இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

எழுத முடியாத கதை

மலையாளம்: சுரேந்திரன் எழுகுன்னா

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


கதை எழுதும் போட்டி ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன. போட்டி நடைபெறும் ஹாலுக்குள் நான் நுழைந்தேன். நரைத்துப் போயிருந்த முடியுடன் இருந்த என்னைப் பார்த்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூட முகம் சுளித்தார்கள்.

முதுமைக்கு அவ்வளவு ஒரு மரியாதை! வேறென்ன சொல்வது? அலட்சியத்துடன் யாரோ ஒரு ஆள் மெதுவாகச் சொன்னான். நான் அதைக் கேட்டாலும், கேட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கதை எழுதக் காகிதமும் பேனாவையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் கொடுத்தார்கள்.

கதை எழுதவேண்டிய தலைப்புக்காக, போட்டிக்கு வந்திருந்தவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். “கொடுக்கப்போற தலைப்பு இந்தக் காலத்தோட பொருந்தற ஏதாவது ஒரு தலைப்பாகத்தான் இருக்கும்” என்னுடைய மனது சொன்னது. அதிகரித்து வரும் போதைப்பொருட்களின் பயன்பாடு, சீதனக் கொடுமைகள், சாதி மத இனப் பாகுபாடு, தீவிரவாதம், தெரு நாய்களின் தாக்குதல் போல பல விஷயங்கள் என்னுடைய மனதிற்குள் ஓடி வந்தன.

கதை எழுதவேண்டிய தலைப்பு அறிவிக்கப்பட்டது. “வாழ்க்கை அனுபவங்கள்” - இதைப் பற்றிதான் எழுதவேண்டும். பரவாயில்லை. இதுவும் நல்ல தலைப்புதான். என்னுடைய எண்பது வருட கால வாழ்க்கை அனுபவங்களைக் காகிதத்திற்குள் கொண்டு வரவேண்டும். ஆனால், எங்கேயிருந்து ஆரம்பிப்பது? வேதனைகளை அள்ளித்தரும் நினைவுகள் மனதிற்குள் ஒவ்வொன்றாக ஓடி வந்தன.

வாழ்வின் கடைசி நாட்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களை மட்டும் எழுதினால் அதுவே நல்ல ஒரு கதையாக மாறும். முதுமையின் அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்றால் அதற்கே ஒரு நாள் வேண்டிவரும். அதைப் பற்றி நினைத்த போது மனதிற்குள் தாங்கமுடியாத ஒரு வலி.

சின்ன வயதின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டும் எழுதினால் அது ஒரு சிறுகதையாக மாறும். அதைப் பற்றி ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சி செய்தேன். தரித்திரத்தின் படுகுழியில் இருந்து உயர்த்தப்பட்டதுதான் என்னுடைய வாழ்க்கை. குழந்தையாக இருக்கும்போதே அப்பா இறந்துபோனார். கூலி வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்த அப்பாவின் மரணம் இடி போல வந்து விழுந்தது.

அப்பா போன பிறகு, அம்மா கூலி வேலை பார்த்துத்தான் வீட்டில் அடுப்பெரிய வைத்தாள். அப்போது ஒரே வேலையைச் செய்தாலும், ஆணுக்குக் கிடைக்கும் கூலியில் பாதி கூட ஒரு பெண்ணுக்குக் கிடைக்கவில்லை. எலும்பு உடைய வேலை செய்தாவது மகனை ஒரு பத்தாவது வரை மட்டுமாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டாள்.

ஆனால் ஏழாவது வரை படிக்கவைக்கவே அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டாள். “எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என்னோட மகனை பத்தாவது வரையாச்சும் படிக்க வைப்பேன். அப்பா செத்த்துப் போனதோட துக்கத்த அவன் அனுபவிக்கக்கூடாது” கூட வேலை பார்த்தவர்களிடம் அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.


“அட முட்டாப் பொண்ணே. வேண்டாத ஆசய எல்லாம் மனசுல வளத்துக்காத. அப்பறம் கடைசியில கண்ணீர் விடவேண்டியிருக்கும்” அவர்களில் பலரும் அம்மாவுக்கு இப்படித்தான் அறிவுரை சொன்னார்கள். நான் உயர்நிலைப் பள்ளி வகுப்புக்கு போன போது அம்மாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒவ்வொரு மாதமும் ஸ்கூல் பீஸ் கொடுக்கவேண்டியது எப்போது என்பது என்னை விட அம்மாவுக்குத்தான் நன்றாகத் தெரியும்.

குறிப்பிட்ட தேதிக்குள் பீஸைக் கொடுக்க அம்மா கூடிய மட்டும் பாடுபட்டாள். சில சமயம் சரியான தேதியில் கொடுக்க முடியாததால் அபராதம் கட்டவேண்டி வந்தது. அது நாலனா. எங்களைப் பொறுத்தவரை அதுவும் சிறிய ஒரு தொகையில்லை. ஆனால் என்ன செய்வது? வேட்டியை எவ்வளவு முறுக்கிக் கட்டினாலும், செய்யவேண்டியதைச் செய்ய முடியாமல் போனால் அப்புறம் என்னதான் செய்வது?

அம்மா கஷ்டப்படுவதைப் பார்த்து என்னுடைய மனது வேதனைப்பட்டது. ஒரு நாள் நான் அம்மாவிடம் கேட்டேன். “அம்மா. நானும் ஏதாச்சும் வேலைக்குப் போகட்டுமா?”. அந்தக் கேள்வி அம்மாவை வெகுவாகப் பாதித்தது. அம்மா என்னைக் கட்டிப்பிடித்து அழுதாள்.

“அம்மா. ஏதாச்சும் சின்னதா ஒரு வேலை செஞ்சா அதனால ஒரு பிரச்சனையும் வராது. படிக்கறதுக்கு உரிய நேரம் பாழாப் போயிடும்னு நினைச்சு நீ கவலப்படாத. என்னால முடியற மட்டும் நான் கஷ்டப்பட்டு நல்லாப் படிப்பேன்”. அம்மா எதிர்ப்பு எதுவும் சொல்லவில்லை. மனதில்லாவிட்டாலும் அம்மா சம்மதம் தெரிவித்தாள்.

எள்ளைப் பொரித்தால் எள் அளவிற்காவது ஆகுமே என்று அம்மா நினைத்திருப்பாள். சாதாரண கூட்டம் வரும் ஒரு ஹோட்டலில் எனக்குச் சிறிய ஒரு வேலை கிடைத்தது. மேசையைச் சுத்தம் செய்வது, எச்சில் பாத்திரங்களைக் கழுவி வைப்பது. காலையில் ஒன்பது மணி வரை வேலை. மாலையில் ஸ்கூல் விட்டு வந்தால் இருட்டும் வரை வேலை.

இரண்டு வேளையும் அங்கே இருந்து சாப்பிடலாம். பல சமயங்களில் அதை நான் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்துதான் சாப்பிடுவேன். அதில் இருந்து கொஞ்சமாவது அம்மா எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நிபந்தனை. “ஏம்ப்பா. ஹோட்டல் வேலை உனக்கு கஷ்டமாயிருக்கா?” அம்மா அடிக்கடி அன்போடு கேட்பாள்.

“இல்ல அம்மா. ஒரு கஷ்டமும் இல்ல” நான் சொல்வேன்.

“ஹோட்டல் முதலாளிக்கு உன்னப் பிடிச்சுருக்கா?” அம்மா விசாரித்தாள்.


அந்தக் கேள்வி என்னைத் தரும சங்கடத்தில் ஆழ்த்தியது. ஹோட்டலுடைய பின்பக்கம் வந்து விழும் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவக் கொஞ்ச நேரம் தாமதமானால் கூட கேட்க சகிக்கமுடியாத மோசமான வார்த்தைகளை அந்த ஆள் சொல்வதுண்டு.

எனக்காக அம்மா வேலை பார்த்துக் கஷ்டப்படும்போது, அந்தக் கெட்ட வார்த்தைகளையும் வசவுகளையும் நான் சகித்துக் கொண்டேன். இந்த உண்மையை மனம் திறந்து சொன்னால் அம்மாவுடைய மனது கஷ்டப்படும். ஆனால் அம்மாவுடைய முகத்துக்கு நேராக எப்படிப் பொய் சொல்வது? கேள்விக்கு பதில் கிடைப்பதற்காக அம்மா என்னுடைய முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பிடிக்கலைன்னா அந்த ஆள் என்ன வேலய விட்டு போன்னு சொல்லியிருக்க மாட்டாரா?”. அந்த பதில் அம்மாவைத் திருப்திப்படுத்தியது. ஒரு நாள் வழியில் வைத்து அம்மா என்னுடைய கணக்கு டீச்சரைப் பார்த்தாள். “டீச்சர். என்னோட மகன் எப்படிப் படிக்கறான்? நல்லா படிக்கறானா?” அம்மா கேட்டாள்.

“ஹும். நானே உங்களப் பாக்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். நல்லா படிக்கற பையந்தான் அவன். ஆனா இப்ப எதனாலயோ படிப்புல கொஞ்சம் பின்னாலதான். பல சமயமும் ஹோம் வொர்க் செய்யாம க்ளாஸுக்கு வரான். இப்படியேப் போனா…?” டீச்சர் அதோடு நிறுத்திக்கொண்டார்.

உறுதியான சில தீர்மானங்களோடுதான் அன்று அம்மா வீட்டுக்கு வந்தாள்.

இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அம்மா இதைப் பற்றிப் பேசினாள். “மகனே. நாளைக்கு ஹோட்டலுக்குப் போறப்ப முதலாளிகிட்ட ஒரு விஷயத்தச் சொல்லணும்”.

“என்ன அம்மா?”

“படிக்கறதுக்கும் எழுதறதுக்கும் நிறய இருக்கறதுனால நாளைலேர்ந்து வேலைக்கு வரலைன்னு சொல்லணும். பத்தாம் க்ளாஸ் முடிச்சதுக்கு அப்புறம் நீ வேலைக்குப் போனாப் போதும்”

அம்மா சொன்னதைக் கேட்டு நான் அசைவற்றிருந்தேன். அம்மா சொல்வதும் சரிதான். சாயங்காலம் ஹோட்டல் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது தளர்ந்து போய்விடுவேன். காலையில் வகுப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. டீச்சர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கண்கள் என்னையும் அறியாமல் மூடிக்கொள்ளும்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்பட்டன. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது அம்மா சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே எனக்குத் தோன்றியது. இப்படி ஹோட்டல் வேலை நின்று போனது. இதோடு அம்மாவுடைய வேலைப்பளு மறுபடி அதிகமானது. நாட்கள் ஓடின.

பீஸ் கொடுக்கவேண்டிய நாள் வந்தது. “மகனே. நாளைக்குப் பீஸ் கொடுக்க வேண்டியக் கடைசி நாள். என்னோட கையில நாலு ரூபாதான் இருக்கு. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் ஆறு ரூபா சம்பாதிக்க முடியல. நாளைக்கு கொடுத்துடறேன்னு டீச்சர்கிட்ட சொல்லு” அம்மா கஷ்டத்தோடு இதை சொன்னாள்.

“டீச்சர்கிட்ட நான் சொல்றேம்மா. நீ சங்கடப்படாத. டீச்சர் ஒத்துப்பாங்க” தெரிந்துகொண்டே அம்மாவிடம் பொய் சொல்ல வேண்டியிருந்தது.

என்னை வகுப்பிற்குள் நுழைய விடமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், உண்மையைச் சொன்னால் அம்மா கஷ்டப்படுவாள். அம்மாவுடைய கண்ணீரைப் பார்க்க எனக்கு சக்தி இல்லை. அதனால் வகுப்பிற்குள் நுழைய விடுவார்கள் என்று பொய் சொன்னேன்.

எதிர்பார்த்தது போலவேதான் நடந்தது. என்னை வகுப்பில் இருந்து வெளியே போகச் சொல்லி விட்டார்கள். அழுது கொண்டே நான் வகுப்பில் இருந்து வெளியில் வந்தேன். வராந்தாவில் நடக்கும்போது பின்னால் டீச்சருடைய குரல். வசவு வார்த்தைகள் என்னுடைய காதில் வந்து விழுந்தன. “பெத்தவங்களுக்கு கள்ளயும் சாராயத்தயும் குடிக்க காசு இருக்கு. பீஸ் கொடுக்க மட்டும் காசு இல்ல”

கஷ்டம் எதுவும் தெரியாமல் ஒரு குற்றச்சாட்டு. என்னைப் பற்றி டீச்சருக்கு ஒன்றும் தெரியாது. சொல்லிக் கொடுக்கும் மாணவர்களுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள அதையெல்லாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யாத டீச்சர். அவர்களை நினைத்து எனக்கு அவமானமாக இருந்தது. காலையிலேயே வீட்டுக்குத் திரும்பிப் போனால் அம்மா கஷ்டப்படுவாள்.

நேரத்தைக் கடத்த என்ன வழி? பக்கத்திலேயே ஒரு வாசகர் சாலை. சாதாரணமான ஒரு வாசகர் சாலை. அங்கேப் போனால் செய்தித்தாள்களைப் படிக்கலாம். நான் அங்கே நடந்தேன். மேசையின் மீது செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சமயம் வாசகர்கள் யாரும் அங்கே இல்லை.

அது நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால் ஸ்கூலுக்குப் போகாமல் வாசகர் சாலையில் இருப்பதைப் பற்றி யாராவது கேட்டால் என்ன செய்வது? எப்படியிருந்தாலும் நிம்மதியாக உட்கார்ந்து படிக்கலாம். “பீஸுக்கு உள்ள காசை அம்மா தர்ற வரைக்கும் என்னோட பள்ளிக்கூடம் வாசகர் சாலையாக இருக்கட்டும்” என்று நான் முடிவு செய்தேன்.

கொஞ்ச நாட்கள் தொடர்ந்து அங்கே போனதால் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. அது ஒரு பல்கலைக்கழகம். ஆம். சர்வ கலைக்கூடம். நல்ல மனிதனை உருவாக்க உதவும் ஆசான்கள் அங்கே இருந்த அலமாரிகளில். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போய்க் கொண்டிருந்தது.


கடின உழைப்பால் அம்மாவுடைய உடல் நலம் மோசமானது. ஒவ்வொரு நோயாக அம்மாவைத் தாக்கியது. கூலி வேலைக்கும் போக முடியாத நிலை ஏற்பட்டது. அம்மாவுடைய நிலைமை மோசமானது. அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். மரணத்தோடு மல்லு கட்டிய நாட்கள்.

துரதிர்ஷ்டம்! என்னுடைய எல்லாமுமாக இருந்த அம்மாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவத்தால் முடியவில்லை. அப்படி நான் முழுக்க முழுக்க அனாதையானேன். என்னுடைய படிப்பு நின்றது. குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துத்தான் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்தேன். கஷ்டங்களுக்கு நடுவிலும் நான் வாசகர் சாலைக்குப் போவதை நிறுத்தவில்லை.

அங்கே இருந்து கிடைத்த அறிவு என்னை ஒரு எழுத்தாளனாக்கியது. புனைப்பெயர்களில் கதைகள் எழுதிய என்னைக் கிராமவாசிகள் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. பிரபலமாவதைக் காட்டிலும் எழுத்தில் இருந்து கிடைத்த துச்சமான வருமானமே அன்று எனக்குப் பெரிதாகப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு திருமணம். இல்லற வாழ்க்கையில் நுழைந்தேன்.

புத்தகங்கள் படிப்பதும் எழுதுவதும் எங்களுடைய இல்லற வாழ்க்கையைப் பாதித்தது. குடும்பச்சண்டைகள் வாடிக்கையாயின. வாழ்வில் ஒரு தடவை கூட வாசகர் சாலைக்குப் போகாத மனைவியிடம் வாசிப்பைப் பற்றிச் சொல்வதால் என்ன புண்ணியம்?

நடு ராத்திரியிலும் விடிகாலையிலும் தூக்கத்தில் இருந்து எழுந்து எழுத முயற்சி செய்தாலும் சண்டை. மனதில் நிம்மதி குலைந்தது. என்னுடைய எழுதுகோல் இயங்காமல் நின்று போனது. இப்படி இருக்கும்போதுதான் ஊரில் வாசகர்சாலையின் ஆண்டு நிறைவு விழா பற்றிய செய்தி என் காதுகளுக்கு எட்டியது.

என்னை அறிவின் உலகத்திற்கு கை பிடித்துக் கூட்டிக்கொண்டு போன வாசகர்சாலையுடைய ஆண்டு நிறைவில் பங்கேற்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இப்படி இங்கே வந்தேன். உடலில் காலம் ஏற்படுத்திய மாற்றங்களால் யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது அம்மாவைப் பற்றி அம்மா பட்ட கஷ்டங்களைப் பற்றி நினைத்து என்னுடைய கண்கள் நிறைந்தன.

“தாத்தா. நேரம் முடியப்போகுது. ஒன்னும் எழுதலயா?”. ஒரு இளம் வயதுப் பையனுடைய குரல் கேட்டுதான் நான் என்னுடைய நினைவுகளில் இருந்து மீண்டு நிஜ உலகிற்கு வந்தேன்.

“இல்லப்பா. நான் எழுதல. என்னால எழுத முடியல” சொல்லியபடி நான் எழுந்திருந்தேன்.

எழுதுவதற்கு ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் எதுவும் எழுதாமல் காகிதங்களைத் திருப்பிக் கொடுக்கும் போது அதில் இரண்டு கண்ணீர்த்துளிகள் விழுந்தன.

என்னை நானாக்கிய அம்மாவுடைய நினைவுகளுக்கு முன்னால் அர்ப்பணம் செய்த எழுத்தின் வடிவங்கள்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p39.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License