இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

கண்காட்சி

மலையாளம்: உரூப்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


சிறிதும் முக்கியமில்லாத சில காரியங்களில் மகத்தான சில சம்பவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அப்படி இதுவரை சொல்லவில்லையென்றால், இப்போது அப்படி ஒரு புதுமொழியை உருவாக்க வேண்டும். எங்கள் ஊரில் உண்டான கலைக் கண்காட்சியைப் பற்றி யோசிக்கும்போது இதுதான் என்னுடைய நினைவுக்கு வரும்.

நான்கு முக்கிய நபர்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தார்கள். ஒரு கல்யாண விருந்துக்கு. சாப்பாட்டுக்குக் கொஞ்சம் நேரமானது. அப்போது வக்கீல் குஞ்சு கண்ணன் குருப்புடைய மகன் பாலகங்காதர குருப் ஒரு யோசனையைச் சொன்னார்.

“மிஸ்டர் சங்கரமேனன். எனக்கு ஒரு புது யோசனை”

“உங்களுக்கு எப்பவும் புதுப்புது யோசனைங்கதானேத் தோணும்?” சங்கரமேனன் சொன்னார்.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க”

“நாம ஒரு கண்காட்சி நடத்தினா என்ன? முதல் தரமான ஒரு கலைக்காட்சி. படம் வரையறது, சிற்ப வேலை, சிலை வடிக்கறது, இலக்கியம் இதெல்லாம் ஒன்னாச் சேந்த ஒரு நல்லக் காட்சியா இருக்கணும்”

அதுவரை மாப்பிள்ளை பெண்ணையும் மற்ற எல்லோரையும் மனதால் சபித்துக்கொண்டிருந்த மாதவன் நம்பியார் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்டார்.

“அப்படின்னா குருப் இந்த விஷயத்துல உங்களுக்கோ, எனக்கோ சங்கரமேனனுக்கோ ஏதாச்சும் முன் அனுபவம் இருக்கா? உன்னோட சிற்பம் செய்யற வேலயயும், என்னோட செதுக்கற விஷயத்தயும், மிஸ்ட்டர் மேனனோட ஓவியத்தயும், நம்மோட எழுத்தச்சனோட இலக்கியத்தயும் காட்சிப்படுத்தலாம்னு நீங்க நினைக்கறீங்களா?”

நம்பியார் அதை முழுமைப்படுத்துவதற்கு முன்பே எழுத்தச்சன் துள்ளிக்குதித்து எழுந்திருந்து சொன்னார். “என்னது இலக்கியமா? எனக்கா? எனக்கு இருக்கற ஒரே ஒரு சொத்து சைக்கிள் கம்பெனிதான். அத வேனும்னாலும் தந்துடறேன். எல்லாரும் ஒத்து வந்தீங்கன்னா நான் பாட்டு கூட பாடறேன். ஆனா.. இலக்கியமா? அந்த மாதிரி விஷயங்கள உண்டாக்கறவனப் பாத்தாலே எனக்கு மூனு நாள் தலைவலி வந்துடும்”


குருப் ஒரு பாகவதருடைய கம்பீரத்துடன் உடம்பைக் கொஞ்சம் சரியாக்கி, நாற்காலியுடைய ஒரு கையில் ஒரு பக்கமாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, உறுதியான குரலில் சொன்னார்.

“நாமதான் இதயெல்லாம் ஏற்பாடு செய்யறோம். இன்னொரு பொருளையும் வைக்கணும்”

“என்னது அது?” எல்லோரும் கேட்டார்கள்.

பனை ஓலையா இருக்கனும். அதுவும் பச்சையானதா இருக்கணும். பொதுமக்கள் நம்மளோட கண்காட்சிய பாக்க வர்றப்ப அவுங்கள்ல சில பேருக்கு நாம காட்சிக்கு வைக்கிற கலைப் பொருள்கள்... அத நல்ல விலைக்கு வித்துடலாம்”

எல்லோரும் பெரிதாகச் சிரித்தார்கள். ஆனால் குரூப் உறுதியானவராக இருந்தார்.

அவர் விடுவதாக இல்லை. “உங்களுக்கு எதச் சொன்ன்னாலும் தமாஷ்தான். நாலு காசு கிடைக்கறதுக்குள்ள வழியத்தான் நான் சொல்றேன்”

பணத்தைப்பற்றிய அந்தப் பேச்சு நல்ல ஒரு மயக்க மருந்தாக இருந்தது. பெருங்காயத்தைப் பார்த்த பாம்பைப் போல எல்லாரும் படத்தைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

காதுகளைக் கூர்மையாக்கி குரூப்புக்கு அருகில் போய் உட்கார்ந்தார்கள்.

“சொல்லுங்க சொல்லுங்க”

மிஸ்ட்டர் குரூப் எல்லோரையும் உற்றுநோக்கி ஆராய்ந்தார். முடிவில் தன்னைத்தானே பெருமிதத்தோடு ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். திட்டத்தை வெளிவிட்டார்.

“பக்கத்துல இருக்கற கோயில்ல திருவிழாஆரம்பிக்க இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. பல்லாயிரம் பேர் அங்க வருவாங்க. அங்கதான் நம்ம கண்காட்சிய நாம ஏற்பாடு செய்யணும். அதப் பாக்க ஆளுங்கள நாம தேடிப்போக வேணாம்”

“ஆனா கலைஞருங்கன்னு சொல்லற ஜந்துங்க வேணாமா?”. சங்கரமேனம் குறுக்கிட்டு பேச முயற்சி செய்தார்.

“பொறுங்க” குருப் மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

கலைஞர்களைக் காசு கொடுத்து வாங்கலாம் என்பதுதான் அவருடைய கருத்து.


“இதயெல்லாம் ஒருங்கிணைச்சு செயல்படுத்தற வேலய மேனனும் நம்பியாரும் எழுத்தச்சனும் பாத்துக்கணும்”

கேட்பவர்களைக் கவரும் விதத்தில் குருப் சொல்லி முடித்தபோது, மற்ற மூன்று பேருக்கும் அந்தத் திட்டம் மோசமானது இல்லை என்று தோன்றியது.

விருந்து சாப்பாடு முடிந்து கிளம்பும் போது திட்டத்தின் விவரங்களைப் பற்றி விவாதித்தார்கள்.

“மேனன். ஒவ்வொரு வேலயயும் ஒவ்வொருத்தரு பொறுப்பு எடுத்துக்கணும். நான் சிற்பத்தோட காரியத்த பாத்துக்கறேன். நீங்க?”

பொறுப்புகளை ஏற்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

அந்த வகையில் செதுக்கும் வேலை எழுத்தச்சனுக்கும், இலக்கியம் நம்பியாருக்கும், ஓவியம் மேனனுடைய பொறுப்பிலும் விடப்பட்டன. எல்லோரும் அவரவர்களுடைய மனோ உலகத்தில் பல எண்ணங்களுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். பூ நிலாவைக் கொண்டு வெள்ளித்தூரிகையால் வரைந்த கார்மேகங்கள் எல்லையில்லாத வானத்தில் ஓவியத்தொடர்களை வரைந்து கொண்டு நீண்டு சென்றன.

மேனன் கேட்டார். “ஓவியம் வரையத் தெரிஞ்ச பசங்க யாராச்சும் நம்ம ஊருல இருக்காங்களா?”

“தேடுங்க... கண்டுபிடிக்கலாம்” குருப் தைரியம் கொடுத்தார்.

ஆனால் அவருடைய மனது வேறொன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. “சிற்பியக் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம்” எல்லோரும் அவரவர் வழியில் நடந்து மறைந்தார்கள்.

இப்படி அந்த முயற்சிகள் ஆரம்பித்தன. உற்சாகத்தோடு குருப் அடுத்த நாளே, தன் தேடுதலை ஆரம்பித்தார். அவர் கிராமத்தில் இருந்து கிராமங்களுக்கும், நகரங்களில் இருந்து நகரங்களுக்கும் பயணம் செய்தார். எங்கே சிற்பியைப் பற்றி விசாரிப்பது? என்பது பற்றி ஒரு யோசனையும் இல்லாததால், அவருக்கு அவசியத்துக்கு அதிகமாக பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

கடைசியில் ஒரு நண்பர் மூலம் அவர் ஒரு ஆளைத் தேடிப்பிடித்தார். முகத்துக்குள் மறைந்துபோன கண்களும் ஒட்டிய கன்னங்களும் அகால நரையும் பாதித்த அந்த மனிதன் சிற்பங்களை செதுக்குகிறான். “பாக்கறேன். கொண்டு வாங்க”. அந்த ஆள் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து காட்டினான்.

நரி.. புலி.. செந்நாய் தலைகள்.

“இதுதானா சிற்பம்?” குருப் கேட்டார்.

“ஆமாம். இதெல்லாம் கேட்டுக்கு மேல பொருத்தற சிற்பங்க”

குருப் அதற்கு அப்புறம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

“நாசமாப் போச்சு”

திரும்பி நடந்தார். பல நாட்கள் அவர் காரிலும் குதிரை வண்டியிலும் பயணம் செய்தார்.

சுகபோகமாக இருக்கவேண்டிய அவர் படும் பாட்டைப் பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள்.

“பாருங்க. என்ன ஒரு கலை ஆர்வம்!” அவர் மீண்டும் மீண்டும் முட்டி மோதிக் கொண்டிருந்தார்.

வாசல் திறந்தது.

சூரியன் மறையும் நேர மங்கிய வெளிச்சத்தில் தன்னுடைய குடிசையின் வாசல் திண்ணையில் களிமண்ணில் இருந்து உயிர் பெற்று பிறந்து வந்த ஒரு சிற்பத்திற்கு முன்னால் வயதான அந்தக் கலைஞன் மூழ்கிக் கிடந்தான். அரை நிர்வாண ஆடையுடன் இருந்த அந்த மனிதனுடைய வழுக்கைத் தலையில் இருந்து வியர்வைத்துளிகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன.

குட்டி உரோமங்கள் ஆங்காங்கே முளைத்திருந்த கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தன. அனுபவங்களின் கால்வாய்கள் அந்த முகத்தில் பல அத்தியாயங்களை எழுதி வைத்திருந்தன. குருப்புடைய முகத்துக்கு அந்த முகம் உயர்ந்தது.

பளபளக்கும் இரண்டு கண்கள் “என்ன வேணும்?” என்று கேட்டன.

அந்தப் பேய்க்கோலத்தைப் பார்த்தபோது குருப்புக்கு துச்சமாகத் தோன்றியது. என்றாலும், அவர் அதை வெளிக்காட்டாமல் அந்த ஆளைப் பார்த்தார்.

“உக்காருங்க” ஒரு பலகையை எடுத்துப்போட்டு அந்தக் கிழவன் சொன்னான்.

அழுக்கு புரண்ட அந்தப் பலகை மேல் மூச்சுப்பயிற்சி செய்பவனைப் போல குருப் உட்கார்ந்தார்.

“என்ன வேணும்?” அந்த கிழவன் கேட்டான்.

தான் ஒரு கலை ரசிகன் என்றும், தனக்கு ஒரு சிற்பம் செய்து தரவேண்டும் என்றும் குருப் பதில் சொன்னார்.

“எந்த மாதிரி சிற்பம் வேணும்?”. அந்த கேள்வியுடைய அர்த்தம் அவருக்குப் புரியவில்லை.

அவர் லேசாகப் பதுங்கினார். பிறகு சொன்னார்.

“நல்ல ஒரு சிற்பமா இருக்கணும்”

“எந்த மாதிரி? புராண கதாபாத்திரங்களா? இல்ல..?”

“ஆமாம். அந்த மாதிரிதான் வேணும்”

“இதோ இங்க சிலது இருக்கு... பாருங்க”

உயரம் குறைந்த காவி நிற மண் பூசிய ஒரு திறந்து கிடந்த அறைக்குள் அவரை அந்த சிற்பக்கலைஞன் கூட்டிக்கொண்டு போனான்.

பிறகு நரம்புகள் சுற்றிப்பிணைந்து எலும்பும் தோலுமாக இருந்த கைகளால் ஒரு சிற்பத்தைத் தூக்கி எடுத்துக் காட்டினான்.

“இதோ. இது ஹம்ச தமயந்தி. அந்தப் பக்கமா இருக்கறது ஆசிரமத்துல இருக்கற சகுந்தலா”

குருப் இரண்டையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெளியில் வைத்தார்.

அவற்றின் முகத்தைப் பார்த்தபோது அவருடைய கலை ரசனை ஆச்சரியத்துடன் பொங்கி எழுந்தது. அந்த உயிரோட்டமுடைய நான்கு கண்கள் இரண்டு விசித்திரமான உலகங்களை உருவாக்கியபடி நின்று கொண்டிருந்தன.

“இது ரெண்டுக்கும் என்ன வில தரணும்?” கேட்டார்.

கிழவன் ஒரு பெருமூச்சு விட்டான்.


“ஏதாச்சும் கொடுங்க. இந்த தொழில ஆரம்பிச்சு நாப்பது வருஷமாச்சு. இந்தச் சிற்பங்கள செதுக்கி முப்பது வருஷமாச்சு. இதுக்கு நடுவுல பலரும் இதக் கேட்டாங்க. நான் கொடுக்கல. இன்னிக்கு நான் இத கொடுக்கறேன். எனக்கு ஒரே ஒரு மகள்தான் இருக்கா. தாயில்லாத பொண்ணு. அவளுக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்ல. படுத்த படுக்கையா இருக்கறா. அவளுக்கு மருந்து வாங்க ஒரு சல்லிப்பைசா கூட எங்கிட்ட இல்ல”

தன்னுடைய அதிர்ஷ்ட மணி முழங்குவதாக குருப்புக்கு தோன்றியது.

பரிதாபத்தை வார்த்தைகளில் காட்டினார். பாக்கெட்டுக்குள் கையை விட்டார்.

பத்து ரூபாய்நோட்டை எடுத்தார்.

“இந்தா”

கிழவன் விழித்துப் பார்த்தபடி சொன்னான்.

“முப்பது வருஷத்துக்கு அப்புறம் இந்த சிற்பங்க வீட்ட விட்டுப் போகுது. நான் இத வித்துத் திங்கறேன்” குரல் தழுதழுத்தது.

உள்ளே இருந்து ஒரு இளம் பெண்ணின் முனகல் சத்தம் பெரிதாகக் கேட்டது. அந்த ஆள் திடுக்கிட்டு நிமிர்ந்து நோட்டை வாங்கினான். சிற்பங்களை வண்டியில் ஏற்றி ஒரு மந்தகாச சிரிப்புடன் குருப் கிளம்பினார்.

விலகி விலகிச் செல்லும் அந்த அழகான சிற்பங்களை உற்று பார்த்துக் கொண்டு அந்த கிழட்டு கலைஞன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அந்தக் கண்களில் இருந்து இரத்தம் கண்ணீராக விழுந்தன. குருப் வெற்றி முரசு கொட்டிக்கொண்டு தன் தோழர்கள் வட்டத்திற்கு சென்று சேர்ந்தார்.

அவர்களும் தயாராக இருந்தார்கள்.

“உங்க முயற்சிக்கு இவ்வளவு சீக்கிரமா பலன் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல” எழுத்தச்சன் சொன்னார்.

“பலன் இல்லாமப் போகாதுன்னு எனக்குத் தெரியாதா” குருப் தன் பெருமையைத் தட்டிவிட்டார்.

கண்காட்சி நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு பிரச்சனை.

காட்சிப் பொருட்களை பரிசுகளாக யார் யாருக்கு கொடுக்கவேண்டும் என்று நிச்சயிக்கவேண்டும். யார் யார் ஜட்ஜ்கள்? விஷயம் தெரிந்த நான்கு பேர் வேண்டும். கண்ட ஆட்கள் வரக்கூடாது. நான்கு தலைகளும் ஒன்று சேர்ந்து ஆலோசித்தன. முந்திரி வியாபாரி காசி. நகரத்தில் அவனுக்கு ஒரு மதிப்பு இருந்தது. பழைய ஒரு ஜமீன்தான் நெடுங்காடி. அந்த ஆளும் இருக்கட்டும். தோட்டக்காரன் அவுசேப்பும், பேங்க்கர் நாராயண கினியும் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல தையல் மிஸ் கௌசல்யாவைக் கூப்பிட்டார்கள்.

கண்காட்சி நாள் நெருங்க நெருங்க வேலைகள் மும்முரமாக ஆரம்பித்தன. “முதல் தரமான கண்காட்சி. கலை ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு” - இப்படி பல பலகைகள், விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள்.

எல்லாம் களை கட்டின. மக்களுக்கு நடுவில் அவை பயணம் செய்தன. ஊரில் இது ஒரு புதுமையான சம்பவமாக இருந்தது. ஆட்கள் கூட்டம் கூட்டமாக வந்து கூடினர். தொடக்க விழா சொற்பொழிவுகள் சூடு பிடித்தன. குருப்பும் எழுத்தச்சனும் கலையுடைய முக்கியத்துவம் பற்றி வாய் கிழியப் பேசினார்கள்.

கண்களுக்குப் பின்னால் கண்கள். காதுகளுக்குப் பின்னால் காதுகள். துடிக்கும் இதயங்களுக்குப் பின்னால் துடிக்கும் இதயங்கள். அந்த இரண்டு சிற்பங்கள் முன்வாசலிலேயே இருந்தன. அந்த இடத்துக்கு வரும் பார்வையாளர்களின் கால்கள் அவர்களையும் அறியாமல் அங்கே நின்று போயின.

குருப் ஒவ்வொரு பார்வையாளரிடமும் அந்த சிற்பங்களைப் பற்றி பெரிதாகப் பேசினார். அந்தச் சிற்பங்களை செதுக்கியது யார்? என்று பலரும் பல சமயங்களிலும் விசாரித்தார்கள்.

“அதெல்லாம் எங்களோட பெரிய முயற்சியாக்கும்” குருப் தலையைச் சொறிந்துகொண்டு சொன்னார்.

கண்காட்சி தடபுடலாக நடந்தது. நல்ல வருமானம். நல்ல புகழ்.

பேங்கருக்கு சிற்பங்களைப் பற்றி உயர்வான கருத்து. இலக்கியம் வேண்டிய அளவு இல்லை என்று ஜமீன் சொன்னார். கடைசியில் தோட்டக்காரன் அவுசேப்தான் சமாதானம் செய்தார்.

“எப்படியிருந்தாலும் சில பரிசுகளக் கொடுக்கணும். ஒரு சிற்பத்துக்கான பரிசு. ஒரு ஓவியத்துக்கான பரிசு”

“தையல் வேலைக்குக் கூட ஒரு பரிசு தரணும்” அந்தக் குரல் ஒரு மூலையில் இருந்து வந்தது.

அது தையல் மிஸ்ஸுடையதுதான்.

கடைசியில் எல்லோரும் பேசி முடிவுக்கு வந்தார்கள். பரிசுகள் தீர்மானிக்கப்பட்டன.

சிற்பத்துக்கு ஆயிரத்து நூறு ரூபாய். குருப்புடைய சிறிய முகம் பெரிதாகியது. திருப்தியுடன் வந்திருந்த சிறப்பு விருந்தாளிகள் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடந்தார்கள்.

அந்தப் பாக்கெட்டுகள் பரிசுகளால் கனமாகியிருந்தன.

“அப்படின்னா இந்த சிற்பத்த செதுக்கின ஆளுக்கு ஏதாச்சும் அன்பளிப்பு கொடுக்க வேணாமா?” சுத்தமான மனதுடைய எழுத்தச்சன் கேட்டார்.

“பேசாம இருங்க” குருப் சொன்னார்.

“நாம அவுங்களுக்கு காசு கொடுத்துதானே வாங்கியிருக்கோம். அப்ப அந்தப் பொருளு நமக்குத்தானே சொந்தம்?”

அப்புறம் அதைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.

எல்லோரும் பிரிந்து போனார்கள்.

சூரியனுடைய சாயும் கதிர்கள் அடிவானத்தில் ஊர்ந்து ஊர்ந்து விழுந்து கொண்டிருந்தன. வெளிச்சத்திற்கும் நிழலுக்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் பலவீனமாகி காணாமல் போயின. ஒரு பெருமூச்சு அந்த இடம் முழுவதும் வியாபித்திருந்தது.


திடீரென்று ஒரு ஆள் கூட்டம் எதிரில் வருவதை குருப் பார்த்தார். நான்கு பேர் சேர்ந்து பச்சை ஓலையில் கட்டிப் பொதிந்த ஒரு பிணத்தை தலையில் வைத்து சுமந்துகொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

“ஓ. யாரோ ஒரு கிழவன் டிக்கெட் வாங்கிட்டான்” குருப் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்.

“யாரது?”. அவர் ஒருவனிடம் கேட்டார். அதற்குக் கிடைத்த பதில் அவரை திடுக்கிட வைத்தது.

அந்த சிற்பக்கலைஞனா பாடையில் கிடப்பது! குருப்புடைய நெஞ்சில் ஒரு குளவி கொட்டியது போல இருந்தது.

அந்த ஆள் நிசப்தமாக அறைக்குள் போய் வாசலை மூடிவிட்டு இருந்தார். பழிவாங்கும் தீவிரத்தோடு ஒரு காற்று பல சமயங்களிலும் ஜன்னல்களைத் தள்ளித் திறந்தது.

அப்போதெல்லாம் பச்சை ஓலையில் கட்டிப் பொதிந்த ஒரு பிணம், குருப்புடைய மனதுக்குள் கடந்து போனது. அது அந்த ஆளுடைய நிம்மதியைக் குலைத்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p31.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License