக்கு கிளம்பும் கிரி மனசு முழுக்க மகிழ்ச்சித் துள்ளல்கள். இவன் சாதனை என எதைஎதையோ பட்டியலிட்டு யார் யாரோ பாராட்டினார்கள்; வாழ்த்தினார்கள்.

மாலைகள், நினைவுப் பரிசுகள் கொடுத்து யார் யாரோ கை குலுக்கினார்கள். முகம் சிரித்துக் கொண்டிருந்தது. மனம் மட்டும் ஸ்பென்சர் ப்ளாசாவில் பறந்து திரிந்தது.

" என் மேனி சிலிர்க்க வைத்த அந்தக் கவிதை நல்லாள் எப்படி இருப்பாள்? கனவுக்கு உயிர் கொடுத்த காரிகையன்றோ! எடுத்த காரியம் யாவினும் வெற்றி தேடிக் கொள்ளக் காரணமாயிருந்த அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ! என் கனவு தேசங்களில் மட்டுமே கர்வமாக உலவியவள் இன்னும் சிறிது நேரத்தில் என் முன்னே..." அவன் மனம், அவன் செலுத்தும் விமானத்தைவிட வேகமாக ஸ்பென்சர் பிளாசாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

"ஸ்பென்சர் பிளாசா" - வேகமாக வெளியேறிக் கொண்டிருந்த ஜனக்கூட்டதைக் கடந்து, மேலேறும் தானியங்கிப்படிகளில் நிற்கப் பொறுமையின்றி தாவி ஓடி மூன்றாம் தளம் வந்தான்.

கடை எண் 3415... 20... 24 ... அவளா? வானத்துத் தேவதை வழிதவறி இங்கு இறங்கிவிட்டதா?



குஷ்பு, ரம்பா, சிம்ரன் இவர்களெல்லாம் சேர்ந்த கலவையோ! என அவன் மூளைக்கணினி ப்ராஸஸ் செய்து கொண்டிருந்தபோது 'டமால்' என அந்தத் திருப்பத்தில் வந்தவர் மீது இடித்து ஸாரி சொல்லித் திரும்பிய வேளையில் அந்தத் தேவதையைக் காணோம்.

கடை எண் 3425 என்றிருந்ததைப் பார்த்த அந்த இடத்தில் கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவோடு ஓர் வனிதை.

அந்த வனிதைக்கு வயது அறுபதுக்கு குறையாமல் இருக்கும். சட்டென்று முகம் வாடிப் போனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மறைத்து செயற்கைப் புன்னகையை படரவிட்டுக் கொண்டு,

"வணக்கம். நான்... கிரி... கிரிதரன்," கைகூப்பினான்.

கைகோர்க்க வந்தவன் கை கூப்பி நின்றான்.

"வணக்கம். வாங்க... நீங்க தான் கிரியா? "

"ஆமாம். வாங்க.... நாம போய் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே..." என்றான் கிரி.

"என்ன? என்னெப் பாத்ததும் தெகச்சுப் போயிட்டீங்களா?!"

"இல்லையே நா எதுக்கு தெகைக்கணும்? நீங்க தான் எல்லாம்..." அவன் முடிக்கவில்லை.

"ஆமா. ரோஸிக்கு எல்லாம் நாந்தான். ரோஸியோட அத்தை.

இப்பத்தான் ஓட்டல்ல டின்னர் ரெடியான்னு பாக்கப் போனாள்" என்று மூதாட்டி சொன்ன போது ஒரு நூறு மெர்குரி விளக்குகள் கிரியின் முகத்தில் பிரகாசிக்க "போகலாமே என்று கிரி குனிந்து ரோஸியின் அத்தை வைத்திருந்த பையை எடுத்து நிமிர்ந்தான்.

அங்கே...அப்போது...

"நான் ரோஸி" உதடு குவித்துச் சொல்லியதே கவிதை போலிருந்தது.

கிரியை நோக்கி கை நீட்டினாள். கை கோர்த்து நடந்தார்கள்.

"நம்மை வினோதமாகப் பார்க்கிறவர்களைப் பற்றி நான் கவலைப் படவில்லை - உன் கையை என் கையோடு கோர்த்து நட; திரும்பிப் பாராமல் நட; உலகமே நம் பின்னால் திரண்டு வருகிறது!"

- ஸ்பென்சர் ப்ளாசா மூடுகிற நேரமாகிவிட்டதால் உள்ளிருந்து திமுதிமுவென கூட்டம்,

கிரி - ரோஸிக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/shortstory/p4.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License