இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

இருபது வருடங்களுக்குப் பிறகு

மலையாளம்: கே. சரஸ்வதி அம்மாள்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


தனக்கு முன்னால் ஒரு பழைய பனை ஓலைப் பாயில் கண்கள் மூடியபடி இருந்த அந்தப் பெண்ணை விக்ரமன் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விலை மதிப்பு மிக்க வேடங்களுடன் இருந்த அவள் தன் கூரை வீட்டில் ஒரு பாயில் இப்படிப் படுத்துக் கிடக்க நேர்ந்ததை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான்.

“முன்பொரு காலத்தில், தான் கண்ட நீண்ட கனவுகளுடைய பசுமை மாறா நினைவுகளின் பலனாகவே இந்த நிலைமை” என்று அவன் கருதினான். முகத்தை நேராகப் பார்க்காமல் அவளைத் தொட்டபோதே அது யாரென்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது. “என்னோட வாழ்க்கையில எவ்வளவு பெரிய பங்கு இவளுக்கு இருக்கு?”. அதை அவன்தான் அவளுக்குக் கொடுத்தான்.

அதில் நஷ்டம் எதுவும் அவளுக்கு ஏற்படவில்லை. ஆனால் அவனுக்கோ அனைத்தும் நஷ்டமானது. அலங்காரத்திற்கு ஒரு குறையும் இல்லை. இன்றும் அன்று போலவே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறாள். அவளுடைய தாடையில் ஒரு சிறிய தழும்பு இருப்பதை அவன் உற்றுப் பார்த்தான். “என்னால்தான் அவளுக்கு அந்தக் காயம்.


அவன் நினைத்துப் பார்த்தான்.

வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த மாந்தோப்பில், தென்னை மரத்தின் மேல் ஏறி மதில் சுவரைப் பிடித்துக் கிடந்து மகள் அந்தப்பக்கம் சாலையில் மதில் சுவர் மீது சாய்ந்து சைக்கிளில் இருக்கும் காதலனைப் பார்ப்பதுண்டு என்று அவளுடைய அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது. அடுத்த நாளே அவள் தண்டிக்கப்பட்டாள். அவளுடைய அப்பா வெளியில் போனவுடன் வேறு ஒரு வழியில் திரும்பிப்போய் அவன் அவளைப் பார்க்கப் பாய்ந்தோடினான்.

சல்லாபத்தில் லயித்துப்போய் நின்ற அவளை காலால் எட்டி உதைத்து அவளுடைய அப்பா இழுத்து தரையில் விழச்செய்தார். அரை மயக்கத்தோடு அவள் கீழே விழுந்தபோது ஆபத்தை உணர்ந்த விக்ரமன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடினான் என்றாலும் மதிலில் இடித்ததால் அவளுடைய தாடை எலும்பு உடைந்த விஷயத்தை விஜயராகவன் அடுத்த நாள் சொன்னபோது அவன் பிரமை பிடித்தவன் போல ஆனான். வெகுநேரம் உட்கார்ந்து துக்கப்பட்டான்.

அன்று பலரும் அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவன் பலருடைய வயிற்றுப் பிழைப்பின் மையமாக இருந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பட்டணத்தில் படிக்கப் போகும் அவளைக் காதலிப்பது ஒரு அபத்தம் என்று அவர்கள் சொன்னார்கள். அபத்தம் மட்டுமில்லை, ஆபத்தானதும் கூட என்பதை அனுபவித்து அறிந்து கொண்டான்.

போதாக்குறைக்கு அந்தக் காதல் மிகத் தனித்தன்மையுடைய காதலாக இருந்தது. அது மூன்று பேர் அடங்கிய காதல். இரண்டு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலித்தார்கள். அவள் இரண்டு பேரையும் தீவிரமாக காதலித்தாள். ஆனால், காதலர்களிடம் போட்டி ஏற்படுவதற்கு பதில் தோழமை அதிகமானது என்றாலும் எதிர்காலத்தைப் பொறுத்தவரை விக்ரமனும் விஜயராகவனும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு இளம் பெண்ணுக்கு ஒரேசமயம் இரண்டு காதலர்கள் இருக்கலாம். இதை உளவியலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரேசமயம் இரண்டு பேர் கணவனாக இருக்க முடியாது. சமூக அறிவியல் இதை ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால், அவர்கள் இரண்டு பேரும் தங்களுக்கு இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இப்படியே காலம் கடந்து இளமையும் அதன் துடிப்பும் மாறும்போது உரிமைக்குரியவளாக ஒருவருக்கு மட்டும் என்று சட்டப்படியும் திறந்த மனதுடனும் சொந்தமாக்கும்போது இன்னொரு ஆள் சந்நியாசியாக வாழ உறுதி பூண்டு ஊரை விட்டேப் போகவேண்டும். இது உடன்படிக்கையின் சாரம். சந்நியாசியாகப் போகும் யோகம் யாருக்கு ஏற்படப்போகிறது என்று அவர்கள் மூவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

அழகான உடற்கட்டையும் குணத்தையும் பெற்றிருந்த விக்கிரமனுக்கு நல்ல ஒரு எதிர்காலம் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள் என்றால் காசு பணமும் குடும்பப் பெருமையும் கொண்டிருந்த விஜயராகவனுக்கு இவையிரண்டும் சாதகமாகஇருந்தது. ஒரு நாள், மூவரும் ஒன்றுசேர்ந்து பார்க்க நேர்ந்த ஒரு வேளையில், தங்களுடைய உடன்படிக்கையைப் பற்றி விக்கிரமன் விலாசினியிடம் சொன்னபோது, அவள் காதுகளைப் பொத்திக் கேட்கக்கூடாததை கேட்டுவிட்ட வேதனையோடு பேசினாள்.

“இத ஒன்னும் எங்கிட்ட சொல்ல வேணாம். நாம இப்படியே இருந்தாலே போதும். யாரும் கல்யாணமே செஞ்சுக்க வேணாம். ஒரு ஆள துக்கத்தோட அலையவிட்டுட்டு மீதி ரெண்டு பேரு எப்படி, இன்பமா இருக்கமுடியும்?”. இந்த விசித்திரமான காதல் கதை மெல்ல மெல்ல வெளியில் வந்தது. அவள் தன் ஆத்மார்த்தமான தோழிகளிடம் இதைப் பற்றி லேசாகக் கோடிட்டுக் காட்டினாள்.


தங்களுடைய கல்விக்கூடத்துக்கு எதிரில் இருந்த பெண்கள் பள்ளிக்கூடத்தில் காரில் இருந்து இறங்கும் அந்த அழகு சுந்தரியை பெருமையோடு இளைஞர்கள் தங்கள் தோழர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். கரடுமுரடான ஆள் என்று பெயரெடுத்த ஒரு உயர் அதிகாரியாக அவளுடைய அப்பா இருந்தார். அதை விடப் பெரிய அதிகாரியும் பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவருமாக விஜயராகவனுடைய அப்பா இருந்தார்.

அவர்கள் இருவருக்கும் வெளிப்படையாகச் சண்டைகள் உருவாயின. பெற்ற குழந்தைகளுக்கு இரண்டு பேரும் பல விதமான தண்டனைகளைக் கொடுத்தார்கள். பட்டினி, பழி வாங்குவது, அடைத்து வைப்பது என்று இப்படி பல தண்டனைகள். தூரத்தில் இருந்த விக்கிரமனுடைய வீட்டுக்காரர்கள் மட்டும் இதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தார்கள்.

அவனைப் பற்றி யோசிப்பதற்கே விலாசினியுடைய அப்பாவின் அந்தஸ்து இடம் கொடுக்கவில்லை. ஆனால், கடைசியில் மிகப்பெரிய தண்டனை அவனுக்குத்தான் கிடைத்தது. ஒருநாள் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும் போது அவளுடைய கார் ஒலியின் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்த அவனுக்குப் பின்னால் வந்த அந்த கார் அவன் மீது ஏறியது.

ஆஸ்பத்திரியில் இருந்து பல நாட்களுக்கு அப்புறம் நிரந்தரமாகக் குணமானபோது விக்கிரமனுக்குப் புரிந்தது. உற்றவர்களாக அதுவரை இருந்தவர்கள் அவனுடைய சொந்தக்காரர்கள் எல்லோரும் அவனைக் கைவிட்டிருந்தார்கள். இடது காலில் கொஞ்சம் பகுதியும் அவனைக் கைவிட்டிருந்தது. பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் சுற்றிக்கொண்டு காருக்கு அடியில் போய் விழுந்த அவனோடு அனுதாபம் ஏற்படவில்லை. மாறாக, எல்லோருக்கும் அருவருப்புதான் ஏற்பட்டது.

ஆபத்தைத் தெரிந்து கொண்டு வந்த வீட்டுக்காரர்கள் உடனேத் திரும்பிப் போய்விட்டார்கள். அவனுடைய தாந்தோன்றித்தனத்தைப் பற்றிக் கேட்டு வெறுப்பு ஏற்பட்டதாலும் அவளுடைய அப்பா மீது இருந்த பயத்தாலும் அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். கையில் ஊன்றுகோலை ஊன்றியபடி ஆஸ்பத்திரியில் இருந்து இறங்கி வந்த விக்கிரமன் தூரத்தில் இருந்தாவது விலாசினியைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

ஆனால், படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி முன்பின் தெரியாத அந்நியமான ஏதோ ஒரு வீட்டுக்கு அவள் அகற்றப்பட்டிருந்தாள். விஜயராகவனைப் பார்ப்பது அவனுடைய அடுத்த முயற்சியாக இருந்தது. அதுவும் நடக்கவில்லை. சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே அவன் சிறைபட்ட நிலையில் இருந்தான். அப்புறம் பல நாட்கள் அலைந்து திரிந்து நடந்தான்.

அவனுக்கு நிராசை ஏற்பட்டது. பெருமையும் சூழ்நிலைக்கேற்றபடி செயல்படும் புத்தியும் வழிகாட்டியதற்கு ஏற்ப புத்தகங்கள் விற்று கிடைத்த சிறிய தொகையோடு அவன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான். லட்சியம் இல்லாமல் பல இடங்களிலும் அலைந்து திரிந்தான். அந்த அலைச்சல் ஒரு சாதுவான விவசாயியுடைய வீட்டில் சென்று முடிந்தபோது விக்கிரமனுடைய சாதியும் மதமும் பெயரும் தேசமும் எல்லாம் அழிந்து போயிருந்தன.

அந்த வீட்டில் சாணம் மெழுகிய தரையில் உட்கார்ந்து, மணி மாளிகைகளை கனவு கண்ட காலங்களைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்தான். முதல்முறையாக வாழ்க்கையில் மீளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்தான். மெலிதான வளையல்கள் இட்ட பூ போல மென்மையான கைகளைப் பிடிக்க அதிர்ஷ்டம் இருந்தும் அவனுக்கு வேலை செய்து செய்து கரடுமுரடான சொரசொரப்பான கைகளோடு கூடிய ஒரு பெண்ணை வாழ்க்கைத்துணையாக ஏற்க வேண்டியதானது.

இருந்தாலும் அவனுடைய இதயம் அவனுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக ஆபத்தில் ஆழ்த்திய பெண்ணின் அருகில் எப்போது பார்த்தாலும் துள்ளிக்குதித்துப் போய்க் கொண்டிருந்தது. அந்த நினைப்பின் தீவிரத்தால் கூட இப்படி நடந்திருக்கலாம். அதனால்தான் இன்று தன்னுடைய வீட்டுக்கு முன்னால் அவளுடைய கார் கவிழ்ந்து சரியான நேரத்தில் தானே உதவ நேரிட்டது என்று அவன் நினைத்தான்.

விலாசினியில் இருந்து நிமிர்த்தி வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடி விக்கிரமன் நான்கு பக்கமும் பார்த்தான். பயனற்றுப் போயிருந்த கார் சாலையில் கிடப்பதை அங்கிருந்தே பார்க்க முடிந்தது. காருக்குப் பக்கத்தில் கறுப்பு கோவணத்தை போட்டுக் கொண்டிருந்த மூன்று பையன்கள். விக்கிரமனுடைய குழந்தைகள். அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் தூரம் தள்ளி தென்னை மர நிழலில் ஓட்டுநர் உட்கார்ந்திருந்தான். விலாசினியுடைய புருஷன் அடிக்கடி சாலையைப் பார்த்துக் கொண்டு வீட்டின் முற்றத்தில் தவிப்பை விட அதிருப்தியை வெளிப்படுத்தும் முகத்தோடு நடந்து கொண்டிருந்தான். சமையலறைத் திண்ணையில் கால்களை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்த விக்கிரமனுடைய மனைவியின் மார்பில் முகம் சேர்த்து விலாசினியுடைய குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

விலாசினியுடைய புருஷன் ஒரு நிமிடம் நடையை நிறுத்திவிட்டுச் சொன்னான். “தந்தி ஆபீஸ் வரை போகறதுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச ஆளு யாராவது கிடைப்பாங்களா?”. அந்தக் கேள்வி விக்கிரமனுடைய மனதை மீண்டும் பழைய காலத்தை நோக்கித் தள்ளிவிட்டது. தெளிவில்லாமல் வடக்கில் இருந்து ஒரு மோட்டார் வண்டியுடைய சத்தம் கேட்க ஆரம்பித்தது.

முற்றத்தில் நின்ற ஆள் அவசரமாக சாலையை நோக்கி நடந்தான். முன்பக்கம் யாருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட விக்கிரமனுடைய மனைவி பக்கத்தில் வந்து குழந்தையை அவனிடம் கொடுத்தாள். விலாசினியுடைய மிருதுவான இருப்பை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மனைவியுடைய கரடுமுரடான தொடுதலில் அவனுக்கு வெறுப்பும் அருவருப்பும் ஏற்பட்டது.

விலாசினியுடைய புருஷன் வேறொரு ஆளோடு திரும்பி வந்தான். குழந்தையுடைய முகத்தைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கிரமன் புது ஆள் வந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு தலை நிமிர்ந்து பார்த்தான். “விதி இப்படியெல்லாம் கூட விளையாடுமா? வந்து நின்ற விஜயராகவனை விக்கிரமன் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். விலாசினியுடைய புருஷன் குழந்தையை விக்கிரமனுடைய கையில் இருந்து வாங்கிக் கொண்டான்.

“குழந்தைய அங்க கொடுங்க. அங்க இருக்கறது என்னோட மனைவிதான் இவங்களப் பரிசோதிக்கறேன்” என்று சொல்லி விஜயராகவன் விலாசினிக்கு பக்கத்தில் முட்டி போட்டு உட்கார்ந்தான். இன்னொரு ஆள் குழந்தையை எடுத்துக் கொண்டு காருக்கு அருகில் போனான். சந்தர்ப்பத்தின் சக்தியால் மீண்டும் இளமைக்கு வழி மாறிச்சென்ற விக்கிரமன் அவனுடைய தோளில் கை வைத்து மெல்லக் கேட்டான். “இங்க கிடக்கறது யாருன்னு புரியுதா?”.

அந்தக் கை தட்டிவிடப்பட்டது. கை பட்ட இடத்தை தடவி சுத்தப்படுத்திய பிறகு டாக்டர் விஜயராகவன் மறுபடியும் தளர்ந்துபோனான். அப்பா அம்மா நிர்ப்பந்தத்தால் விலக்கப்பட்ட மூன்று நிர்மலமான இதயங்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு… முகூர்த்தநேரத்துக்கு மட்டுமாவது அதிர்ஷ்டத்தால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டிய அந்த அதி அபூர்வமான பாக்கியம் அறியப்படாமலும் கொண்டாடப்படாமலும் போய்விட்டதே என்று விக்கிரமன் துக்கப்பட்டான்.


அவன் இன்னும் கொஞ்சதூரம் தள்ளிப்போய் நின்றுகொண்டு, முன்பை விட மெல்லிய குரலில் பக்கத்தில் எங்காவது நின்றுகொண்டிருக்கக்கூடிய மனைவி கேட்காதவண்ணம் சொன்னான். “நான் விக்கிரமன்… பார்த்தா தெரியல இல்லயா?”. டாக்டர் விஜயராகவன் நிமிர்ந்து உட்கார்ந்து விக்கிரமனை அலட்சியமாகப் பார்த்தான். அந்தக் கண்களில் விக்கிரமன் எதிர்பார்த்த கண்ணீருக்கு பதில் முன்பின் தெரியாதது போன்ற பாவமே மேலோங்கியிருந்தது.

வியப்பும் வெறுப்பும் பளிச்சிட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் உலகப் பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டங்களையும் படிப்பையும் பெற்று பிரம்மாண்டமான சம்பளம் வாங்கும் பொதுமக்கள் எல்லோராலும் அறியப்படும் விஜயராகவன் விக்கிரமனை அருவருப்போடும் வெறுப்போடும் பார்த்தான்.

“கிழிந்துபோன ஒற்றை வேட்டியோடும் ஒற்றைக் காலோடும் இருந்த காட்டுப்பயல் பழைய கதையை சொல்லி தன்னுடைய உரிமையைக் கோருகிறானா? அதுவும் சமுதாயம் மதிப்பு மிகுந்தவள் என்று நினைக்கும் ஒரு பெண்ணுடைய பதினேழாவது வயதில் நடந்த காதல் கதையை ஞாபகப்படுத்துகிறானா…? விக்கிரமன் மறுபடியும் ஏதோ சொல்ல ஆரம்பித்த போதே விலாசினி கண் திறந்தாள்.

விக்கிரமன் மூச்சை இழுத்துப் பிடித்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். தன்னுடைய சுய அழிவுக்கு பெரும்பாலும் காரணமான அவள் தன்னை யாரென்று புரிந்து கொள்வாளா? கண்ணீரால் நிரம்பி வழியும் கண்களால் பார்க்கக்கூட முடியாதவளாக அவள் இருப்பாள் என்று அவன் நம்பினான். ஆனால், அவளுடைய கண்கள் அந்த பழங்கால மனிதனுடைய முகத்தில் நிமிட நேரத்திற்கு மேல் தங்கி நிற்கவில்லை.

விஜயராகவனிடம் அவள் கேட்டாள். “குழந்தையோட அப்பா?”.

“இதோ இங்க”. சொல்லியபடி விஜயராகவன் எழுந்தான்.

முற்றிலும் அந்நியனைப் போல இருந்தது அவனுடைய குரலும் பாவமும்.

விக்கிரமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருகாலத்தில் இதயராணியோடு வாழவேண்டிய அன்பு நிறைந்த வாழ்க்கை இப்போது ஆபத்தில் சிக்கிய ஒரு பெண்ணிடம் காட்டும் பரிதாபம் கூட விஜயராகவனுக்கு அவள் மீது தோன்றவில்லை.

விஜயராகவன் முற்றத்திள் இறங்கினான். அவளுடைய கணவனிடம் சொன்னான்.

“நீங்க தாங்கிப் பிடிச்சுகிட்டா போதும், அவுங்கள காருக்குக் கூட்டிட்டுப் போலாம். காயம் ஒன்னும் ரொம்ப மோசமானதா இல்ல”.

விக்கிரமன் அசையாமல் இருந்தான். ஆனால் அவனுடைய கைகள் துடிதுடித்தது.

“அவள கொஞ்சம் தாங்கிப்பிடிச்சு எந்திரிக்கவாச்சும் உதவி செய்யலாம். முன்பொரு காலத்தில் தன்னுடைய கைகளில் இட்டு தாலாட்டு பாடியிருந்த அந்த கல்லூரிப் பெண்ணின் தலையைக் கொஞ்சம் வருடி விடலாம்”. விக்கிரமன் நினைத்துக்கொண்டான்.

வீட்டுக்காரனிடம் நன்றி கூட சொல்லாமல் அவளும் அவளுடைய புருஷனும் கிளம்பிப் போனார்கள்.

அவர்களுக்கு பின்னால் நடக்க ஆரம்பித்த விஜயராகவனைப் பிடித்து நிறுத்தி விக்கிரமன் கேட்டான். “இதுக்கு அப்புறமும் என்னோட தேவை ஏதாச்சும் இருக்கா?”.

“ஒன்னும் வேணாம்”. விஜயராகவன் சொன்னான்.

“முன்னால எங்கேயோ படிச்சுகிட்டு இருந்த காலத்துல விளையாட்டா நடந்ததயெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு அதப் பத்தியே நினைச்சுகிட்டிருக்கற முட்டாள்!

சின்ன வயசுல விளயாட உபயோகிச்ச பொம்மையப் பாத்தாக்கூட உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் இல்லயா?”.

விக்கிரமன் எதுவும் பேசாமல் பேசவும் முடியாமல் எழுந்திருக்கக்கூட திராணி இல்லாமல் தளர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p34.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License