இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

ஜெய் ஜவான்

மலையாளம்: சந்திரசேகரன் தம்பானூர்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் அம்மாவின் அழைப்பு வந்தது. “டேய். முடி வெட்ட ஆளு வந்திருக்கு. வேகமா வா”. நான் உடனே வரமாட்டேன் என்ற அர்த்தத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓடினேன். அதைப் பார்த்த அம்மா “கூப்பிடறது அப்பாடா. வேகமா வாடா. இல்லாட்டா இந்த தடவ”. தங்கத்துக்குத் தெரியும். வீட்டில் நடக்கும் யுத்தத்துடைய காரணங்கள். அப்பாவின் அடி உதையும் என் அலறலும் அந்த அளவுக்குப் பிரசித்தமாக இருந்தது. அதனால் அம்மா சொன்னாள். “டேய். அடி வாங்காம வந்துடு”. தங்கம் அவள் தன்னுடைய பாவாடையில் ஒட்டிக்கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டு எழுந்திருந்தாள். அவளுடைய வீட்டுக்கு வெளிய்ல் இருந்த இடம்தான் எங்கள் விளையாட்டு மைதானம். அவளிடம் நிறைய விளையாட்டு பொம்மைகள் இருந்தன. அதனால் நானும், அம்புலியும், சரோஜினியும் எல்லோரும் ஒன்றுசேர்ந்துதான் விளையாடுவோம். சரோஜினியும் அம்புலியும் எப்போதும் விளையாட வருபவர்களில்லை.

தோட்டத்தில் இருந்து சிமெண்ட் போட்ட ஸ்லாஃப்கள் உண்டு. அதுதான் விளையாடப்போகும் வழி. ராத்திரியில் சுற்றி இருந்தவர்கள் அந்த ஸ்லாப்கள் மீது உட்கார்ந்துகொண்டு குடிப்பதும் உண்டு. காலியான பாட்டில்களை யாருக்கும் தெரியாமல் அடித்து உடைத்துப் போட்டுவிட்டுச் செல்வதும் உண்டு. தெளிவாக ஓடும் நீரில் உடைந்த பாட்டில்களின் கண்ணாடிச் சில்லுகளைப் பார்த்துப் பயந்த பலரும் ஸ்லாப்கள் மீது இருந்து விளையாடக்கூடாது என்று எங்களுக்கு தடை விதித்திருந்தார்கள். விளையாட முடியாமல் போன ஏமாற்றத்திலும், பயத்திலும் நான் முற்றத்தை அடைந்தபோது அப்பா ருத்ர தாண்டவமாடிக் கொண்டு நின்றார். கையில் கனமான கழி இருந்தது.

“கூப்பிட்டா வர்றதுக்கு உனக்கு என்ன இவ்வளவு நேரம்? ஸ்கூல் திறக்கப்போகுது இல்லயா? இப்பவாச்சும் தெண்டிப்பய மாதிரி சுத்திக்கிட்டு இருக்கறத நிறுத்தமாட்டியாடா?”. அப்பாவுடைய கண்கள் கோபத்தில் இரத்தச் சிவப்பாகியிருந்தன. அப்பாவுக்கு இரகசியமாக கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. அப்போதுதான் இந்த அளவு அவருடைய கண்கள் சிவந்துபோகும்.


“என்னோட முடிய வெட்ட வேணாம்”. அப்பா முகத்தைப் பார்க்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். “தெம்மாடி! எதுத்துப் பேசறியா?”. அப்பா முற்றத்திற்கு பாய்ந்து இறங்கி வந்தார். நான் வடக்கு திசை நோக்கி பாய்ந்து ஓடினேன். அவர் விடவில்லை. பாய்ந்து வந்து என்னைப் பிடித்து அடித்து நொறுக்கினார். நான் வானம் பிய்த்துக்கொண்டு போகிற மாதிரி அலறினேன். நெஞ்சில் அடித்துக் கொண்டேன்.

உடனே அம்மா வந்து தடுத்தாள். “போதும் போதும். அவன் முடி வெட்டிப்பான்”.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சாக்குட்டி தென்னை மரத்தடியில் நின்றுகொண்டு பீடி பிடித்துக் கொன்டிருந்தான். அங்கிருந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. கஞ்சாவாக இருக்க வேண்டும். அவன் ஆர்மியில் இருந்தபோது குளிர் தாங்குவதற்காக யாரோ சொல்லிக்கொடுத்ததுதான் இந்தப் பழக்கம். வடக்குப் பிரதேசத்தில் முன்பு ஆர்மியில் வேலை பார்த்தவன் அவன். ஆர்மியில் அவன் என்னவாக இருந்தான் என்று எனக்குத் தெரியாது. அங்கேயும் அவன் முடி வெட்டுபவனாகவே இருந்தான் என்று அப்பா சொல்கிறார். ஒரு முடி வெட்டுபவன் எப்படி யுத்தம் செய்வான்? சாக்குட்டி பல போர்களில் பங்கெடுத்திருக்கிறான். அந்தக் கதைகள் எல்லாமும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் சொல்வதும் அவனுக்குப் பிடிக்கும். ஆர்மியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் எங்கள் சுற்று வட்டாரத்திற்கு முடி வெட்டுபவனாகப் வந்தான்.

அவன் எங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டுமே உரிய முடிவெட்டுபவன். அவனுக்கு முடிவெட்டும் வேலை மட்டும் இல்லை கல்யாணம், சாவு, காதுகுத்து என்று எல்லாவற்றுக்கும் எப்படி வேலை செய்வது என்று தெரியும். அவனுடைய மனைவி பங்கி இதையெல்லாம் சரியாகச் செய்ய அவனுக்கு உதவினாள். நான் கண்ணைத் துடைத்துக்கொண்டு தென்னை மரத்தடிக்குப் போனேன். சாக்குட்டி அங்கே ஓலைகளால் கோடு போட்டு ஸ்டூலையும் தண்ணீரையும் வைத்திருந்தான்.

முடிவெட்ட எல்லாம் தயார்.

இனி ஆள் வந்தால் போதும். முதலில் அப்பா வந்தார். கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து துண்டைக் கட்டிக்கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்தார். கண்களில் அப்போதும் தீ கணல் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனால் நான் அங்கே நிற்கவில்லை.

வேகவேகமாக வராந்தாவுக்குப் போனேன். அங்கே சுவரில் இரண்டு கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. மேலே இருப்பது அப்பாவுடையதும், அன்னணுடையதும். கீழே இருப்பது என்னுடையது. அதற்கு மேல் எனக்குப் பிடித்த நடிகர் எம் ஜி ஆருடைய படத்தை வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்தேன்.


எம் ஜி ஆருக்கு நீளமான சுருண்ட முடி. எனக்கும் அதே மாதிரி முடி வளர்க்கவேண்டும். அந்த முடியைத்தான் இப்போது வெட்ட சாக்குட்டி வந்திருக்கிறான். அதைத்தான் இப்போது வெட்டச் சொல்கிறார்கள். வெட்டிவிட்டால் பிறகு வாரக்கணக்கில் மொட்டைத்தலையனாக நடக்கவேண்டும். அதைப் பார்த்து எல்லாரும் கிண்டல் செய்வார்கள்.

“கடவுளே. இவங்க எல்லாரும் செத்துப்போகட்டும். முதலில் சாகவேண்டியது சாக்குட்டிதான். அவனுக்கு மட்டும் அவன் விருப்பம் போல முடிய வளத்துக்கலாம். ஆம்பளப் பசங்க முடியப் பாத்தா அவனுக்கு கை துரு துருங்கும். துஷ்டன். மகா துஷ்டன்”. யாரோ என்னைக் கூப்பிடுவது போலத் தோன்றியது. அப்பாதான். நான் தலையைக் குனிந்துகொண்டு அங்கே போனேன். அப்பாவுடைய முடி வெட்டும் ஷேவும் முடிந்திருந்தது.

வேட்டியைக் கட்டிக்கொண்டு துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டே அப்பா கர்ஜனை செய்தார்.

“ஸ்கூல் திறக்கப்போகுது. முடிய வெட்டிக்கடா”. அதைக் கேட்டதும் என்னுடைய நெஞ்சு உடைந்துபோனது. ஆனால் அழமுடியாது. அழுதால் மறுபடி உதைதான். ஸ்டூலை எடுத்து மாற்றி ஓலையால் உதிர்ந்து கிடந்த முடியை எல்லாம் தட்டி அகற்றிவிட்டு புன்னகையுடன் சாக்குட்டி என்னைக் கூப்பிட்டான். “உக்காருப்பா”. நான் ஓலை மேல்இருக்கும்போது தேம்பிக்கொண்டே சொன்னேன். “என்ன மொட்டை அடிக்க வேணாம்”. “ஏய். இல்ல. பிள்ளைக்கு இன்னிக்கு பட்டாளக் க்ராப் தானே செய்யப்போறேன். உக்காரு. அழாத”. அவன் என்னை சமாதானப்படுத்தினான்.

சட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தலையைக் குடைந்து முடியை ஒரு தடவை கோதிவிட்டான். அப்புறம் மெதுவாக சொன்னான். “நான் முன்னால சண்டை போட்ட கதய சொல்றேன். அசையாம இருந்து கேளு”. நான் தலையைக் குனிந்து கொண்டிருப்பதைப் பார்க்காமலேயே அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“முன்னால சீனாவோட படை தயாரா இருந்த சமயம். அங்க ஓடிகிட்டிருந்த நதியோடக் கரையில நூருவான்னு ஒரு கிராம இருந்திச்சு. அங்க எல்லாரும் முஸ்லீம்ங்க. ஒவ்வொரு வீட்டுலயும் நூத்துக்கணக்கான குழி இருக்கும். அங்க எல்லா இடத்துலயும் சைனீஸ் ஆர்மி மைனிங் செஞ்சு வச்சிருந்திச்சு. “மைனிங்குனு சொன்னா என்ன?”. முனகல் குரலில் நான் கேட்டேன்.”ஏய். அது குழியில மறச்சு வைக்கற குண்டு”. யாரு மிதிச்சாலும் உடனே வெடிச்சுடும்.

கதைக்கு நடுவில் கத்திரிக்கோலின் உதடுகள் என்னுடைய தலையை சில் சில்லென்று ஆடிப்பாடி மேய்ந்து நடந்து கொண்டிருந்தது. “சீனாக்காரங்களோட பட்டாளம் ஒரே ராத்திரியில ரொம்பப் பக்கத்துல வந்துடுச்சு. மரங்க இருந்ததுனால எதயும் பாக்க முடியல. திடீர்னு நாயுங்க குரைக்கற சத்தம் கேட்டுச்சு. உடனே நாங்க ரைபிள எடுத்துகிட்டு பொசிஷன்ல நின்னோம். சில பேர் கேம்ப்புக்கு முன்னால பட்டுன்னு குடிச்சதும் படபடான்னு வெடிகளோட சத்தம். அரை மணிநேரம் யுத்தமா இருந்திச்சு. அதுக்கப்புறம் எதிரிங்க படை வந்த சுவடே தெரியல. எல்லாரும் ஓடிட்டாஞ்க”. “இப்ப என்னோட தலையிலயும் அதே யுத்தம்தான் நடக்குது. ஷெல்லுங்க பாயுது. குண்டுங்க விழுது”. நான் கண்களை மூடிக்கொண்டு கதையுடைய சுவாரசியத்தில் மூழ்கிப் போயிருந்தேன்.

அப்புறம் சாக்குட்டி மிஷினை எடுத்தான்.

“அய்யோ. எனக்கு மிஷின் வேணாம்”. நான் யாசிப்பதைக் கேட்காமல் சாக்குட்டி என்னுடைய தலையைப் பலத்துடன் பிடித்து தன் இரண்டு கால் முட்டிகளுக்கு நடுவில் வைத்து அமுக்கி வேலையை ஆரம்பித்தான். என்னால் அசையக்கூட முடியவில்லை. அந்தக் கால்கள் கரிய இரும்பைக் கொண்டு செய்தது போலிருந்தது. அழக்கூட திராணி இல்லாமல் நான் சோர்ந்து போனேன். கடைசியில் எல்லாம் முடிந்து சாக்குட்டி என்னைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்பிவிட்டான். முதுகிலும் மார்பிலும் கிடந்த முடிகளை துண்டால் துடைத்து எடுத்தான். அந்தத் துண்டில் சகிக்கமுடியாத நாற்றம் அடித்தது. இடது கையால் நான் தலையைத் தடவிப் பார்த்தேன். “அடக் கடவுளே. பலாப்பழத்தைத் தொட்டது மாதிரி அத்தனையும் முள் மாதிரி குத்தற குட்டி குட்டி முடிங்களா இருந்துச்சு”. நான் மின்னல் வேகத்தில் முற்றத்துக்குப் போனபோது அம்மா என்னைப் பார்த்து சிரித்தாள்.

“ஆஹா. இப்பதான் அழகாயிருக்க”. நான் தேம்பித் தேம்பி அழுதேன். வடக்கு பக்கத்துக்குப் போனேன். அங்கே நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் எல்லாவற்றையும் அப்படியே தலையில் ஊற்றிக் கொண்டு சங்கடம் தீரும்வரை குளித்தேன்.

அப்புறம் தலையை வாரவேண்டிய அவசியமே வரவில்லை. இருந்தாலும் அம்மா தலையைத் துடைத்து நெற்றியில் திருநீறு இட்டு முகத்தில் பவுடர் பூசினாள். பின்னாலேயே ஒரு முத்தமும். அம்மா முத்தம் தரும் போதெல்லாம் நானும் அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அன்றைக்கு எதிர்ப்பைக் காட்ட நான் முத்தம் கொடுக்கவில்லை.

கொஞ்ச நேரம் கழித்த பிறகு தென்னை மரத்தடியை சுத்தப்படுத்திவிட்டு சாக்குட்டி ஸ்டூலுடன் வந்தான். அப்புறம் கிழக்குப் பக்கத்தில் இருந்து கையையும் காலையும் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டான். “சாப்பாடு தயாராயிருக்கு. சாப்பிட்டுப் போலாம்”. அம்மா அன்போடு சொன்னாள். “வேணாம் ஆயி. இப்பவே நேரமாயிடுச்சு. இன்னும் ரெண்டு வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் குடிசைக்குப் போகணும்”.

கொஞ்சநேரத்திற்கு அப்புறம் அவன் சொன்னான்.

“அப்படின்னா கொஞ்சம் கஞ்சித் தண்ணியயாச்சும் குடிச்சுட்டுப் போலாம்”

அம்மா உடனே என்னை அடுக்களைக்கு அழைத்தாள். நான் அங்கே போன போது பெரிய கிண்ணம் நிறைய வாசனையுடன் ஆவி பறக்கும் கஞ்சியை அம்மா நிரப்பி வைத்திருந்தாள். நான் அதை வராந்தாவில் கைப்பிடி மேல் வைத்ததும் சாக்குட்டி வந்து அதை எடுத்துக்கொண்டான்.

முதலில் கொஞ்சம் குடித்து ருசி பார்த்த பிறகு அவன் ஒரே மூச்சில் பாத்திரத்தை காலி செய்துவிட்டு கிண்ணத்தை வைத்தான். அப்போது தோப்புப் பக்கத்தில் இருந்து பெரிய அலறல் கேட்டது. அங்கே ஏதோ ஆபத்து. ஆட்கள் பாய்ந்து ஓடினார்கள். சாக்குட்டியும் அங்கே பாய்ந்தான். பின்னால் அப்பாவும் ஓடினார். அங்கே வாய்க்காலில் சரோஜமும் கன்று குட்டியும் விழுந்திருக்கிறார்கள். வயலில் மேய்ந்து கொண்டிருந்த கன்றை கூட்டிக்கொண்டு வரும் வழியில்தான் அது நடந்தது. எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்க சாக்குட்டி மின்னல் வேகத்தில் வாய்க்காலில் குதித்தான்.

மற்றவர்கள் கயிறுடன் வரும்போது சரோஜத்தையும் கண்றுகுட்டியையும் அவன் அலாக்காகத் தூக்கி எடுத்துக்கொண்டு வந்தான். கரையில் இருந்தவர்கள் சரோஜத்தையும் கன்று குட்டியையும் வாங்கிக் கொண்டார்கள். உடனே சாக்குட்டி நனைந்த உடம்புடன் கரைக்கு வந்தான்.

சரோஜத்தை கல்லில் மேல் கவிழ்த்துப் படுக்கவைத்து வாந்தி எடுக்கவைத்தான். சோர்ந்துபோயிருந்த சரோஜம் கண் விழித்து அம்மாவைப் பார்த்து புன்னகைத்த போது எல்லோருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது. நனைந்த உடம்புடன் சாக்குட்டி எங்கள் வீட்டு முற்றத்துக்கு வந்தான். வேட்டியின் ஈரத்தைப் பிழிந்துவிட்டு அவன் நிம்மதியான மனதோடு சிரித்தான்.

ஒரு பழைய வேட்டியை எடுத்து அப்பா அவனுக்குக் கொடுத்தார். அதை வாங்கி மறைவாகப் போய் ஈரத்துணியை மாற்றிக்கொண்டான். போட்டுக்கொண்டிருந்த கால்சட்டையை கழற்றி அதை வைத்து முதுகையும் மார்பையும் துடைத்துக்கொண்டான். என்னுடைய மனது சொன்னது. “சாக்குட்டி வீரனாக்கும். தீரனான பட்டாளக்காரன்”.

வராந்தாவில் தொழில் ஆயுதங்கள் வைத்திருந்த பையை எடுக்கும் போது அவனுடைய காலில் இருந்து இரத்தம் வருவதை நான் பார்த்தேன். கோபத்தையும் பகையையும் மறந்து நான் அலறினேன். “அய்யோ. கால்ல ரத்தம்”. அப்போதுதான் அவன் அதைப் கவனித்தான். குத்திய இடத்தில் இருந்த காயத்தைப் பார்த்தான்.

“வலிக்கலியா உனக்கு?”. நான் கனிவோடு கேட்டேன்.

அவன் அலட்சியமாக காயத்தை அழுத்திப் பிடிக்க அப்பா தோட்டத்தில் இருந்து ஏதோ பச்சிலையை எடுத்துக்கொண்டு வந்து அந்த காயத்தில் ஈரத்துணியால் கட்டிவிட்டார். பிறகு கைவசம் வைத்திருந்த கஞ்சா பொதிந்த ஒரு பீடியை அவனிடம் நீட்டிக்கொண்டு அப்பா சொன்னார். “இந்தா. இத ஊது. வலி குறயட்டும்”. அவன் அதை ஆசையோடு வாங்கி இழுத்து இழுத்து ஊதினான். பிறகு அம்மாவைப் பார்த்து அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்.


“இதயெல்லாம் பாத்து நீங்க ஒண்ணும் பயப்படாதிங்க. பட்டாளக்காரனுக்கு காயமும் ரத்தமும் ஒன்னும் புதுசு இல்ல”. அந்தக் காயத்தைத் தடவிக் கொண்டே அவன் சொன்னான். “முன்னால சர்தார்ஜி சொல்லுவாரு. வளத்த அம்மாவும் பெத்த அம்மாவும் நம்மளோட நாடுதான்னு. அப்படின்னா அப்பா யாரு? நம்ம பட்டாளக்காரந்தான். அதாவது ஜவான். ஒரு பட்டாளக்காரன் சகலவிதமான பிரஜைகளையும் மிருகங்களையும் பாதுகாக்கணும். அது அவனோட டூட்டி. நாடே தூங்கிக்கிட்டு இருந்தாலும் தூங்காதவங்கதான் அவுங்க”. அவன் பீடியுடைய கடைசிப் புகையையும் அங்கேயே நின்று உள்ளே இழுத்துத் தீர்த்தான்.

கொஞ்ச நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. ஈரமாக இருந்த கால்சட்டையால் காலில் வந்துகொண்டிருந்த இரத்தத்தைத் துடைத்து எழுந்திருந்தான். “நான் போறேன். ரொம்ப நேரமாச்சு”. அவன் எழுந்திருந்தான். நொண்டியபடியே வேலியைக் கடந்தான்.

நான் மொட்டை அடித்ததுக்கு அப்புறம் ஸ்கூல் திறக்கும்வரை வெளியில் எங்கேயும் போகவில்லை.

புதிய கிளாஸுக்கு உள்ள பழைய புத்தகங்களை தேடிப் பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து அதைப் படித்து பொழுதைப் போக்கினேன். மழைக்காலமும் வந்தது. ஸ்கூல் திறந்தது. புதிய உடை புதிய நிக்கர். தங்கம் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அவள் மேலும் அழகாகியிருந்தாள். கொஞ்சம் குண்டாகி இருந்தாள். ஸ்கூலுக்குப் போகும் வழியில் முன்னால் போய்க்கொண்டிருந்த அவள் வயல் வரப்பைக் கடக்க எனக்கு உதவ கை நீட்டினாள். எனக்கு அப்போது சாக்குட்டி ஞாபகம் வந்தது. அவளுடைய கையைத் தட்டிவிட்டு தைரியத்தோடு வரப்பைத் தாண்டினேன். முதல் நாள். வருகையைப் பதிவு செய்துவிட்டு டீச்சர் எல்லோரையும் அறிமுகப்படுத்தினார்.

“நீங்க யாராகணும்னு ஆசைப்படறீங்க”. அவர் கேட்டார்.

பல பிள்ளைகள் பல பதில்களை சொன்னார்கள். என்னுடைய முறை வந்தபோது “நான் ஒரு பட்டாளக்காரனாகணும்” என்று பதில் சொன்னேன். அப்போது டீச்சருடைய கண்கள் பளபளத்தன. புன்முறுவலோடு டீச்சர் வந்து கேட்டார்.

“என்னடா. பட்டாளத்து மேல அப்படி ஒரு ஆசை?”. “உலகம் தூங்கினாலும் தூங்காதவங்க பட்டாளக்காரங்க”. சாக்குட்டியோட வார்த்தைகளை கடன் வாங்கினேன்.

டீச்சர் வந்து தோளைத் தட்டினார். “வெர்ரி குட்”. மத்தியானத்துடன் ஸ்கூல் விட்டுவிட்டது.

நல்ல பசி. வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது பங்கி அடுக்களை வாசலுக்குப் பக்கத்தில் இருந்து அழுவது கேட்டது. அம்மா தாடைக்குக் கையை கொடுத்து துக்கத்தோடு உட்கார்ந்திருந்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். சாக்குட்டி செத்துப் போயிட்டான்! காரணம் தெரியவில்லை. ஒருவேளை என்னோட சாபத்தாலா?. அவனுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனை ஸ்கூல் சேர்க்க உதவி செய்யவேண்டும். அம்மா என்னுடைய ஒரு ஜோடி சட்டை நிக்கரை எடுத்து வைத்தாள். அவர்களுடைய பனை மரப்பெட்டியில் நிறைய அரிசியையும் கூடவே இரண்டு தேங்காயையும் கொடுத்தாள்.

பங்கி கிளம்பும்போது அம்மா சொன்னாள். “இந்த காலத்துல வாழக் கஷ்டப்படாம போனதுதான் புண்ணியம். என்ன தேவைன்னாலும் நீ வா. பையனுக்கும் உனக்கும் உள்ளத தெய்வம் கொடுக்காம இருக்கமாட்டாரு. நாட்டுக்காக யுத்தம் செஞ்ச ஆள் இல்லயா போய்ச்சேந்தது? நல்லதே நடக்கும்”.

பங்கி கண்ணைத் துடைத்துக்கொண்டு படி இறங்கினாள்.

எனக்கு அப்போது பசியே ஏற்படவில்லை. அது தெரியாமல் அம்மா கேட்டாள்.

“ஏண்டா. உனக்கு பரிமாறட்டுமாடா?”. அம்மா என்னைப் பார்த்தாள். அப்போது ஒரு ஆள் நிழல் நொண்டி நொண்டி நடந்து போவதை நான் பார்த்தேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/translation/p14.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License