இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

மண் உண்டியல்

மலையாளம்: மசீனா மாதவன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


குதிரை வண்டிக்காரனான மாமா தங்கப்பன் வீட்டுக்கு விடுமுறையைச் செலவழிக்க பத்து வயதுக்காரன் உன்னி வந்திருந்தான். மீனவர்கள் நிறைய பேர் வாழும் ஒரு திட்டுப்பகுதியில்தான் தங்கப்பனுடைய வீடு இருந்தது. மாமா வீட்டில் விளையாடத் தோழர்கள் யாரும் இல்லாததால் கிராமத்தில் இருந்து வந்திருந்த் உன்னி அப்பகுதிக் காட்சிகளை கண்டு ரசிக்கக் கிளம்பினான்.

காயளையும் கடலையும் கண்டல் காடுகளையும் தினமும் போய்ப் பார்ப்பதுதான் அவனுடைய அன்றாடப் பொழுதுபோக்கு. தங்கப்பனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் காயலைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த பங்களாவில் ஆங்கிலோ இந்தியக்காரி நிம்மி பெர்னாண்டஸ் இருந்தாள். ஃப்ராக் போட்டுக் கொண்டு முடியைப் பாஃப் கட் வெட்டி ஒரு அல்சேஷன் நாய்க்குட்டியுடன் நடைப்பாதையில் குலுங்கிக் குலுங்கி நடந்து போகும் நிம்மி ஆயாவைப் பார்த்து ரசிப்பது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் நிம்மி ஆயாவுக்கு உன்னியைப் பார்த்தாலேப் பிடிக்காது.

கிராமப்புறத்துக்காரனான அவனிடம் இருந்த குறைகளை மட்டுமே அவள் பார்த்தாள். அதனால் நிம்மி ஆயாவுடைய பங்களா இருக்கும் சுற்றுப்புறப் பகுதிக்கே அவன் போவதில்லை. இங்கிலாந்தில் குடியிருந்த நிம்மியுடைய இளம் வயது மகன் ஒரு நாள் காணாமல் போனான். பல வருடங்கள் ஆன பிறகும் மகன் திரும்பி வராததால் நிம்மியும் அவளுடைய புருஷன் பெர்னாண்டஸும் இங்கிலாந்தில் இருந்து ஊருக்குத் திரும்பினார்கள்.

பெர்னாண்டஸ் இறந்த பிறகு தனிமைப்பட்ட நிம்மி ஒரு வேலைக்காரியுடன் பங்களாவில் வசிக்க ஆரம்பித்தாள். மகனுடைய தோழனும் தூரத்துச் சொந்தக்காரனுமான டேவிஸ் மனைவி மகளுடன் நிம்மியோடு சில நாட்கள் தங்க இங்கிலாந்தில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். டேவிஸ் நிம்மிக்குச் சொந்த மகனைப் போல. டேவிசுக்கு நிம்மி தன் சொந்தத் தாய் போல.


ஒரு நாள் டேவிஸ் இயற்கைக்காட்சிகளைக் காண, அவற்றைப் புகைப்படம் எடுக்க, தன் கேமராவுடன் வெளியில் இறங்கிய போதுதான் உன்னி அவரைப் பார்த்தான்.

கையில்லாத பனியன். முழங்கால் வரை நீளமான நிக்கர். தலையில் தொப்பி. கழுத்தில் கேமராவுடன் நடக்கும் நீண்டு மெலிந்த டேவிஸை உன்னி அதிசயத்தோடு பார்த்தான்.

அவர் நடந்து போன அதே வழியிலேயே அவனும் நடந்தான். கடந்த நாட்களில் உன்னி போன இடங்கள் எல்லாவற்றுக்கும் சென்று புகைப்படங்களை எடுத்த போது அவரை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நடை, உடை பாவணையில் ஒரு துரை மாதிரி இருக்கும் ஆளுக்கு மலையாளம் பேசத்தெரியுமா என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.

இருந்தாலும் அவருக்குப் பின்னாலேயே அவனும் நடந்தான். காயல் கரையில் படகுத்துறைக்குச் சென்ற அந்த ஆள், அங்கே இருந்த கிழவனிடம் கேட்டார். “அக்கரைக்கு போகறதுக்குப் படகு எப்ப வரும்?”

அந்த ஆள் மலையாளம் பேசுவதைப் பார்த்தபோது உன்னிக்கு உற்சாகம் பீறிட்டது. “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே ஒரு படகு போச்சு? இனிம அரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் அடுத்த படகு வரும்” உன்னி சொன்னான்.

அவருக்கு முன்னால் போய் நின்று கொண்டு உன்னி கேட்டான். “யாரப் பாக்க அக்கரைக்கு போகணும்?”

அவர் அவனைப் பார்த்து புன்னகை செய்தார்.

“யாரயும் பாக்கறதுக்கு இல்ல. இயற்கைக்காட்சிங்களப் பாக்கத்தான். என்ன? என்னோட வர்றியா?”

“பாக்கறதுக்கு அழகான காட்சிங்க இங்கயே ஏராளமா இருக்கே? தீவுத்திட்டும் காயலும் கண்டல் காடுகளும் கடலும் தேவாலயங்களும் எல்லாம் இங்க இருக்கே? இதெல்லாத்தயும் பாத்து முடிச்சாச்சா? இல்லாட்டா வா. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்”

அந்த பதில் டேவிசுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் யோசித்தார்.

உன்னி டேவிசின் பதிலுக்குக் காத்துக்கொண்டிருக்காமல் முன்னால் நடக்க ஆரம்பித்தான். அவரும் அவனுக்குப் பின்னால் நடந்தார். திரும்பிப் பார்த்து, அவன் அவரிடம் கேட்டான். “இங்க வர்றது இதுதான் முத தடவயா?”

“இல்ல. லண்டன்லே இருந்து வருஷத்துக்கு ஒரு தடவ நான் இங்க வர்றதுண்டு. ஆனா இந்தக் காட்சிங்கள பாக்கறதுக்கு வாய்ப்பு கிடைக்கல. நிம்மி அத்தை எங்களை கோவாவுக்கும் மைசூருக்கும் கூட்டிகிட்டுப் போயிடுவாங்க. அங்கயும் பாக்கறதுக்கு நிறய இருக்கு.

இந்தத் தடவ தேக்கடியயும் மூணாறயும் போய்ப் பாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தோம். ஆனா அத்தைக்கு உடம்பு சரியில்ல. அதனால அங்கல்லாம் போகல. பேசியும் காட்சிகளைக் கண்டு ரசித்தும் கேமராவில் படமெடுத்தும் அவர்கள் நடந்தார்கள்.

டேவிஸ் உன்னியிடம் கேட்டார். “உனக்கு போட்டோ எடுக்கறது பிடிக்குமா?”

“இயற்கைக்காட்சிகளை படம் வரையறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்கூல்ல ஓவியப் போட்டிங்கள்ல பங்கெடுத்து நிறயப் பரிசு வாங்கியிருக்கேன்.

அவனுடைய பதில் அவரைச் சந்தோஷப்படுத்தியது.

அவர் சொன்னார். “அப்படீன்னா நீ சாதாரணமான ஆளு இல்ல. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒரு வழிகாட்டியா எனக்கு நீ கிடச்சது என்னோட அதிர்ஷ்டம்”

அடுத்த நாள் கடலோடு சேர்ந்து இருந்த மலையையும் அதையும் தாண்டி இருக்கும் கோட்டையையும் காட்டிக்கொடுக்கறேன் என்று சொல்லி அவன் விடை பெற்றுக் கொண்டான்.


அடுத்த நாள் விடிகாலையிலேயே மாமாவின் அனுமதியோடு உன்னி டேவிஸ் சாருக்கு இடங்களைக் காட்டித்தர வீட்டில் இருந்து புறப்பட்டான். நிம்மி ஆயாவுடைய காரில் ஏறி பயணிக்கும் அடங்காத ஆர்வத்தோடு அவன் கிளம்பினான். அது ஃபோர்டு காரின் ஒரு பழைய மாடல். சிவப்பு நிறம். அப்படி ஒரு காரை அவன் பார்ப்பதே அதுதான் முதல் தடவை. அதில் ஏறிப் பயணம் செய்ய ஒரு அரிய வாய்ப்புதான் இப்போது அவனுக்குக் கிடைத்திருக்கிறது.

அதிக எதிர்பார்ப்புகளோடு அவன் நிம்மி ஆயாவின் வீட்டுக்கு முன்னால் போய் நின்றான். கேட்டின் இடைவெளி வழியாக அவன் உள்ளே எட்டிப் பார்த்தான். அந்த சிவப்புக்கார் அங்கே இல்லை. பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. “அந்த ஆள் என்னை ஏமாத்திட்டாரா? காரையும் எடுத்துகிட்டு எல்லா இடத்தயும் சுத்திப் பாக்க அந்த ஆள் தனியாவே போயிட்டாரா?

மலையாளியா இருந்தாலும், பிறந்ததும் வளர்ந்ததும் எல்லாம் லண்டனில்தானே? அந்த நாட்டில இருக்கறவங்க இப்படிப்பட்டவங்களா இருப்பாங்க போல இருக்கு. யாருக்குத் தெரியும்? சின்னப் பையனான என்னைப் போய் ஏமாத்த அந்த ஆளுக்கு எப்படி மனசு வந்துச்சு? என்னை ரொம்பப் பிடிக்கும்னு சொன்னது கூட சும்மாதான் போல இருக்கு. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துட்டோம் இல்லயா? கேட்டப் பூட்டவும் இல்ல. யாராச்சும் உள்ள இருப்பாங்க. தட்டிப் பாக்கலாம்” அவன் யோசித்தான்.

கேட்டைத் தட்டி ஓசை ஏற்படுத்தினான். நடுத்தரவயதுக்காரி ஒருத்தி உள்ளேயிருந்து வெளியில் வந்தாள். பின்னாலேயே எட்டு வயசு இருக்கக்கூடிய ஒரு சிறுமியும் ஓடி வந்தாள். “யாரு? என்ன வேணும்?” நடுத்தர வயதுக்காரி கேட்டாள்.

“என்னோட பேரு உன்னி. டேவிஸ் மாமாவப் பாக்கறதுக்காக வந்தேன். காலையிலேயே இங்க வரச்சொன்னாரு”

“டேவிஸ் இங்க இல்ல. இங்க நிம்மி ஆண்டிக்கு சுகமில்ல. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டுப் போயிருக்காரு. எப்ப வருவாருன்னு சொல்ல முடியாது” அவள் சொன்னாள்.

நிராசையோடு நின்ற அவனுக்கு அருகில் அந்தச் சிறுமி ஓடி வந்தாள். நடுத்தர வயதுக்காரி விலக்கிவிட்டாள் என்றாலும், சிறுமி அவனிடம் குசலம் விசாரித்தாள்.

முன் தினம் அப்பா சொல்லிக் கொண்டிருந்த உன்னிதான் அது என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவன் பெயரைக் கேட்டான். “ஃப்ப்ரெடி”

ஃப்ப்ரெடியோட இங்கிலீஷ் கலந்த மளையாளம் உன்னிக்குப் பிடித்திருந்தது. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு பிரச்சனையில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. கடலையும் மலையையும் அதோடு சேர்ந்து இருக்கும் கோட்டையையும் காட்டித்தர ஒத்துக்கொண்ட அவனிடம் அவள் கேட்டாள்.

“அது எல்லாத்தயும் எனக்கும் காட்டித்தர முடியுமா?”

“காட்டித்தரலாமே. இங்க இருந்து அந்த இடம் எல்லாம் கொஞ்ச தூரத்துல இருக்கு. கொஞ்சம் நடக்கணும்”

யோசித்துவிட்டு அவன் சொன்னான். “இப்பவே கிளம்பினா மாமாவோட குதிரை வண்டியில ஏறி நாம கடற்கரையில போய் இறங்கலாம்” உடனே வருவதாகச் சொன்னாள்.

நடுத்தரவயதுக்காரியிடம் சொல்லிவிட்டு அவள் உன்னியோடு கிளம்பினாள்.

குதிரை வண்டிப் பயணம் அவளுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. அதை ரசித்தாள். கடலோடு சேர்ந்து இருந்த மலையை அதிசயமாக பார்த்தாள். அப்பாவோடு பல நாடுகளுக்கும் அவள் போயிருக்கிறாள். அங்கே எங்கேயும் இதுவரை பார்க்காத காட்சிகள் அவையெல்லாம். திதி கொடுப்பதற்காக கடற்கரைக்கு வந்த ஆட்கள், பூசாரிகளை அவர்கள் செய்யும் பூசைகளைப் பார்த்து எதுவும் புரியாமல் அவள் நின்றாள்.

இறந்து போனவர்களுக்காக செய்கிற பூசைகள்தான் அவை என்று உன்னி அவளுக்குப் புரிய வைத்தான். கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளைப் பார்த்து “இவங்க எங்க இங்க?” என்ற கேள்விக்குறியுடன் அங்கே நடப்பதைப் வியப்போடு அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உன்னி சொன்னான். “நம்ம நாட்டோட இயற்கைக் காட்சிங்களப் பாத்து ரசிக்கவும், நம்ம சாப்பாட்ட எல்லாம் ரசிச்சு ருசிச்சுப் பாக்கறதுக்கும் வெளிநாட்டில இருந்து அவுங்க இங்க வந்திருக்காங்க”


கடற்கரையில் கைவினைப் பொருட்களை விற்கும் கடைக்கு முன்னால் அழகழகாக இருந்த ஒவ்வொரு பொருளையும் பார்த்து நின்ற அவள் ஒரு மண் உண்டியலைப் பார்த்து “அது என்ன?” என்று கேட்டாள்.

“எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. அது எதுக்கு பயன்படுது?”

“அதான் உண்டியல். நாணயங்கள அதுல சேமிச்சு வைக்கலாம்.

குழந்தையாக இருந்தப்ப பல நேரத்துலயும் கிடைச்ச பாக்கெட் மணிய, நான் இந்த மாதிரி உண்டியல்லதான் போட்டு வைப்பேன். திருவிழா வர்றப்ப அந்த உண்டியல உடைப்பேன். அதுக்குள்ள நிறயக் காசு இருக்கும். அதவச்சுதான் திருவிழாக் கடையிலேர்ந்து எனக்குப் பிடிச்சதெல்லாத்தயும் நான் வாங்குவேன். உனக்கு இதெல்லாம் ஒன்னும் தேவையில்லயே?

இருந்தாலும் பல நாடுகளுக்குப் போகற நீ, அந்தந்த நாட்டோட நாணயங்கள சேகரிச்சு இந்த உண்டியல்ல போட்டு வைக்கலாம்” அவன் சொன்னான்.

“சரிதான். எனக்கு ஒன்னு வாங்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா வாங்கறதுக்கு கையில காசு இல்லயே?” அவள் நிராசையோடு சொன்னாள்.

காசு கையில் இல்லாத உன்னியும் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தான்.

“அம்மா ஒன்னும் சொல்லலைன்னாலும் நிம்மிப் பாட்டி எங்கிட்ட நிறய சண்டை போடுவாங்க”, இடையில் புகுந்து அவள் சொன்னாள்.

அவர்கள் நடந்து வீட்டுக் கேட்டுக்கு முன்னால் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஆக்ரோசத்தோடு நின்று கொண்டிருந்த அவளுடைய அம்மாவைப் பார்த்தார்கள். உன்னிக்கு முன்னால் அவள் ஃப்ப்ரெடியை அடித்து நொறுக்கினாள்.

அழுதுகொண்டே ஃப்ப்ரெடி வீட்டுக்குள் ஓடிப் போய் மறைந்தாள்.

கேட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த உன்ன்னியை திட்டித் தீர்த்தாள். அவனுக்கு வேதனையாக இருந்தது. அவன் அழுதுவிடுவான் போலிருந்தது.

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து வெளியே வந்த டேவிஸ், உன்னியைச் சமாதானப்படுத்தினார். விடை கொடுத்தனுப்பினார்.

கொஞ்ச நாட்கள் அவனைப் பங்களா சுற்றுவட்டாரத்தில் எங்கும் காணவில்லை. ஃப்ப்ரெடிக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் அவள் உன்னியைப் பார்க்க தங்கப்பனுடைய வீட்டுக்குப் போனாள். “என்ன? ஏன் இத்தன நாளா வரவேயில்ல?” அதைக் கேட்டபோது காய்ச்சலாக இருந்ததால் வரவில்லை என்று உன்னி சொன்னதை அவள் நம்பவில்லை.

ஒரு கள்ளச்சிரிப்போடு சொன்னாள். “எனக்குத் தெரியும். எங்கிட்ட கோவிச்சுகிட்டுதானே வரல? கோபத்த மாத்த நான் ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன். அவள் தன் கையில் இருந்த பரிசுப் பொட்டலத்தை அவனுக்கு நேராக நீட்டினாள்.

சந்தோஷத்தோடு அவன் அதை வாங்கினான். திறந்து பார்த்தான். பன்னிரண்டு நிறங்களுடன் உள்ள கலர் பென்சில்கள். அந்த மாதிரி வெளிநாட்டு பென்சில்களை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை.

மகிழ்ச்சியால் அவனுடைய முகம் பூரிப்பதைப் பார்த்து அவள் சொன்னாள். “அப்பா சொன்னாரு. நீ நல்லா படம் வரைவன்னு. இது பிடிச்சிருக்கு இல்லயா?”.

“எனக்கு ரொம்ப சந்தோஷம்”

“இன்னமும் நிறய வரையணும். அப்புறம்... ரெண்டு நாள்ல நாங்க லண்டனுக்குத் திரும்பிப் போறோம். இதயும் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். சரி. நான் போகட்டுமா? அம்மா பாத்ரூமுல இருக்கற நேரத்துலதான் நான் இங்க வந்தேன். லேட்டாச்சுன்னா பிரச்சனையாயிடும்”

அவன் அவளுக்கு நன்றி சொன்னான்.

கை வீசி விடைபெற்றபடி அவள் வீட்டுக்கு ஓடினாள். பரிசுப்பொருளுடன் வீட்டுக்குள் நுழைந்த அவன் யோசித்தான்.

“ஃப்ப்ரெடிக்கு நான் என்ன கொடுக்கறது? அவளுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?”

அப்போதுதான் உண்டியல் ஞாபகம் அவனுக்கு வந்தது.

“ஆனா அது எப்படி முடியும்? எங்கிட்ட காசு இல்லயே? மாமா கிட்ட சொன்னா கண்டிப்பா வாங்கித்தருவாரு. சொல்லிப் பாக்கலாம்”

மாமா அவனுக்கு உண்டியல் வாஞ்கித்தர ஒத்துக்கொண்டார்.

அடுத்த நாள் உண்டியலுடன் மாமா வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் சொன்னார். “முன்னால நானும் உன்னோட அம்மாவும் சேந்து உண்டியல் வாங்கிட்டு ஒரு போட்டி மனப்பான்மையோடதான் அத நிரப்புவோம். யாரோட உண்டியல் முதல்ல ரொம்புது. இதுதான் போட்டி. நிறய தடவை உங்கம்மாதான் ஜெயிக்கும்.

“உண்டியல ரொப்ப காசு கிடைச்சாலும்?” உன்னி கேட்டான்.

“அன்னிக்கு பாக்கெட் மனி கொடுக்க நமக்கு யாரும் இல்ல. அதுவும் தவிர கிராமப்புறம் இல்லயா? லீவு நாள்ல நாங்க விடிகாலையிலயே வயல்ல இறங்கிடுவோம். முந்திரி வெட்டற சீசன்னா அது. தோட்டத்துல இறங்கி முந்திரிப்பழத்தப் பொறுக்குவோம். பத்தோ இருபதோதான் சில சமயத்துலக் கிடைக்கும். அத கடையில கொண்டு போய் விப்போம். கிடைக்கற காச உண்டியல்ல போட்டுவைப்போம். வெய்யில் காலத்துல ரப்பரோட காய் வெடிச்சுச் சிதறி தோட்டம் நிறய ரப்பர் விதையா இருக்கும். அதயும் பொறுக்கி விப்போம். இப்படி கொஞ்சநாள்லயே உண்டியல் ரொம்பிடும். அதுக்குள்ள கோயில் திருவிழா ஆரம்பிச்சுடும்.

உண்டியல உடைச்சு எடுக்கற காச வச்சு நான் நேரா கோயில் மைதானத்துக்குத்தான் போவேன். அங்க திருவிழா வியாபாரத்துக்காக நிறய பேரு சாமான்களோட வருவாங்க. சகலவிதமானதையும் அங்க வாங்கலாம். ஆனா நான் அதெல்லாம் வாங்கவே மாட்டேன்”

“ஏன் ஒன்னும் வாங்கறது இல்ல?”. கேள்வி கேட்கும் பாவனையோடு உன்னி தங்கப்பனைப் பார்த்தான்.


“அங்க சூதாட்டம் மாதிரி ஆடறதுக்குன்னு ஒரு கூட்டம், ஆட்களா வருவாங்க. ஒன்னு வச்சா ரெண்டு. ரெண்டு வச்சா நாலு கிடைக்கும்னு சொல்லித்தான் அவுங்க வர்றவங்க போறவங்கள, தங்களோட பக்கம் இழுப்பாங்க. விளையாட்டு ஆரம்பிக்கறப்ப ரெட்டிப்பு பைசா கிடைக்கும். சில சமயத்துல கையில இருக்கறது எல்லாம் போயிடும். இருந்தாலும் அந்த விளையாட்டுல எனக்கு ஒரு தனி மோகம். ஆனா... உன்னோட அம்மா ஒரு காசக் கூட வீணாக்கமாட்டா. கண்ணுக்கு மை... சாந்து... கை வளையல்... மாலையுமாத்தான் அவ வீட்டுக்குள்ள நுழைவா. ஹூம். அது ஒரு காலம்” பழைய கதைகளைச் சொல்லி முடித்த போது பொழுது சாயும் காலமாகிவிட்டது.

“சாயங்காலமாயிடுச்சே மாமா. உண்டியல நாளைக்குக் கொடுக்கலாமில்லயா?” உன்னி கேட்டான்.

“போதும் போதும். இந்த நேரத்துல உன்னை பங்களா முன்னாலப் பாத்தா அந்தக் கிழவிக்கு பொல்லாத கோபம் வரும்”

ராத்திரி தங்கப்பனிடம் இருந்து இந்திய நாணயங்களைச் சேகரித்து அதையெல்லாம் உண்டியலுக்குள் போட்டு வைத்தான். அது ஃப்ப்ரெடிக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று அவன் நம்பினான். ராத்திரி படுக்கப் போன பிறகும் அவளுக்கு நாளை கொடுக்கப் போகும் உண்டியலைப் பற்றியே அவனுடைய சிந்தனைகள் வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தன.

“விடியறப்பவே போயிடணும். உண்டியலப் பாத்தவுடனே அவளுக்கு ஆச்சரியமா இருக்கும்” இப்படி எதயெதையோ யோசித்துக் கொண்டிருந்த அவனால் அன்றைக்கு ராத்திரி தூங்கவே முடியவில்லை. விடிந்ததும் விடியாததுமாக தேவாலயத்தில் இருந்து மணியோசை முழங்கியபோது அவன் துள்ளி எழுந்தான். பல் தேய்த்து ஆடை மாற்றி கையில் பரிசுப்பொருளுடன் நிம்மி ஆயாவோட வீட்டை நோக்கி நடந்தான்.

நடக்கும் போதுதான் திடீரென்று அவள் அன்றுதான் ஊருக்குத் திரும்பிப் போகிறாள் என்ற விஷயம் அவன் நினைவுக்கு வந்தது. “லண்டனுக்குப் போயிட்டா அவ என்னை மறந்துடுவாளா? மறக்கக்கூடாதுன்னு சொல்லணும்” உண்டியலை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து அவன் வேகமாக நடந்தான்.

வீடு நெருங்கியபோது ஆயாவோட சிவப்புக் கார் சாலையின் வளைவில் திரும்பிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அவனுடைய மனதுக்குள் உயிர் பறிக்கும் ஒரு கொள்ளிக்கட்டை மின்னல் மின்னி மறைந்தது.

அப்புறம் அவனுடைய நடை காருக்குப் பின்னால் ஓடும் ஒரு ஓட்டமாக மாறியது. அவனுக்குப் பின்னால் நிம்மி ஆயாவுடைய பங்களா கேட் பூட்டிக் கிடந்த காட்சி வேகமாக மறைந்து போனது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p27.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License