இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

மகாதேவா...!

மலையாளம்: காரூர் நீலகண்டபிள்ளை

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


கோயிலில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. “ஹரஹர மகாதேவா... கைலாசவாசா... காப்பாத்தணும்” வேலு தாத்தா கட்டிலில் இருந்து அவசரமாக எழுந்திருந்து கோயில் இருக்கும் திசையைப் பார்த்துத் திரும்பி நின்று கை கூப்பி பிரார்த்தித்தான்.

சரவெடியோசை.

கட்டிலில் இருந்து சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டான். “நமச்சிவாயா... நமச்சிவாயா...” கொடியேறியதைப் பார்த்துவிட்டு திரும்பி வந்த கோபாலன் மேள தாளத்திற்கேற்ப நடந்து தாத்தாவுக்குப் பக்கத்தில் வந்தான்.

“கொடியேறினதப் பாத்தியா? உண்டியல்ல காசு போட்டியா? கூட்டம் வந்துச்சா?” வயதான வேலு ஒவ்வொன்றாக கேட்டான்.

“லம்போதரந்தான் வந்திருந்தான். பாபு யானை கிட்ட போனான். கீதா வழியெல்லாம் அழுதுக்கிட்டே வந்தா. அவளோட பலூன ஊதிப் பெரிசாக்கலைன்னு ஒரே அழுகை. அதுல ஒரு ஓட்டை”

- இப்படி நடந்ததை ஒன்றுவிடாமல் குழந்தைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கோயிலில் இருந்து கொண்டு வந்த புனித நீரையும், பிரசாதத்தையும் ஈஸ்வரி அப்பாவுக்குக் கொடுத்தாள்.

“கொடியேறறதுக்கு முன்னால வீட்ட புதுப்பிக்கலயே?” வேலு சோகத்தோடு சொன்னான்.

மகள், ‘அப்பா கஞ்சி குடிக்க வர்றியா? வேணும்னே செய்யல”

“நான் சும்மா சொன்னேன். அவ்வளவுதான்”, அவன் சமையலறை வாசலை நோக்கி நடந்தான்.

“யாரயும் குத்தம் சொல்றதுக்காக நான் சொல்லல”

வேலு கஞ்சி குடிப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஈஸ்வரி கேட்டாள். “இன்னும் கொஞ்சம் உப்பு வேணுமா?”

“வேணாம்”

அவள் தொடர்ந்தாள். “சட்னிக்கு காரம் கொஞ்சம் கூட ஆயிடுச்சா?”

“இல்ல”

“மணி பதினொன்னு ஆயிடுச்சில்லயா? இவ்வளவு நேரம் எதுவும் சாப்பிடாம இருந்ததுனால பசி அதிகமாயிருக்கும்”


“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று சொல்லிக் கொண்டே அவன் நிதானமாக கஞ்சி முழுவதையும் குடித்தான்.

தினமும் ஒன்பது மணிக்கு முன்பே அவன் கஞ்சி குடித்து விடுவான். இன்றைக்குக் கோயில் கொடியேற்றம் முடிந்த பிறகு அதைச் செய்யலாம் என்று இருந்தான். அவனுடைய பல செயல்களும் கோயில் காரியங்களோடு பின்னிப் பிணைந்திருந்தன. கோயிலுக்குப் போய் கும்பிட்டுப் புனித நீரை வாஞ்கிக் குடித்துவிட்டுத்தான் அவன் தண்ணீர் கூட குடிப்பான்.

ஒரு வருடமாக அது முடங்கிப் போயிருக்கிறது. கோயில் குளத்தில் தலையை அமிழ்த்தி மூழ்கி குளிக்கவும் கோயிலுக்கு நடந்து போகவும் இனி மேல் அவனால் முடியாது.

கொடியேறினால் அது இறங்குவது வரை குளத்தில் தூண்டில் போட அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். பசு கன்று ஈன்று சுரக்கும் முதல் பாலை சாமிக்கு அபிஷேகம் செய்யக் கொடுக்க வேண்டும்.

தென்னை மரத்தில் காய் வந்தால், முதல் குலையை கொப்பரையாக மாற்றி எண்ணை எடுக்கக் கொடுத்து, கிடைக்கும் எண்ணை மொத்தத்தையும் கோயிலுக்குக் கொடுத்து விடுவான். இதையெல்லாம் அவன் மட்டும் செய்ய மாட்டான். இதே மாதிரி செய்யவேண்டும் என்று மற்றவர்களையும் செய்யச் சொல்லுவான்.

மாதவன் பிள்ளை சாப்பிட வந்தான். அவன் அந்த ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர். வேலுவுடைய மருமகன்.

சாப்பாட்டை போட்டுவிட்டு ஈஸ்வரி வீட்டுக்காரனிடம் சொன்னாள். “கொடியேறறதுக்கு முன்னாலயே வீட்டக் கொஞ்சம் புதுப்பிச்சிருக்கணும்னு அப்பாவுக்கு மனசுல வருத்தம்”.

“மழைக்காலம் இப்பதானே வருது. அதுக்கு முன்னால செஞ்சுடலாம்”

“மழை வர்றதுக்காக இல்ல. கோயில் திருவிழாவுக்கு முன்னால இதயெல்லாம் செஞ்சிடுவாங்க இல்லயா?”

“விழா கோயில்லதானே? நான் சின்னப்பையனா இருந்தப்ப இப்படியெதுவும் செய்யலயே?”

வேலு அவன் அருகில் சென்றான்.

“நீங்க இதப் பத்திப் பேசி சர்ச்சை செய்ய வேணாம். நான் சும்மாதான் சொன்னேன். எப்பவாயிருந்தாலும் கட்டணும். முன்னால செஞ்சிருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்.

கொடியேறறதுக்கு முன்னால வீட்டயும், தோட்டத்தயும் சுத்தப்படுத்தி வைக்கறத நான் நினைச்சுப் பாத்தேன். அவ்வளவுதான்”

“அது நடுவுல வந்த பழக்கம்தானே? இங்க முன்னால திருவிழாவெல்லாம் நடந்தது இல்லயே?” மாதவன் பிள்ளை சொன்னான்.

“முன்னால நடக்காமதான் இருந்திச்சுதான். இது பதிமூனாவது திருவிழா. உங்களுக்கு எல்லாம் அது தெரியும்தானே?”


மாதவன் பிள்ளைக்குத் தெரியும். ஈஸ்வரிக்குத் தெரியும். ஊர்க்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். அது ஆத்தங்கரையை ஒட்டி இருந்தவங்களோட கோயில். வேலுப்பிள்ளையின் சிறுவயதில் ஐந்து ஏக்கர் அளவு இருந்த இடத்தில் நடுவில் திருக்கோயிலும் சுற்றிலும் கட்டுமானங்களும் உண்டாயின. தினம் ஒரு நேரம் பூசை. கோயில் தோட்டத்தில் பத்து பதினைந்து தென்னை மரங்கள். ஒரு குளம். நிறைய இடம் புதர் மண்டி காடு போல கிடந்தது. அங்கே ஒரு இலுப்பையும் காஞ்சரமும் நீயோ நானோ என்பது போல போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து நின்றன. அந்த மரங்களும் காடும் குரங்குகளின் வசம் இருந்தது. வெளியில் கோயிலுக்கு என்று சொந்தமாக ஏழு ஏக்கருக்கும் அதிகமான இடம் இருந்தது. அங்கே தென்னையும் குடப்பனையும் பலாவும் மாமரங்களும். கோயில் சொத்துக்களை மூன்று வருடக் குத்தகைக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. வரும் லாபத்தின் அடிப்படையில்தான் குத்தகைக்கான தொகை நிச்சயிக்கப்படும். அப்புறம் எட்டு ஏக்கர் அளவுக்கு நிலமும் இருந்தது. அதெல்லாமும் கோயில் சொத்துதான்.

அதெல்லாம் குத்தகைக்காரர்கள் வசம் இருந்தது. ஆத்தங்கரைக்காரர்களுடைய நிர்வாகக் கமிட்டிதான் கோயில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டது. மூன்று வருடத்துக்கு ஒரு தடவை மேலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவருக்குச் சம்பளம் கிடையாது. வேறெந்த ஆதாயமும் அனுமதிப்பதில்லை. வேலுப்பிள்ளை ஒரு தடவை மேலாளரானான். முப்பது வருடம் அதே பதவியில் இருந்த பிறகு அவன் தானே விலகினான். தொடர்ந்து அந்தப் பதவிக்குப் போட்டி போட்டுக் கொண்டு சிலர் வந்தார்கள். பதவியின் பெயர் மாற்றப்பட்டது. வேலுப்பிள்ளை ஆரம்பத்தில் இருந்தே எல்லோரையும் கோயில் பக்கம் வரச்செய்யும் அளவுக்கு கவனத்தை ஈர்க்கும் வேலைகளைச் செய்தான். ஓசையும் அசைவுகளும் ஏற்பட்டபோது அடுத்த ஊரில் இருந்துஆட்கள் சாமியைப் பார்க்கக் கோயிலுக்கு வந்தார்கள். வரும்போது அவர்கள் அர்ச்சனை அபிஷேகம் என்று ஏதாவது செய்தார்கள். உண்டியலில் ஒரு நாணயத்தைப் போடுவார்கள். விளக்குக்கு ஊற்ற எண்ணை வாங்கிக் கொடுப்பார்கள்.

வேலுப்பிள்ளை கோயிலைச் சுற்றி மதில் சுவர் கட்டினான். முன்பக்கச் சாலைக்குப் பக்கத்தில் கடைகளைக் கொண்டு வந்தான். வாடகைக்கு விட்டான். கோயில் தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்தான். குத்தகைக்காரர்களிடம் இடைத்தரகர்கள் இல்லாமல், நேராகக் குத்தகைப் பணத்தை வாங்கினான். ஊர்க்காரர்களுக்கு உற்சாகம் பீரிட்டது. அவர்கள் சிறு சிறு நன்கொடைகளைத் தந்தார்கள். ஒரு நேரப்பூசை இரண்டு நேரமானது. சிவராத்திரிக்கு விசேஷ பூசைகள் காவடி ஆட்டம். நித்ய பூசை ஐந்து தடவையானது. கோயிலின் புகழ் அதிகமானது, வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. மாதத்தில் ஒரு தடவை ஊர்க்காரர்கள் கோயிலில் கூடிப் பேசினார்கள். செய்யவேண்டிய வேலைகளையும் செய்தவற்றையும் பற்றிக் கலந்து பேசினார்கள். கூட்டம் நடத்த ஒரு நீண்ட அறையும் கட்டப்பட்டது. சொல்வதற்கு எல்லாம் சுலபம்தான் வேலுப்பிள்ளை கோயிலே கதியென்று முழு நேரமும் கோயிலுக்கு நடையா நடந்தான். துன்பமடைந்தான். வெய்யிலில் அலைந்தான். தூக்கத்தைத் தியாகம் செய்தான். பலருக்கு முன்னால் கை கூப்பி கும்பிட்டு கை நீட்டினான். கடன் தொகை அதிகமானபோது அடுத்தவர்களுடைய முணுமுணுப்புகளைச் சகித்தான்.


“சும்மா சும்மா காசு கேட்டா எங்கேர்ந்து கொடுப்பாங்க” அடிக்கடி அவன் சொல்லுவான். கோயில் ஊருக்கேச் சொந்தமானது. “மதிலுக்கு உள்ளாற ஒரு புல்லப் பறிச்சா கையில இருக்கற தங்க வளையல் ஒன்னும் காணாமப் போயிடாது. விளக்க தேச்சு வச்சா குறைஞ்சு போயிடாது. குளத்த சுத்தப்படுத்தணும்னா எல்லாருக்கும் துன்பமாத்தான் இருக்கும். ஆனால், ரெண்டு நாளைக்குத் துன்பமடைந்தால் அப்புறம் எப்பவும் தண்ணி இருந்துகிட்டே இருக்கும்.” இந்த வேலையில் வேலுப்பிள்ளை முதலில் இறக்கியது அவனுடைய அக்கா பையன் மாதவனைத்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாதவனுக்கு சும்மாயிருக்கும் போது கோயில் எடுபிடி வேலை. கூலியில்லாத வேலை. வேலுப்பிள்ளைக்கு வீட்டு விஷயங்களில் அக்கறையில்லாமல் போனது. மற்றவர்கள் வேலை செய்ய அனுமதிப்பதும் இல்லை. வேலுப்பிள்ளைக்கு அண்ணன், தம்பி இல்லை. அப்பா கொடுத்த நிலம் குத்தகையில் இருந்தது. குடும்பச் சொத்து குறைவாகத்தான் இருந்தது. சின்னம்மாவும் அடுத்தடுத்த தலைமுறைகளும் வீட்டில் கூடவே இருந்தார்கள்.

வேலுப்பிள்ளைக்கு அடுத்தபடியாக குடும்பத்தில் பெரிய ஆண் மகன் மாதவன். வேலுப்பிள்ளை செயலாளரான போது மாதவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். கூடப் படித்த பையன்கள் கோயில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது விளக்கு துடைக்க, புல்லைப் பறிக்க மாதவனுக்கு எப்படி மனது வரும்? மாமாவைப் பார்த்துப் பயந்து அவன் எல்லா வேலைகளையும் செய்தான். ஒரு தடவை அவன் மாமாவிடம் மாட்டிக் கொண்டான். புல் பிடுங்கும் போது அவன் கொஞ்ச நேரம் மற்ற பையன்களுடன் விளையாடினான். வீட்டுக்குப் போன போது மாமா அவனுக்கு கடும் தண்டனையைக் கொடுத்தார். கால் இரண்டையும் சேர்த்து வைத்து, இடது கையை மடக்கி முதுகில் வைத்து, குனிந்து வலது கையுடைய சுண்டு விரலால் தரையைத் தொட்டபடி நிற்க வேண்டும். தண்டனை இதுதான்.

மாதவன் குனிந்து நின்றான். வெளியில் நரம்புகள் உடைவது போல வலி எடுக்க ஆரம்பித்தது. லைல் தசை நார்கள் இழுத்து முறுக்கின கடுகடுவென்று வலி. அவன் அழவில்லை. தன்னையும் ஆயாவையும் பார்த்தபடி நின்றான். எல்லோருக்கும் பெரியவரைப் பார்த்தால் பயம். வேலுப்பிள்ளை அவர்களுடைய ஒரே பாதுகாவலன். வருடத்துக்கு இரண்டு தடவை இருநூறு களம் நெல் வீட்டுக்கு வரும். வீட்டில் சாப்பாட்டுக்கு அது மட்டும்தான் ஒரே ஆதாரம். சின்னம்மாவுக்கு மூச்சு அடைத்தது. “என்ன ஒரு கல்லு மனசு இவனுக்கு! இவனோட மனது கருங்கல்லு போல இருக்கே! இவனோட பையனா இருந்தா இப்படி குஞ்சு நிக்கச் சொல்வானா?” அது எப்படி நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? வேலுப்பிள்ளைக்கு ஆண் குழந்தைகள் இல்லை. மனைவியும் குழந்தைகளும், அவனுடைய மனைவியுடைய அப்பா வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் நெல் போகும்.


மாதவனுக்குத் தண்டனை கொடுத்துவிட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான். மாதவன் ஆயாவை நினைத்துக்கொண்டான். “நீ நேரா நில்லு. அவன் கை கழுவற சத்தம் கேக்கறப்ப நீ குனிஞ்சுக்க... போதும்”. அது நடக்கவில்லை. “ம். போதும் போ சாப்பிடு. இனி மேல சொன்ன பேச்சக் கேளு”. அவன் சொன்னபோது மாதவனால் நிமிர முடியவில்லை. முட்டியை மடக்கி அப்படியே தரையில் உட்கார்ந்தான். கஷ்டப்பட்டு தாங்கிப் பிடித்து எழுந்திருந்தான். ஆரம்பத்தில் வேலுப்பிள்ளை மட்டும்தான் வேலைகளைச் செய்தான். அது அதிகமானபோது கணக்கு எழுதும் வேலை மாதவனுக்கு வந்தது. அவனுடைய படிப்புக்கு அப்புறம் இந்த வேலையும்... கஷ்டப்பட்டான். ஏழாவது வகுப்பில் அவன் இரண்டு தடவை தோற்றுப் போனான். படிக்க நேரம் கிடைக்க வேண்டாமா? கணக்கு எழுத ஒரு ஆளைப் போடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. வேலை அதிகமானதால் சம்பளம் அதிகமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. மாதவன் சிறிதுசிறிதாக அந்தச் சுமையில் இருந்து விடுதலை அடைந்தான்.

கோயிலில் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. யானைகள் நிற்கப் புது இடம். எல்லாம் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள். எதிர்பார்த்ததை விட அதிகப் பணம் செலவானது. நிறைய கடன் வந்தது. தன்னுடைய நிர்வாகத்தால் கோயிலுக்குக் கடன் ஏற்படுவது சரியில்லை என்று வேலுப்பிள்ளை நினைத்தான். கடனைத் தானே ஏற்றுக் கொண்டான். தன் நிலத்தை விற்றுக் கடனை அடைத்தான். குத்தகை வருவாயில் குறைவு ஏற்பட்டது. “பரவாயில்ல. மாதவனுக்கு மாசம் நூத்தி இருபது ரூபா சம்பளம் கிடச்சா? வேலுப்பிள்ளையுடைய நிர்வாகத்தில் எல்லோருக்கும் திருப்தி. அவனுக்கு உற்சாகம் அதிகமானது.

குளத்துக்கு நான்கு பக்கமும் கல் சுவர் கட்டப்பட்டது. கோயில் விழாவின் போது நடக்கும் கச்சேரிக்காக ஒரு சிறிய கட்டிடம். பஜனை செய்யத் தனி மடம். இருபத்தைந்து வருடத்தில் கோயில் முழு நிறைவு பெற்றது. செல்வச் செழுப்புடையதானது. பத்து நாள் திருவிழா ஏற்பாடானது. வேலுப்பிள்ளை முப்பது வருடம் நிர்வகித்தான். கோயிலின் வேர்கள் குடும்பங்களில் உறுதியுடன் ஆழமாக வேரூன்றியது. ஊர்க்காரர்களுக்கு கோயில் காரியம் வீட்டுக்காரியம் போல ஆனது. பலரும் நன்கொடையாகவும் வழிபாட்டுக்காகவும் கோயில் அறக்கட்டளைக்கு நிறையப் பணம் கொடுத்தார்கள்.

வேலுப்பிள்ளைக்கு அவனுடைய அப்பா கொடுத்த சொத்தில் பெரும் பகுதி நிலமும் விற்கப்பட்டுவிட்டது. “ஆனா? இதெல்லாம் ஊதாரித்தனமா செலவழிக்கலயே? இதோட முதல் எல்லாம் கோயில்ல இருக்கு. கோயில் நல்லாயிருந்தா கடவுள் ஆசீர்வதிப்பாரு. கடவுள் ஆசீர்வதிச்சா ஊருக்கே நல்லது நடக்கும். இதோட பலன் என்னோட குழந்தைங்களுக்கும் கிடைக்கும்” - இதுதான் அவனுடைய நம்பிக்கை.

வேலுப்பிள்ளை வீட்டில் இருந்து தன் சொத்துக்களைப் பிரித்து கேட்கவில்லை. “பொண்ணோட வீட்டுக்காரன் இல்லயா மாதவன் பிள்ளை?”, “மாமா. நீங்க எங்க கூடயே தங்கிடுங்க” மாதவன் சொன்னான். அவன் சிறிதாக ஒரு வீட்டைக் கட்டினான். அதை முடிக்க அவனிடம் பணம் இல்லை. வேலுப்பிள்ளையின் வகையாக இருந்த நிலம் விற்று வீடு கட்டுவதில் முடக்கப்பட்டது. தலை சாய்க்க ஒரு இடம் என்ற நிலையில் அந்த இடம் வீடாக மாறியது. சீலிங் போடவில்லை. சுண்ணாம்பு அடிக்கவில்லை. தரை போடப்படவில்லை. சாணம் போட்டு மெழுகிய தரை. ஓலைகளுக்கு நடுவில் இருந்த ஓட்டைகளின் வழியாக மார்கழி மாதத்து பனித்துளிகள் வீட்டுக்குள் வந்து விழும்போது படுத்துக் கிடக்கும் வேலுப்பிள்ளை வீட்டை முழுவதாக கட்டாமல் இருக்கும் மாதவனை நினைத்துக் கொள்வான்.


பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு தடவை சொன்னான். “அந்த பஜனை மடத்துக்கு சீலிங் கட்டணும். பனிக்காலத்துல பனி பெய்யறப்ப அதுக்குள்ள எப்படி எல்லாரும் இருக்க முடியும்?”. கஞ்சியைக் குடிக்கும்போது அந்த முகத்தில் கொஞ்சமும் அதிருப்தி ஏற்படவில்லை. வேலுப்பிள்ளை கோயில் நிர்வாகத்தை விட்டுவிட்டு வந்து எட்டு ஆண்டுகள் ஓடிப் போய்விட்டன. மாதவன் பிள்ளை சாப்பிட்டு முடித்து ஸ்கூலை நோக்கி நடந்தான்.

மகள் அப்பாவுக்கு சாப்பாடு போட்டாள். சாப்பிடுவதற்கு நடுவில் வேலுப்பிள்ளை சொன்னான். “கோயில்ல விழா ஆரம்பிக்கணும்னு முடிவு செஞ்சப்ப வீட்டக் கொஞ்சம் மாத்திக் கட்டணும்னு தோணிச்சு. சாமி வர்ற சமயத்துல வீட்டயும் தோட்டத்தயும் புதுசு போல ஆக்கணும்னு சொன்னேன். சாமியே வராருன்னு நினைச்சு அப்படிச் செய்யணும். வீட்டுக்கு வெள்ளையடிக்கணும். ஓலைய எல்லாம் புதுசா மாத்தி சுத்தமாக்கணும். எல்லாராலும் இதயெல்லாம் செய்ய முடியும். அப்படித்தான் அன்னிக்கு தீர்மானம் போட்டோம். அதெல்லாம் என்னோட ஞாபகத்துக்கு வந்துச்சு. அவ்வளவுதானே தவிர நான் உங்களக் குத்தம் சொல்லணும்னு இதயெல்லாம் சொல்லல...”

“வர்ற வருஷத்துலேந்து குறை வைக்காம எல்லாம் செய்யலாம் அப்பா” “சாமி ஊர்வலமா வர்றப்ப நெல்லு பருப்பு வெத்தல பாக்கு பழம் எல்லாம் வச்சு வரவேக்கணும். அதுக்கெல்லாம் நெல்லு இருக்கா? நெல்லு உண்டாகணும். எல்லாம் உண்டாகும். எல்லாம் நல்லபடியா நடக்கும். நடக்கும். மகாதேவா...!”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p38.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License